திருவாய்மொழி 2-2 திண்ணன்வீடு
2-2. திண்ணன்வீடு
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"திண்ணன் வீடு முதல் முழுதுமாய், எண்ணின் மீதியன் எம்பெருமான்" — வீடுபேறு முதல் அனைத்துமாய் இருப்பவனும், எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவனும் அவனே என்று அறுதியிடும் பதிகம். மண்ணும் விண்ணும் அனைத்தும் அவனுக்குள் அடங்குவதைச் சொல்கிறார். பிற தெய்வங்களின் இடத்தை மறுக்காமல், அவற்றுக்கும் அப்பால் ஒருவனைச் சுட்டும் தெளிவு இதில் உண்டு.
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் எண்ணின் மீதியன் எம்பெருமான் மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே
ஏபாவம்! பரமே! ஏழுலகும் ஈபாவம் செய்து அருளால் அளிப்பாரார்? மாபாவம் விட அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி ஏறன்றியே
ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து ர மேல்தன்னை மீதிட நிமிர்ந்து மண்கொண்ட மால் தனில் மிக்கும் ஓர் தேவும் உளதே?
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே?
தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே மிகும் தேவும் எப்பொருளும் படைக்க ர் தகும் கோலத் தாமரைக்கண்ணன் எம்மான் மிகும் சோதி மேலறிவார் யவரே?
யவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வின்றித் தன்னுள் ஒடூங்க நின்ற பவர்கொள் ஞான வெள்ளச் சுடர்மூர்த்தி அவர் எம்மாழி அம்பள்ளியாரே
பள்ளியாலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல் வல்வயிற்றுப் பெருமான் உள்ளுளார் அறிவார்? அவன் தன் கள்ளமாய மனக் கருத்தே
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த மாயப்பிரானை அன்றி ஆரே திருத்தித் திண்ணிலை மூவுலகும் தம்முள் இருத்திக் காக்கும் இயல்வினரே
காக்கும் இயல்வினன் கண்ணபெருமான் சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் தெய்வ உலகுகளே
கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ! என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்தேத்துவரே
ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக் கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல் வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன் ஏத்த வல்லவர்க்கு இல்லையோர் ஊனமே