Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

3-6. நாவலம்

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

குழலூதும் பதிகம். "நாவலந்தீவில் வாழும் பெண்களே, ஓர் அற்புதம் கேளுங்கள்" என்று ஆழ்வார் தொடங்குகிறார். திருமால் குழல் ஊதத் தொடங்கியதும் பசுக்களும் பறவைகளும் நீரும் காற்றும் என அனைத்தும் அசைவற்று நிற்கின்றன. கேட்டவர் தம்மையே இழக்கும் அந்த ஓசையின் வலிமையை ஒவ்வொரு பாசுரமும் வெவ்வேறு வகையில் சொல்கிறது.

பெரியாழ்வார்‌ திருமொழி 3-6 நாவலம்‌ (கண்ணன்‌ புல்லாங்குழல்‌ ஊதற்‌ சிறப்பு)

275

நாவலம்‌ பெரிய தீவினில்‌ வாழும்‌ நங்கைமீர்காள்‌ இதோர்‌ அற்புதம்‌ கேளீர்‌ தூவலம்‌ புரியுடைய திருமால்‌ தூய வாயில்‌ குழலோசை வழியே கோவலர்‌ சிறுமியர்‌ இளங்கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்ந்து எங்கும்‌ காவலும்‌ கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே

276

இடவணரை இடத்தோளொடு சாய்த்து இருகை கூடப்‌ புருவம்‌ நெரிந்தேற குடவயிறு படவாய்‌ கடை கூடக்‌ கோவிந்தன்‌ குழல்கொடு ஊதின போது மடமயில்களொடு மான்பிணை போலே மங்கைமார்கள்‌ மலர்க்‌ கூந்தல்‌ அவிழ உடை நெகிழ ஓர்‌ கையால்‌ துகில்‌ பற்றி ஒல்கியோடரிக்கணோட நின்றனரே

277

வானிளவரசு வைகுந்தக்‌ குட்டன்‌ வாசுதேவன்‌ மதுரை மன்னன்‌ நந்த கோன்‌ இளவரசு கோவலர்‌ குட்டன்‌ கோவிந்தன்‌ குழல்கொடு ஊதின போது வானிளம்படியர்‌ வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க்கண்கள்‌ பனிப்ப தேனளவு செறிகூந்தல்‌ அவிழச்‌ சென்னி வேர்ப்பச்‌ செவி சேர்த்து நின்றனரே

278

தேனுகன்‌ பிலம்பன்‌ காளியன்‌ என்னும்‌ தீப்பப்பூடுகள்‌ அடங்க உழக்கி கானகம்படி உலாவி உலாவிக்‌ கருஞ்சிறுக்கன்‌ குழல்‌ ஊதின போது ர்‌ மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியரவர்‌ வெள்கி மயங்கி வானகம்படியில்‌ வாய்‌ திறப்பின்றி ஆடல்‌ பாடலவை மாறினர்‌ தாமே (க)

279

முன்‌ நரசிங்கமதாகி அவுணன்‌ முக்கியத்தை முடிப்பான்‌ மூவுலகில்‌ மன்னரஞ்சும்‌ மதுசூதனன்‌ வாயில்‌ குழலின்‌ ஓசை செவியைப்‌ பற்றி வாங்க நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும்‌ தம்‌ தம்‌ வீணை மறந்து கின்னர மிதுனங்களும்‌ தம்‌ தம்‌ கின்னரம்‌ தொடுகிலோம்‌ என்றனரே

280

செம்பெருந்தடங்கண்ணன்‌ திரள்‌ தோளன்‌ தேவகி சிறுவன்‌ தேவர்கள்‌ சிங்கம்‌ நம்‌ பரமன்‌ இந்நாள்‌ குழல்‌ ஊதக்‌ கேட்டவர்கள்‌ இடருற்றன கேளீர்‌ அம்பரம்‌ திரியும்‌ காந்தப்பரெல்லாம்‌ அமுத கீத வலையால்‌ சுருக்குண்டு நம்‌ பரமன்றென்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே

281

புவியுள்‌ நான்‌ கண்டதோர்‌ அற்புதம்‌ கேளீர்‌ பூணி மேய்க்கும்‌ இளங்கோவலர்‌ கூட்டத்து அவையுள்‌ நாகத்தணையான்‌ குழல்‌ ஊத அமர லோகத்தளவும்‌ சென்றிசைப்ப அவியுணா மறந்து வானவரெல்லாம்‌ ஆயர்பாடி நிறையப்‌ புகுந்து ஈண்டி செவியுணாவின்‌ சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத்‌ தொடர்ந்து என்றும்‌ விடாரே

282

சிறுவிரல்கள்‌ தடவிப்‌ பரிமாறச்‌ செங்கண்‌ கோடச்‌ செய்யவாய்‌ கொப்பளிப்ப குறுவெயர்ப்‌ புருவம்‌ கூடலிப்பக்‌ கோவிந்தன்‌ குழல்கொடு ஊதின போது பறவையின்‌ கணங்கள்‌ கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின்‌ கணங்கள்‌ கால்‌ பரப்பிட்டுக்‌ கவிழ்ந்திறங்கிச்‌ செவியாட்டகில்லாவே

283

திரண்டெழு தழைமழை முகில்‌ வண்ணன்‌ செங்கமல மலர்சூழ்‌ வண்டினம்‌ போலே சுருண்டிருண்ட குழல்‌ தாழ்ந்த முகத்தான்‌ ஊதுகின்ற குழலோசை வழியே மருண்டு மான்‌ கணங்கள்‌ மேய்கை மறந்து மேய்ந்த புல்லும்‌ கடைவாய்‌ வழி சோர இரண்டு பாடும்‌ துலங்காப்‌ புடை பெயரா எழுது சித்திரங்கள்‌ போல நின்றனவே

284

கருங்கண்‌ தோகை மயிற்‌ பீலி அணிந்து கட்டி நன்குடுத்த பீதக ஆடை அருங்கலவுருவின்‌ ஆயர்‌ பெருமான்‌ அவனொருவன்‌ குழலூதின போது மரங்கள்‌ நின்று மது தாரைகள்‌ பாயும்‌ மலர்கள்‌ வீழும்‌ வளர்‌ கொம்புகள்‌ தாழும்‌ இரங்கும்‌ கூம்பும்‌ திருமால்‌ நின்ற நின்ற பக்கம்‌ நோக்கி அவை செய்யும்‌ குணமே

285

குழலிருண்டு சுருண்டேறிய குஞ்சிக்‌ கோவிந்தனுடைய கோமள வாயில்‌ குழல்‌ முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக்‌ கொழித்திழிந்த அமுதப்‌ புனல்‌ தன்னை குழல்‌ முழவம்‌ விளம்பும்‌ புதுவைக்‌ கோன்‌ விட்டுசித்தன்‌ விரித்த தமிழ்‌ வல்லார்‌ குழலை வென்ற குளிர்‌ வாயினராகிச்‌ சாது கோட்டியுள்‌ கொள்ளப்படுவாரே