Skip to the text
திருவாய்மொழி

2-7. கேசவன்தமர்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"கேசவன் தமர் கீழ்மேல் எமர் ஏழெழு பிறப்பும்" — கேசவனுக்கு உரியவர்களானதால், மேல் ஏழு தலைமுறையும் கீழ் ஏழு தலைமுறையும் உய்ந்தன என்று சொல்லும் பதிகம். ஒருவரின் சரணாகதி குடும்பம் முழுவதற்கும் பரவுவதாகக் கருதும் மரபு இங்கே தெளிவாக்கப்படுகிறது. பன்னிரு திருநாமங்களையும் வரிசையாகச் சொல்லும் பதிகம் இது.

திருவாய்மொழி 2-7 கேசவன்தமர்‌

2851

கேசவன்‌ தமர்‌ கீழ்மேல்‌ எமர்‌ ஏழெழு பிறப்பும்‌ மாசதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா! ஈசன்‌ என்‌ கருமாணிக்கம்‌ என்‌ செங்கோலக்‌ கண்ணன்‌ விண்ணோர்‌ நாயகன்‌ எம்பிரான்‌ எம்மான்‌ நாராயணனாலே

2852

நாரணன்‌ முழுவேழுலகுக்கும்‌ நாதன்‌ வேதமயன்‌ காரணம்‌ கிரிசை கருமம்‌ இவை முதல்வன்‌ எந்தை சீரணங்கமரர்‌ பிறர்‌ பலரும்‌ தொழுதேத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்‌ என்‌ மாதவனே

2853

மாதவன்‌ என்றதே கொண்டு என்னை இனி இப்பால்‌ பட்டது யாதவங்களும்‌ சேர்கொடேன்‌ என்று என்னுள்‌ புகுந்திருந்து தீதவம்‌ கெடுக்கும்‌ அமுதம்‌ செந்தாமரைக்கண்‌ குன்றம்‌ கோதவமில்‌ என்‌ கன்னற்கட்டி எம்மான்‌ என்‌ கோவிந்தனே

2854

கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து தேவும்‌ தன்னையும்‌ பாடியாடத்‌ திருத்தி என்னைக்‌ கொண்டு என்‌ பாவந்தன்னையும்‌ பாறக்கைத்து எமர்‌ ஏழெழு பிறப்பும்‌ மேவும்‌ தன்மையமாக்கினான்‌ வல்லன்‌ எம்பிரான்‌ விட்டூவே

2855

விட்டிலங்கு செஞ்சோதித்‌ தாமரை பாதம்‌ கைகள்‌ கண்கள்‌ விட்டிலங்கு கருஞ்சுடர்‌ மலையே திருவுடம்பு விட்டிலங்கு மதியம்‌ சீர்‌ சங்கு சக்கரம்‌ பரிதி விட்டிலங்கு முடியம்மான்‌ மதுசூதனன்‌ தனக்கே

2856

மதுசூதனையன்றி மற்றிலேன்‌ என்று எத்தாலும்‌ கருமம்‌ இன்றி துதி சூழ்ந்த பாடல்கள்‌ பாடியாட நின்று ஊழியூழி தொறும்‌ எதிர்‌ சூழல்‌ புக்கு எனைத்தோர்‌ பிறப்பும்‌ எனக்கே அருள்கள்‌ செய்ய விதி சூழந்ததால்‌ எனக்கேல்‌ அம்மான்‌ திரிவிக்கிரமனையே

2857

திரிவிக்கிரமன்‌ செந்தாமரைக்கண்‌ எம்மான்‌ என்‌ செங்கனிவாய்‌ உருவில்‌ பொலிந்த வெள்ளைப்‌ பளிங்கு நிறத்தனன்‌ என்றென்று பரவிப்‌ பணிந்து பல்லூழியூழி நின்‌ பாத பங்கயமே மருவித்‌ தொழும்‌ மனமே தந்தாய்‌ வல்லை காண்‌ என்‌ வாமனனே

2858

வாமனன்‌ என்‌ மரதக வண்ணன்‌! தாமரைக்‌ கண்ணினன்‌! காமனைப்‌ பயந்தாய்‌! என்றென்று உன்‌ கழல்‌ பாடியே பணிந்து தூமனத்தனனாய்ப்‌ பிறவித்‌ துழதி நீங்க என்னைத்‌ தீமனம்‌ கெடுத்தாய்‌ உனக்கு என்‌ செய்கேன்‌? என்‌ சிரீதரனே!

2859

சிர்‌. இதரன்‌ செய்ய தாமரைக்‌ கண்ணன்‌ என்றென்று இராப்பகல்‌ வாய்‌ வெரீஇ அலமந்து கண்கள்‌ நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து மரீஇய தீவினை மாள இன்பம்‌ வளர வைகல்‌ வைகல்‌ இரீஇ உன்னை என்னுள்‌ வைத்தனை என்‌ இருட்கேசனே!

2860

இருடீ கேசன்‌ எம்பிரான்‌ இலங்கை அரக்கர்‌ குலம்‌ முருடு தீர்த்த பிரான்‌ எம்மான்‌ அமரர்‌ பெம்மான்‌ என்றென்று தெருடியாகில்‌ நெஞ்சே! வணங்கு திண்ணம்‌ அறிஅறிந்து மருடியேலும்‌ விடேல்‌ கண்டாய்‌ நம்பி பற்பநாபனையே 10 நிறத்தன்‌

2861

பற்பநாபன்‌ உயர்வற உயரும்‌ பெருந்திறலோன்‌ எற்பரன்‌ என்னையாக்கிக்‌ கொண்டு எனக்கே தன்னைத்‌ தந்த கற்பகம்‌ என்‌ அமுதம்‌ கார்முகில்‌ போலும்‌ வேங்கட நல்‌ வெற்பன்‌ விசும்போர்‌ பிரான்‌ எந்தை தாமோதரனே

2862

தாமோதரனைத்‌ தனி முதல்வனை ஞாலம்‌ உண்டவனை ஆமோதரமறிய ஒருவர்க்கென்றெ தொழுமவர்கள்‌ தாமோதரன்‌ உருவாகிய சிவற்கும்‌ திசைமுகற்கும்‌ ஆமோதரமறிய? எம்மானை என்‌ ஆழிவண்ணனையே

2863

வண்ண மாமணிச்‌ சோதியை அமரர்‌ தலைமகனை கண்ணனை நெடூுமாலைத்‌ தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ பண்ணிய தமிழ்‌ மாலை ஆயிரத்துள்‌ இவை பன்னிரண்டும்‌ பண்ணில்‌ பன்னிருநாமப்‌ பாட்டு அண்ணல்‌ தாள்‌ அணைவிக்குமே