திருவாய்மொழி 3-4 புகழுநல்லொருவன்
3-4. புகழுநல்லொருவன்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"புகழும் நல்லொருவன் என்கோ? பொருவில் சீர்ப் பூமி என்கோ?" — உன்னை என்னவென்று சொல்வேன் என்று ஆழ்வார் தடுமாறும் பதிகம். நல்லவன் என்பேனா, பூமி என்பேனா, கடல் என்பேனா, தீ என்பேனா — ஒவ்வொரு சொல்லும் போதாமல் போகிறது. சொல்லின் எல்லையை அடைந்த ஒருவனின் திணறல் இப்பதிகம் முழுதும் ஒலிக்கிறது.
புகழும் நல்லொருவன் என்கோ? பொருவில்சீர்ப் பூமி என்கோ? திகழும் தண்பரவை என்கோ? தீயென்கோ? வாயு என்கோ? நிகழும் ஆகாசம் என்கோ? நீள்சுடர் இரண்டும் என்கோ? இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ? கண்ணனைக் கூவுமாறே
கூவுமாறு அறிய மாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ? மேவுசீர் மாரி என்கோ? விளங்கு தாரகைகள் என்கோ? நாவியல் கலைகள் என்கோ? ஞான நல்லாவி என்கோ? பாவுசீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ணனையே
பங்கயக் கண்ணன் என்கோ? பவளச் செவ்வாயன் என்கோ? அங்கதிர் அடியன் என்கோ? அஞ்சன வண்ணன் என்கோ? ஈர் செங்கதிர் முடியன் என்கோ? திருமறு மார்வன் என்கோ? சங்கு சக்கரத்தன் என்கோ? சாதி மாணிக்கத்தையே
சாதி மாணிக்கம் என்கோ? சவிகோள் பொன் முத்தம் என்கோ? சாதி நல் வயிரம் என்கோ? தவிவில் சீர் விளக்கம் என்கோ? ர் ஆதியஞ்சோதி என்கோ? ஆதியம் புருடன் என்கோ? ஆதுமில் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே
அச்சுதன் அமலன் என்கோ? அடியவர் வினை கெடுக்கும் நச்சுமா மருந்தம் என்கோ? நலங்கடல் அமுதம் என்கோ? அச்சுவைக் கட்டி என்கோ? அறுசுவை அடிசில் என்கோ? நெய்ச்சுவைத்தேறல் என்கோ? கனி என்கோ? பால் என்கேனோ?
பால் என்கோ? நாங்கு வேதப் பயன் என்கோ? சமய நீதி நூல் என்கோ? நுடங்கு கேள்வி இசை என்கோ? இவற்றுள் நல்ல மேல் என்கோ? வினையின் மிக்க பயன் என்கோ? கண்ணன் என்கோ? மால் என்கோ? மாயன் என்கோ? வானவர் ஆதியையே
வானவர் ஆதி என்கோ? வானவர் தெய்வம் என்கோ? வானவர் போகம் என்கோ? வானவர் முற்றும் என்கோ? ர ஊனமில் செல்வம் என்கோ? ஊனமில் சுவர்க்கம் என்கோ? ஊனமில் மோக்கம் என்கோ? ஒளிமணி வண்ணனையே
ஒளிமணி வண்ணன் என்கோ? ஒருவன் என்றேத்த நின்ற நளிர்மதிச் சடையன் என்கோ? நான்முகக் கடவுள் என்கோ? அளிமகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்தவை ஏத்த நின்ற களிமலர்த் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன் தன் மேல் நண்ணி நன்குறைகின்றானை ஞாலம் உண்டுமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறிய மாட்டேன் யாவையும் யவரும் தானே
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி ஆவிசேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே
கூடி வண்டறையும் தண்தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை மாடலர் பொழில் குருகூர் வண்சடகோபன் சொன்ன பாடலோர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் வீடில போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே