Skip to the text
திருவாய்மொழி

1-10. பொருமாநீள்படை

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"பொரு மா நீள்படை ஆழி சங்கத்தொடு" — போர்செய்யும் ஆழியும் சங்கும் ஏந்தி, ஏழுலகும் தொழ, ஒரு குறள் மாணியாய் நின்றவனைப் பாடும் பதிகம். ஆயுதங்களின் வலிமையையும் யாசகனின் தாழ்மையையும் ஒரே பாசுரத்தில் வைக்கிறார். முதற்பத்து இந்த முரணின் காட்சியுடன் நிறைவடைகிறது.

திருவாய்மொழி 1-10 பொருமாநீள்படை

2774

பொருமா நீள்படை ஆழி சங்கத்தொடு திருமா நீள்கழல்‌ ஏழுலகும்‌ தொழ ஒருமாணிக்‌ குறளாகி நிமிர்ந்த அக்‌ கருமாணிக்கம்‌ என்‌ கண்ணுளதாகுமே

2775

கண்ணுள்ளே நிற்கும்‌ காதன்மையால்‌ தொழில்‌ எண்ணிலும்‌ வரும்‌ என்‌ இனி வேண்டுவம்‌? ர மண்ணும்‌ நீரும்‌ எரியும்‌ நல்வாயுவும்‌ விண்ணுமாய்‌ விரியும்‌ எம்பிரானையே 2.

2776

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்‌ தம்‌ பிரானை தண்தாமரைக்‌ கண்ணனை கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை எம்பிரானைத்‌ தொழாய்‌ மடநெஞ்சமே!

2777

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப்‌ பெற்றால்‌ என்‌ செய்யோம்‌? இனி என்ன குறைவினம்‌? மைந்தனை மலராள்‌ மணவாளனை துஞ்சும்‌ போதும்‌ விடாது தொடர்‌ கண்டாய்‌

2778

கண்டாயே நெஞ்சே! கருமங்கள்‌ வாய்க்கின்று ஓர்‌ எண்தானும்‌ இன்றியே வந்தியலுமாறு உண்டானை உலகேமும்‌ ஓர்‌ மூவடி கொண்டானை கண்டு கொண்டனை நீயுமே

2779

நீயும்‌ நானும்‌ இந்நேர்‌ நிற்கில்‌ மேல்‌ மற்றோர்‌ நோயும்‌ சார்கொடான்‌ நெஞ்சமே! சொன்னேன்‌ தாயும்‌ தந்தையுமாய்‌ இவ்வுலகினில்‌ வாயும்‌ ஈசன்‌ மணிவண்ணன்‌ எந்தையே

2780

எந்தையே என்றும்‌ எம்பெருமான்‌ என்றும்‌ சிந்தையுள்‌ வைப்பன்‌ சொல்லுவன்‌ பாவியேன்‌ எந்தை! எம்பெருமான்‌! என்று வானவர்‌ சிந்தையுள்‌ வைத்துச்‌ சொல்லும்‌ செல்வனையே

2781

செல்வ நாரணன்‌ என்ற சொல்‌ கேட்டலும்‌ மல்கும்‌ கண்பனி நாடூவன்‌ மாயமே ர்‌ அல்லும்‌ நன்பகலும்‌ இடைவீடின்றி நல்கி என்னை விடான்‌ நம்பி நம்பியே

2782

நம்பியைத்‌ தென்குறுங்குடி நின்ற அச்‌ செம்பொனே திகழும்‌ திருமூர்த்தியை உம்பர்‌ வானவர்‌ ஆதியஞ்சோதியை எம்பிரானை என்‌ சொல்லி மறப்பனோ?

2783

மறப்பும்‌ ஞானமும்‌ நான்‌ ஒன்று உணர்ந்திலன்‌ மறக்கும்‌ என்று செந்தாமரைக்‌ கண்ணொடு மறப்பற என்னுள்ளே மன்னினான்‌ தன்னை மறப்பனோ? இனி யான்‌ என்‌ மணியையே

2784

மணியை வானவர்‌ கண்ணனைத்‌ தன்னதோர்‌ அணியை தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ பணி செய்‌ ஆயிரத்துள்‌ இவை பத்துடன்‌ தணிவிலர்‌ கற்பரேல்‌ கல்வி வாயுமே