Skip to the text
திருவாய்மொழி

2-9. எம்மாவீடு

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"எம்மா வீட்டுத் திறமும் செப்பம்; நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து" — சிறந்த வீடுபேறு எத்தகையது என்று விளக்கவும் வேண்டாம்; உன் திருவடித் தாமரையை என் தலைமேல் வைத்தால் அதுவே போதும் என்று ஆழ்வார் சொல்லும் பதிகம். மோட்சத்தையே மறுத்து, திருவடித் தொடர்பை மட்டும் கேட்கும் துணிச்சல் இதில் உண்டு. கேட்கும் பொருள் சிறியதாகத் தோன்றினாலும், அதுவே பெரியது.

திருவாய்மொழி 2-9 எம்மாவீடு

2875

எம்மா விட்டுத்‌ திறமும்‌ செப்பம்‌ நின்‌ செம்மா பாதபற்புத்‌ தலை சேர்த்து ஒல்லை கைம்மா துன்பம்‌ கடிந்த பிரானே! அம்மா! அடியேன்‌ வேண்டுவது ஈதே

2876

ஈதே யான்‌ உன்னைக்‌ கொள்வது எஞ்ஞான்றும்‌ என்‌ மைதோய்‌ சோதி மணிவண்ண! எந்தாய்‌! எய்தா நின்‌ கழல்‌ யான்‌ எய்த ஞானக்‌ கைதா காலக்‌ கழிவு செய்யேலே

2877

செய்யேல்‌ தீவினை என்று அருள்‌ செய்யும்‌ என்‌ கையார்‌ சக்கரக்‌ கண்ணபிரானே! ர்‌ ஐயார்‌ கண்டம்‌ அடைக்கிலும்‌ நின்‌ கழல்‌ எய்யாது ஏத்த அருள்‌ செய்‌ எனக்கே

2878

எனக்கே ஆட்செய்‌ எக்காலத்தும்‌ என்று என்‌ மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக எனைக்கொள்ளும்‌ ஈதே எனக்கே கண்ணனை யான்‌ கொள்‌ சிறப்பே

2879

சிறப்பில்‌ வீடு சுவர்க்க நரகம்‌ இறப்பில்‌ எய்துக எய்தற்க யானும்‌ பிறப்பில்‌ பல்பிறவிப்‌ பெருமானை மறப்பொன்றின்றி என்றும்‌ மகிழ்வேனே

2880

மகிழ்கொள்‌ தெய்வம்‌ உலோகம்‌ அலோகம்‌ மகிழ்கொள்‌ சோதி மலர்ந்த அம்மானே! மகிழ்கொள்‌ சிந்தை சொல்‌ செய்கை கொண்டு என்றும்‌ மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே

2881

வாராய்‌ உன்‌ திருப்பாதமலர்க்‌ கீழ்‌ பேராதே யான்‌ வந்து அடையும்படி தாராதாய்‌! உன்னை என்னுள்‌ வைப்பில்‌ என்றும்‌ ஆராதாய்‌! எனக்கு என்றும்‌ எக்காலே

2882

எக்காலத்து எந்தையாய்‌ என்னுள்‌ மன்னில்‌ மற்று சுவர்க்கம்‌ எக்காலத்திலும்‌ யாதொன்றும்‌ வேண்டேன்‌ மிக்கார்‌ வேத விமலர்‌ விழுங்கும்‌ என்‌ அக்காரக்கனியே! உன்னை யானே

2883

யானே என்னை அறியகிலாதே யானே என்தனதே என்றிருந்தேன்‌ யானே நீ என்‌ உடைமையும்‌ நீயே வானே ஏத்தும்‌ எம்‌ வானவர்‌? ஏறே

2884

ஏறேல்‌ ஏழும்‌ வென்று ஏர்கொள்‌ இலங்கையை நீறே செய்த நெடூஞ்சுடர்ச்‌ சோதி ர்‌ தேறேல்‌ என்னை உன்‌ பொன்னடிச்‌ சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும்‌ விடலே

2885

விடலில்‌ சக்கரத்து அண்ணலை மேவல்‌ விடலில்‌ வண்குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ கெடலில்‌ ஆயிரத்துள்‌ இவை பத்தும்‌ கெடலில்‌ வீடு செய்யும்‌ கிளர்வார்க்கே