Skip to the text
திருவாய்மொழி

1-4. அஞ்சிறைய

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"அஞ்சிறைய மடநாராய்" — அழகிய சிறகுடைய நாரையிடம் தூது அனுப்பும் பதிகம். தலைவியாக நின்று, தன் நிலையை அவனிடம் சொல்லுமாறு பறவையிடம் வேண்டுகிறார். "அளியத்தாய்" — இரங்கத்தக்கவளே — என்று பறவையையே இரக்கத்திற்குரியதாக அழைப்பதில் ஒரு நுட்பம் உண்டு. தன் துயரம் பறவைக்கும் தொற்றிவிட்டதாக அவள் நினைக்கிறாள்.

திருவாய்மொழி 1-4 அஞ்சிறைய

2708

அஞ்சிறைய மடநாராய்‌! அளியத்தாய்‌! நீயும்‌ நின்‌ அஞ்சிறைய சேவலுமாய்‌ ஆவா! என்று எனக்கருளி வெஞ்சிறைப்‌ புள்ளுயர்த்தார்க்கு என்‌ விடு தூதாய்ச்‌ சென்றக்கால்‌ வஞ்சிறையில்‌ அவன்‌ வைக்கில்‌ வைப்புண்டால்‌ என்‌ செய்யுமோ?

2709

என்‌ செய்ய தாமரைக்‌ கண்‌ பெருமானார்க்கு என்‌ தூதாய்‌ என்‌ செய்யும்‌ உரைத்தக்கால்‌? இனக்குயில்காள்‌! நீரலிரே? முன்‌ செய்த முழுவினையால்‌ திருவடிக்‌ கீழ்க்‌ குற்றேவல்‌ முன்‌ செய்ய முயலாதேன்‌ அகல்வதுவோ? விதியினமே

2710

விதியினால்‌ பெடை மணக்கும்‌ மென்னடைய அன்னங்காள்‌! மதியினால்‌ குறள்‌ மாணாய்‌ உலகிரந்த கள்வர்க்கு மதியிலேன்‌ வல்வினையே மாளாதோ? என்று ஒருத்தி மதியெல்லாம்‌!! உள்கலங்கி மயங்குமால்‌ என்னீரே

2711

என்‌ நீர்மை கண்டிரங்கி இது தகாதென்னாத என்‌ நீலமுகில்‌ வண்ணற்கு என்‌ சொல்லி யான்‌ சொல்லுகேனோ? நன்னீர்மை இனியவர்கண்‌ தங்காதென்று ஒருவாய்ச்‌ சொல்‌ நன்னீலமகன்றில்காள்‌! நல்குதிரோ? நல்கீரோ?

2712

நல்கித்‌ தான்‌ காத்தளிக்கும்‌ பொழில்‌ ஏழும்‌ வினையேற்கே ? குற்றேவல்‌ ! மதியெலாம்‌ நல்கத்‌ தான்‌ ஆகாதோ? நாரணனைக்‌ கண்டக்கால்‌ மல்குநீர்ப்‌ புனற்படப்பை இரைதேர்‌ வண்‌ சிறுகுருகே! மல்குநீர்‌ கண்ணேற்கு ஓர்‌ வாசகம்‌ கொண்டருளாயே

2713

அருளாத நீர்‌ அருளி அவர்‌ ஆவி துவரா மூன்‌ அருளாழிப்‌ புள்கடவீர்‌ அவர்‌ வீதி ஒரு நாள்‌ என்று ர அருளாழி அம்மானைக்‌ கண்டக்கால்‌ இது சொல்லி அருள்‌ ஆழி வரிவண்டே! யாமும்‌ என்‌ பிழைத்தோமே?

2714

என்‌ பிழை கோப்பது போலப்‌ பனிவாடை ஈர்கின்ற!! என்‌ பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு என்‌ பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு என்று ஒருவாய்ச்‌ சொல்‌ என்‌ பிழைக்கும்‌ இளங்கிளியே! யான்‌ வளர்த்த நீயலையே?

2715

நீயலையே? சிறுபூவாய்‌! நெடூுமாலார்க்கு என்‌ தூதாய்‌ நோய்‌ எனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய்‌ சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்‌ நான்‌ இனி உனது வாயலகில்‌ இன்னடிசில்‌ வைப்பாரை நாடாயே

2716

நாடாத மலர்‌ நாடி நாள்‌ தோறும்‌ நாரணன்‌ தன்‌ வாடாத மலரடிக்‌ கீழ்‌ வைக்கவே வகுக்கின்று வீடாடி விற்றிருத்தல்‌ வினையற்றதென்‌ செய்வதோ? ஊடாடு பனிவாடாய்‌! உரைத்தீராய்‌ எனதுடலே

2717

உடலாயுப்‌ பிறப்பு வீடு உயிர்‌ முதலா முற்றுமாய்‌ கடலாழி நீர்‌ தோற்றி அதனுள்ளே கண்‌ வளரும்‌ அடலாழி அம்மானைக்‌ கண்டக்கால்‌ இது சொல்லி விடலாழி மடநெஞ்சே! வினையோம்‌ ஒன்றாமளவே

2718

அளவியன்ற ஏழுலகத்தவர்‌ பெருமான்‌ கண்ணனை வளவயல்‌ சூழ்‌ வண்குருகூர்ச்‌ சடகோபன்‌ வாய்ந்துரைத்த அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள்‌ இப்பத்தின்‌ வளவுரையால்‌ பெறலாகும்‌ வானோங்கு பெருவளமே