திருவாய்மொழி 2-10 கிளரொளி
2-10. கிளரொளி
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்" — ஒளிரும் இளமை அழிவதற்கு முன்பே சென்று சேருங்கள் என்று அறிவுறுத்தும் பதிகம். மாயோன் மருவிய கோயில்களை — பொழில் சூழ்ந்த திருத்தலங்களை — நாடச் சொல்கிறார். காலம் கடந்துவிடுமுன் செய்யவேண்டியதைச் செய்யுங்கள் என்னும் அவசரம் இதில் ஒலிக்கிறது. இரண்டாம் பத்து இந்த அழைப்புடன் நிறைவடைகிறது.
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில் வளரிளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை தளர்விலர் ஆகில் சார்வது சதிரே
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில் மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை பதியது ஏத்தி எழுவது பயனே 2 அவ்வானவர் இது கோவில் திருவாய்மொழி
பயனல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே! புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை அயல் மலை அடைவது அது கருமமே
கருமவன் பாசம் கழித்துழன்று உய்யவே பெருமலை எடுத்தான் பீடுறை கோயில் ர் வரு மழை தவழும் மாலிருஞ்சோலை திருமலை அதுவே அடைவது திறமே
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது அறமுயலாழிப் படையவன் கோயில் மறுவில் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை புற மலை சாரப் போவது கிறியே
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில் ர மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை நெறிபட அதுவே நினைவது நலமே
நலமென நினைமின் நரகழுந்தாதே நிலமுனம் இடந்தான் நீடுறை கோயில் மலமறு மதி சேர் மாலிருஞ்சோலை வலமுறை எய்தி மருவுதல் வலமே
வலம் செய்து வைகல் வலங் கழியாதே வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது அழக்கொடியட்டான் அமர் பெருங் கோயில் ஈர் மழக் களிற்றினம் சேர் மாலிருஞ்சோலை தொழுக் கருதுவதே துணிவது சூதே
சூதென்று களவும் சூதும் செய்யாதே வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில் மாதுறு மயில் சேர் மாலிருஞ்சோலை போதவிழ் மலையே புகுவது பொருளே
பொருளென்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே