திருவாய்மொழி 2-6 வைகுந்தா
2-6. வைகுந்தா
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"வைகுந்தா! மணிவண்ணனே! என் பொல்லாத் திருக்குறளா!" — வைகுந்தத்தில் இருப்பவனை "என் குறும்புக்காரக் குள்ளனே" என்று செல்லமாக அழைக்கும் பதிகம். உயர்ந்த பெயருக்கும் அன்பான கிண்டலுக்கும் இடையே ஆழ்வார் தயங்குவதே இல்லை. நாள்தோறும் தன்னுள் நிலைத்திருப்பதற்கு நன்றி சொல்லும் பதிகம் இது.
வைகுந்தா! மணிவண்ணனே! என் பொல்லாத் திருக்குறளா! என்னுள் - மன்னி வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே! ர செய்குந்தா வருந்தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா! உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின் மிக்க ஞான வெள்ளச் சுடர்விளக்காய்த் துளக்கற்று அமுதமாய் எங்கும் பக்கம் நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப் பூமருவு கண்ணி எம்பிரானைப் பொன்மலையை ர் நாமருவி நன்கேத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நாவலர் பாமருவி நிற்கத் தந்த பான்மையே! வள்ளலே!
வள்ளலே! மதுசூதனா! என் மரதக மலையே! உனை நினைந்து எள்கல் தந்த எந்தாய்! உன்னை எங்ஙனம் விடுகேன்? வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாயிப் பாடிக் களித்து உகந்துகந்து உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே
உய்ந்து போந்து என்னுலப்பிலாத வெந்தீவினைகளை நாசம் செய்து - அந்தமில் அடிமை அடைந்தேன் விடூவேனோ? ர் ஐந்து பைந்தலை ஆடரவணை மேலிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய்! உன்னைச் சிந்தை செய்து செய்தே
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமாமொழி இசை பாடியாடி - முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்மார்வம் கீண்ட என் முன்னைக் கோளரியே! முடியாததென் எனக்கே?
முடியாததென் எனக்கேல் இனி? முழுவேழுலகும் உண்டான் உகந்து வந்து அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ்மேல் எழுபிறப்பும் ! பான்மையேய் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே
மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறிலின்பத்திருவெள்ளம் யான் மூழ்கினன் பாறிப்பாறி அசுரர் தம் பல்குழாங்கள் நீறெழ பாய்பறவை ஒன்று ஏறி விற்றிருந்தாய்! உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்!
எந்தாய்! தண்திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்! மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா! கொந்தார் தண்ணண்துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைத்த - மைந்தா! வானேறே! இனி எங்குப் போகின்றதே?
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை - ஆகின்றாய்! உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ? பாகின்ற தொல்புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா! தண்வேங்கடம் மேகின்றாய்! தண்துழாய் விரைநாறு கண்ணியனே!
கண்ணித் தண்ணண்துழாய் முடிக் கமலத்தடம் பெருங்கண்ணனை புகழ் நண்ணித் தென்குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்திசையொடும் பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே