திருவாய்மொழி 3-3 ஒழிவில் காலம்
3-3. ஒழிவில் காலம்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்" — இடைவிடாத எல்லாக் காலத்திலும் உடனிருந்து, குறைவற்ற தொண்டு செய்ய வேண்டும் என்று ஆழ்வார் வேண்டும் பதிகம். விடுதலையை அல்ல, நிரந்தரமான தொண்டையே அவர் கேட்கிறார். திருவேங்கடத்தை நோக்கி இவ்வேண்டுதல் வைக்கப்படுகிறது.
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும் சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே
அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம் தெண்ணிறைச் சுனை நீர்த் திருவேங்கடத்து எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே
சோதியாகி எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ? வேதியர் முழு வேதத்தமுதத்தை தீதில் சீர்த் திருவேங்கடத்தானையே
வேங்கடங்கள் மெய்ம்மேல் வினை முற்றவும் தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார் ர வேங்கடத்துறைவார்க்கு நம என்ன லாம் கடமை அது சுமந்தார்கட்கே
சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்றெழும் திருவேங்கடம் நங்கட்கு சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் ர பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி வியுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடித் தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே
வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று எய்த்திளைப்பதன் முன்னம் அடைமினோ பைத்த பாம்பணையான் திருவேங்கடம் மொய்த்த சோலை மொய்பூந்தடம் தாழ்வரே
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ர கேழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே