திருவாய்மொழி 2-4 ஆடியாடி
2-4. ஆடியாடி
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"ஆடியாடி அகம் கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி" — ஆடியும் பாடியும் உள்ளம் கரைந்து, கண்ணீர் பெருக, எங்கும் தேடி அலையும் நிலையைச் சொல்லும் பதிகம். சொற்களை இரட்டித்துச் சொல்வதே அத்தேடலின் ஓய்வின்மையை உணர்த்துகிறது. நரசிங்கனைத் தேடி நாடி நாடி அலையும் மனம் இங்கே ஓய்வதே இல்லை.
ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும் நாடி நாடி நரசிங்கா! என்று வாடு வாடும் இவ்வாணுதலே
வாணுதல் இம்மடவரல் உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்! உம்மைக் காண நீர் இரக்கமிலீரே 2.
இரக்க மனத்தோடு எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் ர் இரக்கமெழீர் இதற்கு என் செய்கேன்? அரக்கன் இலங்கை செற்றீருக்கே
இலங்கை செற்றவனே! என்னும் பின்னும் வலங்கொள் புள்ளுயர்த்தாய்! என்னும் உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக் கலங்கிக் கைதொழும் நின்று இவளே
இவள் இராப்பகல் வாய் வெரீஇ தன குவளையொண் கண்ணநீர் கொண்டாள் வண்டு திவளும் தண்ணந்துழாய் கொடர் என தவள வண்ணர் தகவுகளே
தகவுடையவனே! என்னும் பின்னும் மிக விரும்பும் பிரான் என்னும் எனது அகவுயிர்க்கு அமுதே! என்னும் உள்ளம் உக உருகி நின்று உள்ளுளே
உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து என வள்ளலே! கண்ணனே! என்னும் பின்னும் வெள்ளநீர்க் கிடந்தாய் என்னும் என கள்வி தான் பட்ட வஞ்சனையே
வஞ்சனே! என்னும் கைதொழும் தன நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர்! உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே!
பட்ட போது எழுபோதறியாள் விரை மட்டலர் தண்துழாய் என்னும் சுடர் வட்டவாய் நுதி நேமியீர்! நுமது இட்டம் என்கொல் இவ்வேழைக்கே?
ஏழை பேதை இராப்பகல் தன கேழில் ஒண்கண்ணநீர் கொண்டாள் கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர்! இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே
வாட்டமில் புகழ் வாமனனை இசை கூட்டி வண்சடகோபன் சொல் அமை பாட்டோர் ஆயிரத்து இப்பத்தால் அடி சூட்டலாகும் அந்தாமமே