Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

3-7. ஐயபுழுதி

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

ஒரு தாய் தன் மகளைப் பற்றிப் பேசும் பதிகம். புழுதி அளைந்த உடலும் மழலைப் பேச்சுமாய் இருந்தவள், சிற்றாடையைச் செம்மையாக உடுக்கவும் அறியாதவள் என்கிறாள். பட்டம் கட்டி, தோடு பெய்து, பாடகமும் சிலம்பும் இட்டு வளர்த்தேன் — ஆனால் இப்போது என்னோடு இருக்க அவள் விரும்பவில்லை என்று வருந்துகிறாள். கண்ணனிடம் மனத்தைப் பறிகொடுத்த மகளின் நிலையை ஆழ்வார் தாயின் குரலில் சொல்கிறார்.

பெரியாழ்வார்‌ திருமொழி 3-7 ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள்‌ இளமை கண்டு நற்றாய்‌ இரங்கும்‌ பாசுரம்‌)

286

ஐய புழுதி உடம்பளைந்து இவள்‌ பேச்சு மலந்தலையாய்‌ செய்ய நூலின்‌ சிற்றாடை செப்பனுடுக்கவும்‌ வல்லளல்லள்‌ கையினில்‌ சிறு தூதையோடு இவள்‌ முற்றில்‌ பிரிந்துமிலள்‌ பையரவணைப்‌ பள்ளியானோடு கைவைத்து இவள்‌ வருமே

287

வாயில்‌ பல்லும்‌ எழுந்தில மயிரும்‌ முடி கூடிற்றில சாய்விலாத குறுந்தலைச்‌ சில பிள்ளைகளோடிணங்கி தீயிணக்கிணங்காடி வந்து இவள்‌ தன்னன்ன செம்மை சொல்லி மாயன்‌ மாமணி வண்ணன்‌ மேல்‌ இவள்‌ மாலுறுகின்றாளே

288

பொங்கு வெண்மணல்‌ கொண்டு சிற்றிலும்‌ முற்றத்திழைக்கலுறில்‌ சங்கு சக்கரம்‌ தண்டு வாள்‌ வில்லுமல்லது இழைக்கலுறாள்‌ கொங்கை இன்னம்‌ குவிந்தெழுந்தில கோவிந்தனோடு இவளை சங்கையாகி என்னுள்ளம்‌ நாள்தொறும்‌ தட்டூளுப்பாகின்றதே

289

ஏழைபேதை ஓர்‌ பாலகன்‌ வந்து என்‌ பெண்மகளை எள்கி தோழிமார்‌ பலர்‌ கொண்டுபோய்ச்‌ செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்‌ ஆழியான்‌ என்னுமாழமோழையில்‌ பாய்ச்சி அகப்படுத்தி மூழையுப்பறியாததென்னும்‌ மூதுரையும்‌ இலளே

290

நாடும்‌ ஊரும்‌ அறியவே போய்‌ நல்ல துழாயலங்கள்‌ சூடி நாரணன்‌ போமிடமெல்லாம்‌ சோதித்துழி தருகின்றாள்‌ கேடு வேண்டுகின்றார்‌ பலருளர்‌ கேசவனோடு இவளை பாடுகாவலிடூமின்‌ என்றென்று பார்‌ தடுமாறினதே

291

பட்டம்‌ கட்டிப்‌ பொற்றோடு பெய்து இவள்‌ பாடகமும்‌ சிலம்பும்‌ இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்‌ பொட்டப்‌ போய்ப்‌ புறப்பட்டு நின்று இவள்‌ பூவைப்‌ பூவண்ணா என்னும்‌ வட்டவார்‌ குழல்‌ மங்கைமீர்‌ இவள்‌ மாலுறுகின்றாளே

292

பேசவும்‌ தரியாத பெண்மையின்‌ பேதையேன்‌ பேதை இவள்‌ கூசமின்றி நின்றார்கள்‌ தம்மெதிர்‌ கோல்‌ கழிந்தான்‌ மூழையாய்‌ கேசவா என்றும்‌ கேடிலீ என்றும்‌ கிஞ்சுக வாய்‌ மொழியாள்‌ வாசவார்‌ குழல்‌ மங்கைமீர்‌ இவள்‌ மாலுறுகின்றாளே

293

காறை பூணும்‌ கண்ணாடி காணும்‌ தன்‌ கையில்‌ வளை குலுக்கும்‌ கூறையுடுக்கும்‌ அயர்க்கும்‌ தன்‌ கொவ்வைச்‌ செவ்வாய்‌ திருத்தும்‌ தேறித்‌ தேறி நின்று ஆயிரம்‌ பேர்த்‌ தேவன்‌ திறம்‌ பிதற்றும்‌ மாறில்‌ மாமணி வண்ணன்‌ மேல்‌ இவள்‌ மாலுறுகின்றாளே

294

கைத்தலத்துள்ள மாடழியக்‌ கண்ணாலங்கள்‌ செய்து இவளை வைத்து வைத்துக்‌ கொண்டு என்ன வாணிபம்‌ நம்மை வடுப்படுத்தும்‌ செய்த்தலை எழுநாற்றுப்‌ போல்‌ அவன்‌ செய்வன செய்து கொள்ள மைத்தட முகில்‌ வண்ணன்‌ பக்கல்‌ வளர விடுமின்களே

295

பெருப்‌ பெருத்த கண்ணாலங்கள்‌ செய்து பேணி நம்‌ இல்லத்துள்ளே இருத்துவான்‌ எண்ணி நாம்‌ இருக்க இவளும்‌ ஒன்றெண்ணுகின்றாள்‌ மருத்துவப்பதம்‌ நீங்கினாள்‌ என்னும்‌ வார்த்தை படூவதன்‌ முன்‌ ஒருப்படுத்திடுமின்‌ இவளை உலகளந்தான்‌ இடைக்கே

296

ஞாலறமுற்றும்‌ உண்டு ஆலிலைத்‌ துயில்‌ நாராயணனுக்கு இவள்‌ மாலதாகி மகிழ்ந்தனள்‌ என்று தாயுரை செய்ததனை கோலமார்‌ பொழில்சூழ்‌ புதுவையர்‌ கோன்‌ விட்டுசித்தன்‌ சொன்ன மாலை பத்தும்‌ வல்லவர்கட்கு இல்லை வரு துயரே