திருவாய்மொழி 1-3 பத்துடை
1-3. பத்துடை
நம்மாழ்வார் · திருவாய்மொழி
Essence of this decad
"பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கு அரிய வித்தகன்" — அன்புடையவர்க்கு எளியவனாகவும், மற்றவர்க்கு அரியவனாகவும் இருப்பவனைச் சொல்லும் பதிகம். எளிமையும் அருமையும் அவனுடைய இயல்பில் அல்ல, அணுகுபவரின் நிலையிலேயே இருக்கின்றன. வெண்ணெய் திருடிக் கட்டுண்ட கதையை நினைவுகூர்ந்து அவ்வெளிமையை நிறுவுகிறார்.
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு எத்திறம்! உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பலபிறப்பாய் ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம் தெளிதரும் நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன் அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே
அமைவுடை அறநெறி முழுவதும் உயர்வற உயர்ந்து அமைவுடை முதல் கெடல் ஒடிவிடையற நிலம் அதுவாம் அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் ர பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான் பேரும் ஓர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி உரைத்த கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன் வணக்குடைத் தவநெறி வழி நின்று புறநெறி களைகட்டூு உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே
உணர்ந்துணர்ந்து இழிந்தகன்று உயர்ந்துருவியந்த இந்நிலைமை உணர்ந்துணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள்! உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே
ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை அறுத்து நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே
நாளும் நின்றடு நம பழமை அங்கொடு வினையுடனே மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலங்கழல் வணங்கி மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத்துந்தித் தலத்து எழுதிசைமுகன் படைத்த நல்லுலகமும் தானும் புலப்பட ர பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள இவை அவன் துயக்கே
துயக்கறு மதியில் நல்ஞானத்துள் அமரரைத் துயக்கும் ? உயர்ந்த வணங்கின மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன் புயற்கரு நிறத்தனன் பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் தன்னை அமர்பொழில் வளங்குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் ர் அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே