திருவாய்மொழி 1-9 இவையுமவையும்
1-9. இவையுமவையும்
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"இவையும் அவையும் உவையும், இவரும் அவரும் உவரும்" — இவை, அவை, உவை என அனைத்தும், இவர், அவர், உவர் என அனைவரும் தன்னுள் அடங்குபவனைச் சொல்லும் பதிகம். சுட்டுப் பெயர்களை மட்டுமே அடுக்கி, விட்டுவைக்கப்பட்ட எதுவும் இல்லை என்பதை ஆழ்வார் நிறுவுகிறார். இலக்கணத்தையே இறையியலாக மாற்றும் அரிய பதிகம் இது.
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் எவையும்! யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே
சூழல் பலபல வல்லான் தொல்லையங்காலத்து உலகை கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே
அருகலிலாய பெருஞ்சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன் பொருசிறைப் புள்ளு வந்தேறும் பூமகளார் தனிக்கேள்வன் ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர் மடமகள் என்றிவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே உடனவை ஒக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான் கடல்மலி மாயப்பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே
ஒக்கலை வைத்து முலைப்பால் உண்ணென்று தந்திட வாங்கி செக்கம் செக அன்று அவள் பால் உயிர் செக உண்ட பெருமான் ர நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சினுளானே
மாயன் என் நெஞ்சினுள்ளன் மற்றும் யவர்க்கும் அஃதே! காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணையானே
தோளிணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர்முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாயுடை அம்மான் ! யவையும் !! அதுவே கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடரொளி மூர்த்தி நாளணைந்தொன்றும் அகலான் என்னுடை நாவினுளானே
நாவினுள் நின்று மலரும் ஞானக்கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே ஈர பூவியல் நால்தடந்தோளன் பொருபடை ஆழி சங்கு ஏந்தும் காவி நன்மேனி கமலக்கண்ணன் என் கண்ணினுளானே
கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளான் காண்பன் அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றியுளானே
நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரைமலர்ப் பாதங்கள் சூடி கற்றைத்துழாய் முடிக் கோலக் கண்ணபிரானைத் தொழுவார் ஒற்றைப்பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும் மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்குக் கண்ணபிராற்கு இச்சையுள் செல்ல உணர்த்தி வண்குருகூர்ச் சடகோபன் இச்சொன்ன ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள்கழல் சென்னி பொருமே