திருவாய்மொழி 3-1 முடிச்சோதி
3-1. முடிச்சோதி
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?" — முடியின் ஒளியா முகத்தின் ஒளியாக மலர்ந்தது, அடியின் ஒளியா நீ நிற்கும் தாமரையாக மலர்ந்தது என்று ஆழ்வார் வியந்து கேட்கும் பதிகம். ஒவ்வொரு பாசுரமும் ஒரு கேள்வியாகவே அமைந்திருக்கிறது; விடை எதிர்பார்க்கப்படுவதில்லை. கண்டதை விவரிக்க இயலாமல், கேள்வியாகவே வைத்துவிடும் நிலை இது.
முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே
கட்டூரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா கட்டூரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது ஒட்டூரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டூரையாய்ப் புற்கென்றே காட்டூமால் பரஞ்சோதீ!
பரஞ்சோதி! நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி! கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே
மாட்டாதே ஆகிலும் இம்மலர்தலை மாஞாலம் நின் மாட்டாய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க ர மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய்! மாஞாலம் வருந்தாதே?
வருந்தாத அருந்தவத்த மலர் கதிரின் சுடருடம்பாய் வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்! வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?
ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிதில்லை ர போதுவாழ் புனந்துழாய் மூடியினாய்! பூவின் மேல் மாதுவாழ் மார்பினாய்! என் சொல்லி யான் வாழ்த்துவனே?
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய்! கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல்புகழ் மாசூணாதே?
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்! மாசூணா வான்கோலத்து அமரர் கோன் வழிபட்டால் மாசூணா உன பாத மலர்ச்சோதி மழுங்காதே?
மழுங்காத வைந்நுதிய சக்கர நல்வலத்தையாய் தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே ர் மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?
மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே! முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து - அளந்தாய்! பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இஇறையாதல் அறிந்தேத்த விற்றிருத்தல் இது வியப்பே?
வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை சயப்புகழார் பலர் வாழும் தடங்குருகூர் சடகோபன் துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்துள் இப்பத்தும் உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே