Skip to the text
திருவாய்மொழி

2-1. வாயும்திரை

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

கழிக்கானலில் உறங்காமல் நிற்கும் நாரையை நோக்கித் தலைவி பேசும் பதிகம். "தேவருலகமும் உறங்கினாலும் நீ உறங்குவதில்லையே; உனக்கும் என் நோய் வந்துவிட்டதோ?" என்று கேட்கிறாள். தன் துயரத்தை உலகின் ஒவ்வொரு உயிரிலும் கண்டுகொள்ளும் நிலை இது. பிரிவின் ஆழம் — தான் தனித்திருப்பதை உணரும் அளவுக்கு அல்ல, எல்லாமே தன்னைப் போலத் தெரியும் அளவுக்கு.

திருவாய்மொழி 2-1 வாயும்திரை

2785

வாயும்‌ திரையுகளும்‌ கானல்‌ மடநாராய்‌! ஆயும்‌ அமருலகும்‌ துஞ்சிலும்‌ நீ துஞ்சாயால்‌ நோயும்‌ பயலைமையும்‌ மீதூர எம்மே போல்‌ நீயும்‌ திருமாலால்‌ நெஞ்சம்‌ கோட்பட்டாயே

2786

கோட்பட்ட சிந்தையையாய்க்‌ கூர்வாய அன்றிலே! சேட்பட்ட யாமங்கள்‌ சேராது இரங்குதியால்‌ ஆட்பட்ட எம்மே போல்‌ நீயும்‌ அரவணையான்‌ தாட்பட்ட தண்துழாய்த்‌ தாமம்‌ காமுற்றாயே

2787

காமுற்ற கையறவோடு எல்லே! இராப்பகல்‌ நீழுற்றக்‌ கண்‌ துயிலாய்‌ நெஞ்சுருகி ஏங்குதியால்‌ தீமுற்றத்‌ தென்னிலங்கை ஊட்டினான்‌ தாள்‌ நயந்த யாமுற்றது உற்றாயோ? வாழி கனைகடலே!

2788

கடலும்‌ மலையும்‌ விசும்பும்‌ துழாய்‌ எம்‌ போல்‌ சுடர்கொள்‌ இராப்பகல்‌ துஞ்சாயால்‌ தண்வாடாய்‌! அடல்கொள்‌ படையாழி அம்மானைக்‌ காண்பான்‌ நீ உடலம்‌ நோயுற்றாயோ? ஊழிதோறூழியே

2789

ஊழிதோறூழி உலகுக்கு நீர்‌ கொண்டு தோழியரும்‌ யாழும்‌ போல்‌ நீராய்‌ நெகிழ்கின்ற வாழிய வானமே! நீயும்‌ மதுசூதன்‌ பாழிமையில்‌ பட்டு அவன்கண்‌ பாசத்தால்‌ நைவாயே?

2790

நைவாய எம்மே போல்‌ நாள்மதியே! நீ இந்நாள்‌ மைவான்‌ இருள்‌ அகற்றாய்‌ மாழாந்து தேம்புதியால்‌ ஐவாய்‌ அரவணை மேல்‌ ஆழிப்‌ பெருமானார்‌ மெய்வாசகம்‌ கேட்டு உன்‌ மெய்ந்நீர்மை தோற்றாயே?

2791

தோற்றோம்‌ மடநெஞ்சம்‌ எம்பெருமான்‌ நாரணற்கு எம்‌ ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடூவே வேற்றோர்‌ வகையில்‌ கொடுதாய்‌ எனையூழி மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே!

2792

இருளின்‌ திணிவண்ணம்‌ மாநீர்க்கழியே! போய்‌ மருளுற்று இராப்பகல்‌ துஞ்சிலும்‌ நீ துஞ்சாயால்‌ உருளும்‌ சகடம்‌ உதைத்த பெருமானார்‌ அருளின்‌ பெருநசையால்‌ ஆழாந்து நொந்தாயே?

2793

நொந்தாராக்‌ காதல்‌ நோய்‌ மெல்லாவியுள்‌ உலர்த்த நந்தா விளக்கமே! நீயும்‌ அளியத்தாய்‌ செந்தாமரைத்‌ தடங்கண்‌ செங்கனிவாய்‌ எம்பெருமான்‌ அந்தாமத்தண்துழாய்‌ ஆசையால்‌ வேவாயே?

2794

வேவாரா வேட்கை நோய்‌ மெல்லாவியுள்‌ உலர்த்த ஓவாது இராப்பகல்‌ உன்பாலே வீழ்த்தொழிந்தாய்‌ மாவாய்‌ பிளந்து மருதிடை போய்‌ மண்ணளந்த மூவா முதல்வா! இனி எம்மைச்‌ சோரேலே

2795

சோராத எப்பொருட்கும்‌ ஆதியாம்‌ சோதிக்கே ஆராத காதல்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ ஓராயிரம்‌ சொன்ன அவற்றுள்‌ இவை பத்தும்‌ சோரார்‌ விடார்‌ கண்டீர்‌ வைகுந்தம்‌ திண்ணெனவே