மன்னிய பல்பொறி சேர் ஆயிர வாய் வாளரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடூவுள் மன்னிய நாகத்தணை மேல் ஓர் மாமலை போல் மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச துன்னிய தாரகையின் பேரொளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் -
பெரிய திருமடல்
திருமங்கையாழ்வார் · இயற்பா
Essence of this decad
சிறிய திருமடலின் தொடர்ச்சியாக அமைந்த, அதைவிட நீண்ட ஒற்றைப் பாடல். ஆயிரம் வாய் கொண்ட ஆதிசேடனின் மணிக்குடுமியில் தொடங்கி, இறைவனின் திருமேனியையும் திருத்தலங்களையும் விரிவாக வருணிக்கிறது. மடல் ஊர்வேன் என்ற அச்சுறுத்தல் இங்கே இன்னும் உறுதியாகிறது. இயற்பா இப்படித் துணிச்சலான ஒரு காதல் அறிவிப்புடன் நிறைவடைகிறது.
இருசுடரை மன்னும் விளக்காக ஏற்றி மறிகடலும் பன்னு திரைக் கவரி வீச -
நிலமங்கை தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன் என்னும் மலர்ப்பிணையல் ஏய்ந்த -
மழைக் கூந்தல் தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் என்னும் இவையே முலையா வடிவமைந்த அன்ன நடைய அணங்கேயய் -
அடி இணையைத் தன்னுடைய அங்கைகளால் தான் தடவத் தான் கிடந்து ஓர் உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை தன் நாபி வலயத்துப் பேரொளி சேர் மன்னிய தாமரை மாமலர் பூத்து அம்மலர் மேல் முன்னம் திசைமுகனைத் தான் படைக்க
மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் - அம்மறை தான் மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் நன்னெறி மேம்பட்டன நான்கன்றே -
நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர் தரும் என்பது ஓர் தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும் -
வெஞ்சுடரோன் மன்னும் அழல் நுகர்ந்தும் வண்டடத்தினுள் கிடந்தும் இன்னதோர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து தொன்னெறிக் கண் சென்று ரெனப்படும் சொல்லல்லால் இன்னதோர் காலத்து இனையார் இது பெற்றூர் என்னவும் கேட்டு அறிவதில்லே -
உளதென்னில் மன்னும் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியின் நூடு போய்
வீடு என்னும் தொன்னெறிக் கண் சென்று உரைச் சொல்லுமின்கள், சொல்லாதே அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து ஆங்கு அன்னவரைக் கற்பிப்போம் யாமே -
அதுநிற்க. முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன் பொன்னகரம் புக்கு அமரர் போற்றி செப்ப -
பொங்கொளி சேர் கொல்நவிலும் கோளரி மாத் தான் சுமந்த கோலம் சேர் மன்னிய சிங்காசனத்தின் மேல் -
வாள் நெடுங்கண் கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு இன்னிளம் பூந்தென்றல் இயங்க -
மருங்கிருந்த மின்னேய நுண் மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல் முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப அன்னவர் தம் மா ஏக்க முண்டு ஆங்கண் இ மலர் சேர் பொன்னி பல் கற்பகத்தின் காடு உடுத்த மாடெல்லாம் மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை இன்னிசை வண்டு அமரும் சோலை வாய் மாலி சேர் மன்னிய மா மயில் போல் கூந்தல் -
மழைத் தடங்கண் மின்னிடையாரோடும் விளையாடி வேண்டிடத்து மன்னு மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின் மின்னி நெளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த மன்னும் பவளக் கால் செம்பொன் செய் மண்டபத்துள் அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த இன்னிசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று -
இரு விசும்பில் மன்னு மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் மின்னி நெளி சேர் விசும்பு ஊரும் மாளிகை மேல் மன்னு மணி விளக்கை மாட்டி -
மழைக் கண்ணுூர் பன்னு விசித்திரமாப் பா படுத்த பள்ளி மேல் துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப அன்னம் உழக்க நெரிந்து குக வாள் நீலச் சின்ன நறும் தாது உகுடி -
ஓர் மந்தாரம் துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின் மன்னு மலர் வாய் மணி வண்டு பின் தொடர இன்னிளம் பூம் தென்றல் புகுந்து உங்கு இள முலை மேல் நன்னரும் சந்தனச்சேறுள் புலர்த்த -
தாங்கருஞ்சீர் மின்னிடை மேல் கை வைத்திருந்து ஏந்திள முலை மேல் பொன்னரும்பாரம் புலம்ப -
அகம் குழைந்து ஆங்கு இன்ன உருவின் இமையாத் தடங்கண்ணார் அன்னவர் தம் மானோக்கம் உண்டு ஆங்கு அணிமுறுவல் இன்னமுதம் மாந்தி இருப்பர் -
இதுவன்றே அன்ன அறத்தின் பயனாவது ஒண்பொருளும் அன்ன திறத்ததே ஆதலால் -
காமத்தின் மன்னும் வழி முறையே நிற்றும் நாம் மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் மன்னு மடல் ஊரார் என்பதோர் வாசகமும் தென்னுறையில் கேட்டு அறிவதுண்டூ -
அதனை யாம் தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம் வேண்டாதார் தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் அன்னதோர் தன்மை அறியாதார் -
ஆயன் வேய் இன்னிசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின் மன்னு மணி புலம்ப வாடாதார் -
பெண்ணை மேல் பின்னும் அவ்வன்றில் பேடை'' வாய்ச் சிறு குரலுக்கு உன்னி உடல் உருகி நையாதார் -
உம்பர் வாய்த் துன்னி மதி உகுத்த தூநிலா நீள் நெருப்பில் தம் உடலம் வேவத் தளராதார் -
காம வேள் மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்தெய்ய பொன்னெடுூ வீதி புகாதார் -
தம் பூவணை மேல் சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென்முலையும் இன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும் பொன்னனையார் பின்னும் திருவுறுக -
போர் வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டூ மன்னும் வளநாடூ கைவிட்டு -
மாதிரங்கள் மின்னுருவில் விண்தேர்' திரிந்து வெளிப்பட்டு கன்னிரைந்து' தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்துலவா கொன்னவிலும் வெங்கானத்தூடு -
கொடுங்கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பரல் மேல் பஞ்சடியால் மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும் அன்ன நடைய அணங்கு நடந்திலளே?
பின்னும் கருநெடுங்கண் செவ்வாய்ப் பிணைநோக்கின் மின்னனைய நுண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும் கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது பெடை தன்னுடைய முூன்தோன்றல் கொண்டேகத் தான் சென்று ஆங்கு அன்னவனை நோக்காது அழித்துரப்பி -
வாளமருள் கல்நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய் பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?
பூங்கங்கை முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடூம் கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனை பன்னாகராயன் மடப்பாவை -
பாவை தன் மன்னிய நாணச்சம் மடம் என்றிவை அகல தன்னுடைய கொங்கை முகம் நெரிய -
தான் அவன் தன் பொன்வரை'? ஆகம் தழீஇக்கொண்டூ போய் தனது நன்னகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் முன்னுரையில் கேட்டு அறிவதில்லையே? -
சூழ்கடலுள் பொன்னகரம் செற்ற புரந்தரனோடூ ஏரொக்கும் மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும் கன்னியரை இல்லாத காட்சியாள் -
தன்னுடைய இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய் மன்னும் மணிவரைத் தோள் மாயவன் -
பாவியேன் என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரைத்தோள் மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டூ போய் கன்னி தன் பால் வைக்க மற்றவனோடுூ எத்தனையோ மன்னிய பேரின்பம் எய்தினாள் -
மற்றிவை தான் என்னாலே கேட்டீரே? ஏழைகாள்! என்னுரைக்கேன்? மன்னும் மலையரையன் பொற்பாவை -
வாள்நிலா மின்னு மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும் அன்ன நடைய அணங்கு நுடங்கிடை சேர் பொன்னுடம்பு வாடப் புலன் ஐந்தும் நொந்தகல தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு அன்ன அருந்தவத்தினூடு போய் -
ஆயிரந்தோள் மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள் மின்னி எரி வீச மேல் எடூத்த சூழ் கழற்கால் பொன்னுலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும் தன்னின் உடனே சுழலச் சுழன்றாடூம் கொல்நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடியாடி அன்னவன் தன் பொன்னகலம் சென்றாங்கு அணைந்திலளே? பன்னி உரைக்குங்கால் பாரதமாம் -
பாவியேற்கு என்னுறு நோய் யான் உரைப்பக் கேண்மின் இரும்பொழில் சூழ் மன்னு மறையோர் திருநறையூர் மாமலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் -
நோக்குதலும் மன்னன் திருமார்பும் வாயும் அடி இணையும் பன்னு கரதலமும் கண்களும் -
பங்கயத்தின் பொன்னியல் காடூ ஓர் மணிவரை மேல் பூத்தது போல் மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும் மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப மன்னு மரதகக் குன்றின் மருங்கே -
ஓர் இன்னிள வஞ்சிக்கொடி ஒன்று நின்றது தான் அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய் முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் அன்ன திருவுருவம் நின்றது அறியாதே என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும் பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு மன்னும் மறிகடலும் ஆர்க்கும் -
மதி உகுத்த இன்னிலாவின் கதிரும் என்தனக்கே வெய்தாகும் தன்னுடைய தன்மை தவிரத் தான் என் கொலோ? தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து மன்னிவ்வுலகை மனம் களிப்ப வந்து இயங்கும் இன்னிளம் பூந்தென்றலும் வீசும் எரி எனக்கே முன்னிய பெண்ணை மேல் முள்முளரிக் கூட்டகத்து பின்னும் அவ்வன்றில் பேடை'' வாய்ச் சிறுகுரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓரீர் வாளாம் என் செய்கேன்? கல்நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய கொல்நவிலும் பூங்கணைகள் கோத்துப் பொதவணைந்து தன்னுடைய தோள் கழிய வாங்கி -
தமியேன் மேல் என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் பின் இதனைக் காப்பீர்' தாம் இல்லையே -
பேதையேன் கல்நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடிமலரின் நல்நறு வாசம் மற்றாரானும் எய்தாமே மன்னும் வறுநிலத்து வாளாங்குகுத்தது போல் என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் மன்னு மலர் மங்கை மைந்தன்
கணபுரத்துப் பொன்மலை போல் நின்றவன் தன் பொன்னகலம் தோயாவேல் என்னிவை தான்? வாளா எனக்கே பொறையாகி முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர் மன்னும் மருந்தறிவீர் இல்லையே? -
மால் விடையின் துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு வன்தொடரால் கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு
மாலை வாய்த் தன்னுடைய நா ஒழியாது ஆடூம் தனிமணியின் இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே கொல்நவிலும் எஃகில் கொடிதாய் நெடிதாகும் என்னிதனைக் காக்குமா? சொல்லீர் -
இது விளைத்த மன்னன் நறுந்துழாய் வாழ் மார்பன் - மாமதி கோள் முன்னம் விடுத்த முகில் வண்ணன்
காயாவின் சின்ன நறும்பூன் திகழ் வண்ணன் வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி மன்னன் இராவணனை மாமண்டூ வெஞ்சமத்து பொன் முடிகள் பத்தும் புரளச் சரம் துரந்து தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை -
ஆயிரக் கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை பின்னோர் அரி உருவமாகி எரி விழித்து கொல்நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே -
வல்லாளன் மன்னு மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து தன்னுடைய தாள் மேல் கிடாத்தி -
அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த மின்னிலங்கும் ஆழிப் படைத் தடக்கை வீரனை மன்னு இவ்வகலிடத்தை மாமுது நீர் தான் விழுங்க பின்னுமோர் ஏனமாய்ப் புக்கு வளைமருப்பில் கொல்நவிலும் கூர்நுதி மேல் வைத்தெடூத்த கூத்தனை மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால் மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும் தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு இன்னமுதம் வானவரை ஊட்டி அவருடைய மன்னும் துயர் கடிந்த வள்ளலை -
மற்றன்றியும் தன்னுருவம் ஆரும் அறியாமல் தானங்கோர் மன்னும் குறள் உருவின் மாணியாய் -
மாவலி தன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர் வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா! தருகென்று வாய் திறப்ப -
மற்றவனும் என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண் மின்னார் மணிமுடி போய் விண் தடவ -
மேல் எடூத்த பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க் கடந்து அங்கு ஒன்னா அசுரர் துளங்கச் செல நீட்டி மன்னு இவ்வகலிடத்தை மாவலியை வஞ்சித்து தன்னுலகம் ஆக்குவித்த தாளானை -
தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை பொன்னி மணி கொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை மன்னிய தண் சேறை வள்ளலை -
மாமலர் மேல் அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி என்னுடைய இன்னமுதை எவ்வுள் பெருமலையை கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறை மேல் பொன்னை மரதகத்தைப் புட்குழி எம் போரேற்றை மன்னும் அரங்கத்து எம் மாமணியை -
வல்லவாழ்ப் பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை தொன்னீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை மன்னும் கடல்மல்லை மாயவனை -
வானவர் தம் சென்னி மணிச் சுடரைத் தண்கால் திறல் வலியை தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை அன்னத்தை மீனை அரியை அருமறையை முன்னிவ்வுலகுண்ட மூர்த்தியை -
கோவலூர் மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப் பின்னும் முலை உண்ட பிள்ளையை -
அள்ளல்வாய் அன்னம் இரை தேதர் அழுந்தூர் எழும் சுடரை தென்தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை -
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை கொல்நவிலும் ஆழிப் படையானை -
கோட்டியூர் அன்ன உருவின் அரியை திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை மன்னும் மதிள் கச்சி வேளுக்கை ஆளரியை மன்னிய பாடகத்து எம் மைந்தனை -
வெஃகாவில் உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள் அன்னவனை அட்டபுயகரத்து எம்மானேற்றை என்னை மனம் கவர்ந்த ஈசனை -
வானவர் தம் முன்னவனை மூழிக் களத்து விளக்கினை' அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை நென்னலை இன்றினை நாளையை -
நீர்மலை மேல் மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை நன்னீர்த் தலைச்சங்க நாண்மதியை -
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை தென்னறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை கல்நவில் தோள் காளையைக் கண்டாங்குக் கை தொழுது என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் தன் அருளும் ஆகமும் தாரானேல் -
தன்னை நான் மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும் கொல்நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் -
தான் மூன நாள் மின்னிடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண் துன்னு படல் திறந்து புக்கு -
தயிர் வெண்ணெய் தன் வயிறார விழுங்க கொழுங்கயற்கண் மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால் பின்னும் உரலோடூ கட்டுண்ட பெற்றிமையும் அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண் துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப கொன்னவிலும் கூத்தனாய்ப் பெயர்த்தும் குடமாடி என்னிவன்? என்னப்படுகின்ற ஈடறவும் தென்னிலங்கை ஆட்டி அரக்கர் குலப் பாவை மன்னன் இராவணன் தன் நல்தங்கை -
வாள் எயிற்றுத் துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்தி பொன்னிறம் கொண்டூ புலர்ந்தெழுந்த காமத்தால் தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து மன்னிய திண்ணெனவும் வாய்த்த மலை போலும் தன்னிகர் ஒன்றில்லாத தாடகையை -
மாமுனிக்காத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான் உன்னி உலவா உலகறிய ஊர்வன் நான் முன்னி முளைத்தெழுந்து ஓங்கி ஒளி பரந்த மன்னிய பூம் பெண்ணை மடல் என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான் தன்னருளும் ஆகமும் தாரானேல் - பின்னைப் போய் ஒண்டுூறை' நீர் வேலை உலகறிய ஊர்வன் நான் வண்டறை பூம் பெண்ணை மடல் ட 16மண்ணிற்பொடி பூசி வண்டிரைக்கும் பூச்சூடி பெண்ணை மடல் பிடித்துப் பின்னே' - அண்ணல் திருநறையூர் நின்ற பிரான் தேர் போகும் வீதி பொரு முறையால்? செல்வம் புரிந்து' " இப்பாட்டு கம்பர் பாடியது என்பர் திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்