Skip to the text
திருவாய்மொழி

1-6. பரிவதில்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"பரிவதில் ஈசனைப் பாடி" — குறைவற்ற இறைவனைப் பாடி, விரிவடைய விரும்புவோரே என்று அழைக்கும் பதிகம். தூய நீரால் புரிந்து, பிரிவின்றி வழிபடும் முறையை ஆழ்வார் சொல்கிறார். பாடுவதே வளர்வதற்கான வழி என்னும் கருத்து இங்கே அமைதியாக முன்வைக்கப்படுகிறது.

திருவாய்மொழி 1-6 பரிவதில்‌

2730

பரிவதில்‌ ஈசனைப்‌ பாடி விரிவது மேவலுறுவீர்‌! பிரிவகை இன்றி நன்னீர்‌ தூய்‌ புரிவதுவும்‌ புகை பூவே

2731

மதுவார்‌ தண்ணந்துழாயான்‌ முதுவேத முதல்வனுக்கு ர எதுவேது? என்‌ பணி? என்னாது அதுவே ஆட்செய்யுமீடே

2732

ஈடும்‌ எடுப்புமில்‌ ஈசன்‌ மாடு விடாது என்‌ மனனே பாடும்‌ என்‌ நா அவன்‌ பாடல்‌ ஆடும்‌ என்‌ அங்கம்‌ அணங்கே

2733

அணங்கென ஆடும்‌ எனங்கம்‌ வணங்கி வழிபடும்‌ ஈசன்‌ பிணங்கி அமரர்‌ பிதற்றும்‌ குணங்கெழு கொள்கையினானே

2734

கொள்கை கொளாமை இலாதான்‌ எள்கல்‌ இராகம்‌ இலாதான்‌ விள்கை விள்ளாமை விரும்பி உள்கலந்தார்க்கு ஓர அமுதே

2735

அழுதம்‌ அமரர்கட்கு ஈந்த நிமிர்சுடர்‌ ஆழி நெடுமால்‌ அமுதிலும்‌ ஆற்ற இனியன்‌ நிமிர்திரை நீள்கடலானே

2736

நீள்கடல்‌ சூழ்‌ இலங்கைக்‌ கோன்‌ தோள்கள்‌ தலை துணி செய்தான்‌ தாள்கள்‌ தலையில்‌ வணங்கி நாள்கடலைக்‌ கழிமினே

2737

கழிமின்‌ தொண்டீர்கள்‌! கழித்து தொழுமின்‌ அவனைத்‌ தொழுதால்‌ வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம்‌ தருமே

2738

தரும அரும்‌ பயனாய திருமகளார்‌ தனிக்கேள்வன்‌ பெருமை உடைய பிரானார்‌ இருமை வினை கடிவாரே

2739

கடிவார்‌ தீய வினைகள்‌ நொடுயாரும்‌ அளவைக்கண்‌ கொடுயா அடுபுள்‌ உயர்த்த வடிவார்‌ மாதவனாரே

2740

மாதவன்‌ பால்‌ சடகோபன்‌ தீதவம்‌ இன்றி உரைத்த ர்‌ ஏதமில்‌ ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார்‌ பிறவாரே