Skip to the text
திருவாய்மொழி

1-1. உயர்வற உயர்நலம்‌

நம்மாழ்வார் · திருவாய்மொழி

Essence of this decad

"உயர்வற உயர்நலம் உடையவன் யவன்" — திருவாய்மொழியின் தொடக்கம். உயர்வுக்கே உயர்வான நலம் உடையவன் யாரோ, அறியாமை நீங்க அறிவை அருளியவன் யாரோ, அவனுடைய திருவடிகளைத் தொழுது எழு என்று நம்மாழ்வார் தன் மனத்திற்குச் சொல்கிறார். கேட்டுத் தெரிந்ததாக அல்ல, அருளால் பெற்றதாகவே தன் அறிவைச் சொல்வது கவனிக்கத்தக்கது. நூலின் முதற்சொல்லே "உயர்வு" என்பதும், முதற்செயலே "தொழுது எழு" என்பதும் இப்பெருநூலின் திசையைக் காட்டுகின்றன.

திருவாய்மொழி 1-1 உயர்வற உயர்நலம்‌

2675

உயர்வற உயர்‌ நலம்‌ உடையவன்‌ யவன்‌ அவன்‌ மயர்வற மதி நலம்‌ அருளினன்‌ யவன்‌ அவன்‌ அயர்வறும்‌ அமரர்கள்‌ அதிபதி யவன்‌ அவன்‌ துயர்‌ அறு சுடர்‌ அடி தொழுதெழு என்‌ மனனே!

2676

மனன்‌ அகம்‌ மலம்‌ அற மலர்‌ மிசை எழு தரும்‌ மனன்‌ உணர்வு அளவிலன்‌ பொறி உணர்வு அவை இலன்‌ இனன்‌ உணர்‌ முழு நலம்‌ எதிர்‌ நிகழ்‌ கழிவினும்‌ இனன்‌ இலன்‌ எனன்‌ உயிர்‌ மிகு நரை இலனே

2677

இலனது உடையனிது என னினைவு அரியவன்‌ நிலனிடை விசும்பிடை உருவினன்‌ அருவினன்‌ புலனொடு புலனலன்‌ ஒழிவிலன்‌ பரந்த அந்‌ நலனுடை ஒருவனை நணுகினம்‌ நாமே

2678

நாம்‌ அவன்‌ இவன்‌ உவன்‌ அவள்‌ இவள்‌ உவள்‌ எவள்‌ தாம்‌ அவர்‌ இவர்‌ உவர்‌ அது இது உது எது வீம்‌ அவை இவை உவை அவை நலம்‌ தீங்கவை ஆமவை ஆயவை ஆய்‌ நின்ற அவரே

2679

அவரவர்‌ தமதமது அறிவறி வகை வகை அவரவர்‌ இறையவர்‌ என அடி அடைவர்கள்‌ அவரவர்‌ இறையவர்‌ குறைவிலர்‌ இறையவர்‌ அவரர்வர்‌ விதி வழி அடைய நின்றனரே

2680

நின்றனர்‌ இருந்தனர்‌ கிடந்தனர்‌ திரிந்தனர்‌ நின்றிலர்‌ இருந்திலர்‌ கிடந்திலர்‌ திரிந்திலர்‌ என்றும்‌ ஒர்‌ இயல்வினர்‌ என நினைவு அரியவர்‌ என்றும்‌ ஒர்‌ இயல்வொடு நின்ற எம்‌ திடரே 6 ! இது கோவில்‌ திருவாய்மொழி எவன்‌ எவன்‌ எவன்‌

2681

திட விசும்பு எரி வளி நீர்‌ நிலம்‌ இவை மிசை படர்‌ பொருள்‌ முழுவதுமாய்‌ அவை அவை தொறும்‌ ர்‌ உடல்‌ மிசை உயிர்‌ எனக்‌ கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ சுடர்‌ மிகு சுருதியுள்‌ இவை உண்ட சுரனே

2682

சுரர்‌ அறிவரு நிலை விண்‌ முதல்‌ முழுவதும்‌ வரன்‌ முதலாய்‌ அவை முழுதுண்ட பர பரன்‌ புரம்‌ ஒரு மூன்றெரித்து அமரர்க்கும்‌ அறிவு இயந்து அரன்‌ அயன்‌ என உலகழித்து அமைத்துளனே

2683

உளன்‌ எனில்‌ உளன்‌ அவன்‌ உருவம்‌ இவ்வுருவுகள்‌ உளன்‌ அலன்‌ எனில்‌ அவன்‌ அருவம்‌ இவ்வருவுகள்‌ உளன்‌ என இலன்‌ என இவை குணம்‌ உடைமையில்‌ உளனிரு தகைமையொடு ஒழிவிலன்‌ பரந்தே

2684

பரந்த தண்‌ பரவையுள்‌ நீர்‌ தொறும்‌ பரந்துளன்‌ பரந்த அண்டம்‌ இதென நில விசும்பு ஒழிவற கரந்த சில்‌ இடம்‌ தொறும்‌ இடம்‌ திகழ்‌ பொருள்‌ தொறும்‌ கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ இவை உண்ட கரனே

2685

கர விசும்பு எரி வளி நீர்‌ நிலம்‌ இவை மிசை வரன்‌ நவில்‌ திறல்‌ வலி அளி பொறையாய்‌ நின்ற பரன்‌ அடி மேல்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்‌ நிரல்‌ நிறை ஆயிரத்து இவை பத்தும்‌ வீடே