Skip to the text
திருவாய்மொழி

1-7. பிறவித்துயர்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று, துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார்" — பிறவித் துன்பம் நீங்க ஞானத்தில் நிலைத்து ஒளியை அடைபவர்களைச் சொல்லும் பதிகம். அறவனாகிய அவனை அடைவதே அவ்வொளி என்று ஆழ்வார் தெளிவுபடுத்துகிறார். ஞானமும் துறவும் தனித்து நிற்பன அல்ல, ஒருவனை நோக்கிச் செல்வன.

திருவாய்மொழி 1-7 பிறவித்துயர்‌

2741

பிறவித்‌ துயரற ஞானத்துள்‌ நின்று துறவிச்‌ சுடர்‌ விளக்கம்‌ தலைப்பெய்வார்‌ அறவனை ஆழிப்படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே

2742

வைப்பாம்‌ மருந்தாம்‌ அடியரை வல்வினைத்‌ துப்பாம்‌ புலன்‌ ஐந்தும்‌ துஞ்சக்‌ கொடான்‌ அவன்‌ எப்பால்‌ யவர்க்கும்‌! நலத்தால்‌ உயர்ந்துயர்ந்து அப்பால்‌ அவன்‌ எங்கள்‌ ஆயர்‌ கொழுந்தே

2743

ஆயர்‌ கொழுந்தாய்‌ அவரால்‌ புடையுண்ணும்‌ மாயப்‌ பிரானை என்‌ மாணிக்கச்‌ சோதியை தூய அமுதைப்‌ பருகிப்‌ பருகி என்‌ மாயப்‌ பிறவி மயர்வு அறுத்தேனே

2744

மயர்வற என்‌ மனத்தே மன்னினான்‌ தன்னை உயர்வினையே தரும்‌ ஒண்சுடர்க்‌ கற்றையை அயர்வில்‌ அமரர்கள்‌ ஆதிக்‌ கொழுந்தை என்‌ இஇசைவினை என்‌ சொல்லி யான்‌ விடூவேனோ?

2745

விடுவேனோ? என்‌ விளக்கை என்‌ ஆவியை நடூவே வந்து உய்யக்‌ கொள்கின்ற நாதனை தொடூவே செய்து இளவாய்ச்சியர்‌ கண்ணினுள்‌ விடவே செய்து விழிக்கும்‌ பிரானையே

2746

பிரான்‌ பெருநிலம்‌ கீண்டவன்‌ பின்னும்‌ விராய்‌ மலர்த்துழாய்‌ வேய்ந்த முடியன்‌ மராமரம்‌ எய்த மாயவன்‌ என்னுள்‌ இரான்‌ எனில்‌ பின்னை யானொட்டூவேனோ?

2747

யானொட்டி என்னுள்‌ இருத்துவம்‌ என்றிலன்‌ தானொட்டி வந்து என்‌ தனி நெஞ்சை வஞ்சித்து ஊனொட்டி நின்று என்‌ உயிரில்‌ கலந்து இயல்‌ வானொட்டுமோ? இனி என்னை நெகிழ்க்கவே

2748

என்னை நெகிழ்க்கிலும்‌ என்னுடை நல்நெஞ்சன்‌ தன்னை அகல்விக்கத்‌ தானும்‌ கில்லான்‌ இனி பின்னை நெடும்‌ பணைத்‌ தோள்‌ மகிழ்‌ பீடுடை முன்னை அமரர்‌ முழுமுதலானே'

2749

அமரர்‌ முழுமுதல்‌ ஆகிய ஆதியை அமரர்க்கு அழுதீந்த ஆயர்‌ கொழுந்தை அமரவழும்பத்‌ துழாவி என்னாவி அமரத்‌ தழுவிற்று இனி அகலுமோ?

2750

அகலில்‌ அகலும்‌ அணுகில்‌ அணுகும்‌ புகலும்‌ அரியன்‌ பொருவல்லன்‌ எம்மான்‌ நிகரில்‌ அவன்‌ புகழ்‌ பாடி இளைப்பிலம்‌ பகலும்‌ இரவும்‌ படிந்து குடைந்தே

2751

குடைந்து வண்டுண்ணும்‌ துழாய்‌ முடியானை அடைந்த தென்குருகூர்ச்‌ சடகோபன்‌ மிடைந்த சொல்‌ தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்குமே