அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப் பொட்டத்துற்றி மாரிப் பகை புணர்த்த பொருமா கடல்வண்ணன் பொறுத்த மலை வட்டத் தடங்கண் மடமான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டு குற மகளிர் கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே
3-5. அட்டுக்குவி
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
கோவர்த்தன மலையை ஏந்திய நிகழ்ச்சி. மலைபோல் குவிந்த சோறும், தயிர் வாவியும், நெய் அளறும் படைத்து ஆயர்கள் மலைக்கு விழா எடுக்கிறார்கள். மழையைப் பொழிந்த இந்திரனை எதிர்த்து, செந்தாமரைக் கை விரல் ஐந்தையும் தூணாக்கி, மணித் தோள்களைக் கழியாக்கி மலையைத் தூக்கிப் பிடிக்கிறான். ஊரையும் ஆநிரையையும் ஒரு குடையின் கீழ் காத்த கதை இது.
பெரியாழ்வார் திருமொழி 3-5 அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடூத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)
வழுவொன்றுமிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட மழை வந்து எழுநாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை இழவு தரியாததோர் ஈற்றுப் பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவியிடைக் காலிட்டெதிர்ந்து பொரும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே
அம்மைத் தடங்கண் மடவாய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரணேன்று கொள்ளென்றிரப்ப இலங்காழிக்கை எந்தை எடுத்த மலை தம்மைச் சரணென்ற தம் பாவையரைப் புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று கொம்மைப்புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே
கடூவாய்ச்சின வெங்கண் களிற்றினுக்குக் கவளமெடுத்துக் கொடுப்பானவன் போல் அடிவாயுறக் கையிட்டு எழப் பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்திறங்கிக் கதுவாய்ப்பட நீர் முகந்தேறி எங்கும் குடவாய்ப்பட நின்று மழை பொழியும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே (க)
வானத்திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல் ஏனத்துருவாகிய ஈசன் எந்தை இடவனெழ வாங்கி எடுத்த மலை கானக் களியானை தன் கொம்பிழந்து கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்து கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே
செப்பாடுடைய திருமால் அவன் தன் செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும் கப்பாக மடுத்து மணி நெடுந்தோள் காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை எப்பாடும் பரந்திழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ குப்பாயமென நின்று காட்சி தரும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே
படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரை தான் அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே
சலமா முகில் பல்கணப் போர்க்களத்துச் சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை இலைவேய் குரம்பைத் தவமா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலைவாய்ச்சின வேங்கைகள் நின்றுறங்கும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே
வன்பேய் முலையுண்டதோர் வாயுடையன் வன் தூணெனன நின்றதோர்வன்பரத்தை தன்பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தடவரை தான் முன்பே வழிகாட்ட முசுக்கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை கொம்பேற்றியிருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே
கொடிுயேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம் முடியேறிய மாமுகிற் பல்கணங்கள் முன்னெற்றி நரைத்தன போல எங்கும் குடியேறியிருந்து மழை பொழியும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே
அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகையூர்தி அவனுடைய குரவிற் கொடிமுல்லைகள் நின்றுறங்கும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடை மேல் திருவிற் பொலி மறை வாணர் புத்தூர்த் திகழ் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் பரவு மன நன்குடைப் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே