Skip to the text
திருவெழுகூற்றிருக்கை

திருவெழுகூற்றிருக்கை

திருமங்கையாழ்வார் · இயற்பா

Essence of this decad

திருமங்கையாழ்வார் அருளிய ஒரே ஒரு நீண்ட பாசுரம். ஒன்று முதல் ஏழு வரையிலான எண்களை வரிசையாகவும் மீண்டும் இறங்கு வரிசையாகவும் பயன்படுத்தி, தேர்ச் சக்கரம் போன்ற அமைப்பில் இயற்றப்பட்டது. ஒரு உந்தி, இரு மலர், மூவடி என எண்களால் இறைவனின் செயல்களை அடுக்கிச் செல்கிறார். வடிவத்தின் நுட்பமும் பொருளின் ஆழமும் இணையும் அரிய படைப்பு இது.

2672

ஒரு பேர்‌ உந்தி இருமலர்த்‌ தவிசில்‌ ஒரு முறை அயனை ஈன்றனை ஒரு முறை இருசுடர்‌ மீதினில்‌ இயங்கா மும்மதிள்‌ இலங்கை இருகால்‌ வளைய ஒரு சிலை ஒன்றிய ஈரெயிற்று அழல்‌ வாய்‌ வாளியின்‌ அட்டனை மூவடி நானிலம்‌ வேண்டி முப்புரி நூலொடூ மானுரி இலங்கு மார்வினின்‌ இருபிறப்பு ஒரு மாணாகி ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை நால்‌ திசை நடுங்க அஞ்சிறைப்‌ பறவை ஏறி நால்‌ வாய்‌ மும்மதத்து இரு செவி ஒரு தனி வேழத்து அரந்தையை ஒரு நாள்‌ இருநீர்‌ மடூவுள்‌ தீர்த்தனை முத்தீ நான்மறை ஐவகை வேள்வி அறுதொழில்‌ அந்தணர்‌ வணங்கும்‌ தன்மையை ஐம்புலன்‌ அகத்தினுள்‌ செறுத்து நான்குடன்‌ அடக்கி முக்குணத்து இரண்டவை அகற்றி ஒன்றினில்‌ ஒன்றி நின்று ஆங்கு இருபிறப்பு அறுப்போர்‌ அறியும்‌ தன்மையை முக்கண்‌ நால்தோள்‌ ஐவாய்‌ அரவோடூ ஆறுபொதி சடையோன்‌ அறிவரும்‌ தன்மைப்‌ பெருமையுள்‌ நின்றனை ஏழுலகு எயிற்றினில்‌ கொண்டனை கூறிய அறுசுவைப்‌ பயனும்‌ ஆயினை சுடர்‌ விடும்‌ ஐம்படை அங்கையுள்‌ அமர்ந்தனை சுந்தர நால்தோள்‌ முந்நீர்‌ வண்ண! நின்‌ ஈரடி ஒன்றிய மனத்தால்‌ ஒரு மதி முகத்து மங்கையர்‌ இருவரும்‌ மலரன2'' அங்கையின்‌ முப்பொழுதும்‌ வருட அறிதுயில்‌ அமர்ந்தனை நெறி முறை நால்வகை வருணமும்‌ ஆயினை மேதகும்‌ ஐம்பெரும்‌ பூதமும்‌ நீயே அறுபதம்‌ முரலும்‌ கூந்தல்‌ காரணம்‌ ஏழ்‌ விடை அடங்கச்‌ செற்றனை அறுவகைச்‌ '! இத்தனியன்‌ மிகுதியாக வழங்குவதில்லை 1! மலரென சமயமும்‌ அறிவரு நிலையினை ஐம்பால்‌ ஓதியை ஆகத்து இருத்தினை அறம்‌ முதல்‌ நான்கவையாய்‌ மூர்த்தி மூன்றாய்‌ இருவகைப்‌ பயனாய்‌ ஒன்றாய்‌ விரிந்து நின்றனை குன்றா மதுமலர்ச்‌ சோலை வண்கொடிப்‌ படப்பை வருபுனல்‌ பொன்னி மாமணி அலைக்கும்‌ செந்நெல்‌ ஒண்கழனித்‌ திகழ்‌ வனம்‌ உடூத்த கற்போர்‌ புரிசைக்‌ கனக மாளிகை நிமிர்‌ கொடி விசும்பில்‌ இளம்பிறை துவக்கும்‌ செல்வம்‌ மல்கு தென்‌ திருக்குடந்தை அந்தணர்‌ மந்திர மொழியுடன்‌ வணங்க ஆடரவு அமளியில்‌ அறிதுயில்‌ அமர்ந்த பரம! நின்‌ அடியிணை பணிவன்‌ வரும்‌ இடர்‌ அகல மாற்றோ வினையே இடங்கொண்ட நெஞ்சத்து இணங்கிக்‌ கிடப்பன என்றும்‌ பொன்னித்‌ தடங்கொண்ட தாமரை சூழும்‌ மலர்ந்த தண்‌ பூங்குடந்தை விடங்கொண்ட வெண்பல்‌ கருந்துத்தி செங்கண்‌ தழலுமிழ்‌ வாய்‌ படங்கொண்ட பாம்பணைப்‌ பள்ளி கொண்டான்‌ திருப்பாதங்களே

அடிவரவு: ஒருபேர்‌ காரார்‌ திருமங்கையாழ்வார்‌ திருவடிகளே சரணம்‌