முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி - நயப்புடைய நாவீன் தொடை' கிளவி உள் பொதிவோம் நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் !
பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார் · இயற்பா
Essence of this decad
நம்மாழ்வார் அருளிய எண்பத்தேழு பாசுரங்கள். "முயற்சி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே" என்று தன் நெஞ்சையே விளித்துத் தொடங்குகிறார். தன்னைத் தானே தூண்டிக்கொள்ளும் இந்த உரையாடல் நூல் முழுவதும் தொடர்கிறது. அந்தாதி முறையில் அமைந்த இது, நான்கு நூல்களுள் மூன்றாவதாகக் கொள்ளப்படுகிறது.
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ்வோம் மதிப்போம் மதியோம் - இகழோம் மற்று எங்கள் மால்! செங்கண் மால்! சீறல் நீ தீவினையோம் எங்கள் மால் கண்டாய் இவை
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்றிவை அறிவனேலும் - இவை எல்லாம் என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே! என்னால் செயற்பாலது என்?
என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால் - என்ன கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆள்பெற்று
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் ஆவாரும் நீ பேசில் - எற்றேயோ! மாய! மாமாயவளை மாய முலை வாய் வைத்த நீ அம்மா! காட்டும் நெறி
நெறி காட்டி நீக்குதியோ? நின் பால் கருமா முறிமேனி காட்டுதியோ? மேல் நாள் - அறியோமை என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே! ஈது உரையாய் என் செய்தால் என் படோம் யாம்?
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் - பூமேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பாரிடந்த அம்மா! நின் பாதத்தருகு
அருகும் சுவடும் தெரிவுணரோம் அன்பே பெருகும் மிக இதுவென்? பேசீர் - பருகலாம் பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்! நும்மை நுமக்கு
நுமக்கடியோம் என்றென்று நொந்துரைத்து என்? மாலார் தமக்கு அவர் தாம் சார்வரியரானால்? - எமக்கு இனி யாதானும் ஆகிடூ காண் நெஞ்சே! அவர் திறத்தே யாதானும் சிந்தித்திரு
இருநால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோ டொரு நால்வர் ஓரிருவர் அல்லால் - திருமாற்கு யாமார்? வணக்கமார்? ஏபாவம் நன்னெஞ்சே! நாமா மிக உடையோம் நாழ்
நாழாலமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே - ஆழாத பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ நீரும் நீயாய் நின்ற நீ
நீ அன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்? போயொன்று சொல்லி என்? போ நெஞ்சே! - நீ என்றும் காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு
வழக்கொடூ மாறு கொள் அன்று அடியார் வேண்ட இழக்கவும் காண்டும் இறைவ! - இழப்புண்டே? எம்மாட்கொண்டாகிலும் யான் வேண்ட என் கண்கள் தம்மால் காட்டு உன் மேனிச்சாய்
சாயால் கரியானை உள்ளறியாராய் நெஞ்சே! பேயார் முலை கொடுத்தார் பேயராய் - நீ யார்? போய்த் தேம்பூண் சுவைத்து ஊன் அறிந்தறிந்தும் தீவினையாம் பாம்பார் வாய்க் கைநீட்டல் பார்த்தி
பார்த்தோர் எதிரிதா நெஞ்சே! படூ துயரம் பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை - ஆர்த்து ஓதம் தம் மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீர்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர்வாமனாகாக்கால் பேராளா! - மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பரிதே? சொல்லு நீயாம் அறியச் சூழ்ந்து
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய் திறவார் - சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன்தலைகள் தாம் இடிய தாள் வரை வில் ஏந்தினார் தாம்
தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இளக பாம்பால் ஆப்புண்டூ பாடுற்றாலும் - சோம்பாது இப் பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா! உன் தொல்லுருவை யார் அறிவார்? சொல்லு
சொல்லில் குறை இல்லை சூதறியா நெஞ்சமே! எல்லி பகல் என்னாது எப்போதும் - தொல்லைக் கண் மாத்தானைக்கெல்லாம் ஓர் ஐவரையே மாறாக காத்தானைக் காண்டும் நீ காண்
காணப் புகில் அறிவு கைக் கொண்ட நல்நெஞ்சம் நாணப்படுமன்றே? நாம் பேசில் - மாணி உருவாகிக் கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான் திருவாகம் தீண்டிற்றுச் சென்று
சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இன்றிங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட - அன்றங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண் புதைய காருருவன் தான் நிமிர்த்த கால்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள்' மாலார் குடி புகுந்தார் என் மனத்தே - மேலால் தருக்கும் இடம் பாட்டினொடுூம் வல்வினையார் தாம் வீற் றிருக்கும் இடம் காணாது இளைத்து
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன் இளைக்க நமன் தமர்கள் பற்றி - இளைப்பெய்த நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் தாய் தந்ைத எவ்வுயிர்க்கும் தான்
தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஒன்றில்லாதான் தானே பிறர்கட்கும் தற்றோன்றல் - தானே இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு''? அமைப்பானானால் ' இந்நாள் அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்?
ஆரானும் ஆதானும் செய்ய அகல் இடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே? - சீரார் மனத்தலை வன்துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான்
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான் - தானோர் இருள் அன்ன மாமேனி எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து
அடியால் படி கடந்த முத்தோ? அதன்றேல் முடியால் விசும்பளந்த முத்தோ? - நெடியாய்! செறிகழல்கள்''' தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம் அறிகிலமால் நீ அளந்த அன்று
அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம் இன்றே நாம் காணாதிருப்பதுவும் - என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து
உணர ஒருவர்க்கு எளியனே? செவ்வே இணரும் துழாய் அலங்கல் எந்தை - உணரத் தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவன் ஆனால் எனக்கெளியன் எம்பெருமான் இங்கு
இங்கில்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் - அங்கே மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் மீண்டு'' அடி எடூப்பதன்றோ அழகு?
அழகும் அறிவோமாய் வல்வினையைத்'' தீர்ப்பான் நிழலும் அடிதாறுமானோம் - சுழலக் குடங்கள் தலை மீதெடூத்துக் கொண்டாடி அன்று அத் தடங்கடலை மேயார் தமக்கு
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார் தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது - எமக்கு என்றும்'' ''! செறிகழல்கொள் தாம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் யான் செய்வது இவ்விடத்து இங்கு யாது?
யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என் கொலோ? யாதானும் நேர்ந்து அணுகாவாறு தான்? - யாதானும் தேறுமா செய்யா அசுரர்களை நேமியால் பாறு பாறாக்கினான் பால்
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாமும் நெஞ்சழியும் கண் சுழலும் - நீலாழிச் சோதியாய்! ஆதியாய்! தொல்வினை எம்பால் கடியும் நீதியாய்! நிற்சார்ந்து நின்று
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் ஒன்றுமோ ஆற்றான் என் நெஞ்சகலான் - அன்று அங்கை வன்புடையால் பொன்பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான் அன்புடையன் அன்றே அவன்?
அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர் அவனாம் அவன் என்றிராதே - அவனாம் அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் அவனே எவனேலுமாம்
ஆமாறு அறிவுடையார் ஆவது அரிதன்றே? நாமே அது உடையோம் நன்னெஞ்சே! - பூமேய் மதுகரமே தண்துழாய் மாலாரை வாழ்த்தாம் அதுகரமே அன்பால் அமை
அமைக்கும் பொழுதுண்டே? ஆராயில் நெஞ்சே! இமைக்கும் பொழுதும் இடைச்சி - குமைத்திறங்கள் ஏசியே ஆயினும் ஈந்துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை
பிழைக்க முயன்றோமோ? நெஞ்சமே! பேசாய் தழைக்கும் துழாய் மார்வன் தன்னை - அழைத்து ஒருகால் போய் உபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு
வாய்ப்போ இது ஒப்ப மற்றில்லை வா நெஞ்சே! போய்ப் போஒய் வெந்நரகில் பூவியேல் - தீப்பால பேய்த் தாய் உயிர்கலாய்ப் பால் உண்டு அவள் உயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி
வலியமென நினைந்து வந்தெதிர்ந்த மல்லர் வலிய முடி இடிய வாங்கி - வலிய நின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே பல்நாளும் நிற்கும் இப்பார்
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் பாரிடம் முன்படைத்தான் என்பரால் - பாரிடம் ஆவானும் தானானால் ஆரிடமே? மற்றொருவர்க்கு ஆவான் புகாவால் அவை
அவயமென நினைந்து வந்த சுரர் பாலே நவையை நளிர்விப்பான் தன்னை - கவையில் மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ? மனத்துயரை மாய்க்கும் வகை
வகை சேர்ந்த நல்நெஞ்சும் நாவுடைய வாயும் மிக வாய்ந்து வீழா எனிலும் - மிக வாய்ந்து மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே? மேலைத் தாம் செய்யும் வினை
வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி தினையாம் சிறிதளவும் செல்ல - நினையாது வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான் பொன்னடிக்கள் நான்
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும் தேங்கோத நீருருவன் செங்கண்மால் - நீங்காத மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு நீகதியா நெஞ்சே! நினை
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்பர் என்றே நினைத்திடவும் வேண்டா நீ நேரே - நினைத்து இறைஞ்ச எவ்வளவர் எவ்விடத்தோர் மாலே! அது தானும் எவ்வளவும் உண்டோ? எமக்கு
எமக்கு யாம் விண்ணாட்டூக்கு உச்சமதாம் வீட்டை அமைத்து இருந்தோம் அஃதன்றே யாமாறு? - அமைப்பொலிந்த மென்தோளி காரணமா வெங்கோட்டூ ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக் கொண்டூ
கொண்டல் தான் மால் வரை தான் மாகடல் தான் கூர் இருள் தான் வண்டறாப் பூவை தான் மற்றுத் தான் - கண்ட நாள் கார் உருவம் காண் தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார் பேருரு என்றெம்மைப் பிரிந்து
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்துழலும் சிந்தனையார் தம்மை - புரிந்து ஒருகால் ஆவா! என இரங்கார் அந்தோ! வலிதே கொல்? மாவாய் பிளந்தார் மனம்
மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பர் தம்மை சினம் ஆள்வித்து ஓர் இடத்தே சேர்த்து - புனமேய தண்துழாயான் அடியைத் தான் காணும் அஃதன்றே வண்துழாம் சீரார்க்கு மாண்பு
மாண்பாவித்து அந்நான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் - காண்பான் நங் கண்ணவா மற்றொன்று காணுறா சீர் பரவாது உண்ண வாய் தான் உறுமோ ஒன்று?
ஒன்றுண்டு செங்கண்மால்! யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ - நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ? நீ அவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான்
வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? கானோ? ஒருங்கிற்றும் கண்டிலம் ஆல் - ஆனீன்ற கன்றுயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் வன்துயரை யாவா! மருங்கு
மருங்கோதம் மோதும் மணி நாகணையார் மருங்கே வர அரியரேலும் - ஒருங்கே எமக்கு அவரைக் காணலாம் எப்போதும் உள்ளால் மனக் கவலை தீர்ப்பார் வரவு
வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால் எல்லே! ஒருவாறு ஒருவன் புகாவாறு - உருமாறும் ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி
வழித் தங்கு வல்வினையை மாற்றானோ? நெஞ்சே! தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை - சுழித்து எங்கும் தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தான் உகள வாழ்வடங்க மார்விடந்த மால்?
மாலே! படிச் சோதி மாற்றேல் இனி உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் - மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ்க் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடூ
மாடே வரப் பெறுவராம் என்றே வல்வினையார் காடானும் ஆதானும் கைக்கொள்ளார் - ஊடே போய்ப் பேரோதம் சிந்து திரைக்கண் வளரும் பேராளன் பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் ஈன்துழாய் மாயனையே என் நெஞ்சே! - பேர்ந்தெங்கும் தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அந்நாள் மறை முறையால் வானாடர் கூடி - முறை முறையின் தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே? தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
மீனென்னுங் கம்பில் வெறியென்னும் வெள்ளி வேய் வானென்னும் கேடிலா வான்குடைக்கு - தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் பிணிக்காம் பெருமருந்து பின் 62.
பின் துரக்கும் காற்றிழந்த'' சூற்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே - அன்று திருச்செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் பருச்செவியும் ஈர்ந்த பரன்
பரனாம் அவனாதல் பாவிப்பராகில் உரனால் ஒரு மூன்று போதும் - மரம் ஏழு அன்று எய்தானைப் புள்ளின் வாய் கீண்டானையே அமரர் கை தான் தொழாவே கலந்து?
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே! மலங்க அடித்து மடிப்பான் - விலங்கல் போல் தொல்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல்மாலை எப்பொழுதும் சூட்டு
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை ' காற்றிழிந்த மாட்டே துயர் இழைத்த மாயவனை - ஈட்ட வெறி கொண்ட தண்துழாய் வேதியனை நெஞ்சே! அறி கண்டாய் சொன்னேன் அது
அதுவோ நன்றென்று அங்கு அமருலகோ வேண்டில் அதுவோர்' ' பொருள் இல்லை அன்றே - அதுவொழிந்து மண் இன்று ஆள்வேன் எனிலும் கூடும் மடநெஞ்சே! கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடூம் புல்லென்று ஒழிந்தன கொல்? ஏபாவம்! - வெல்ல நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்தகம்
அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையர் ஆவார் முகம் சிதைவராம் அன்றே முக்கி - மிகும் திருமால் சீர்க்கடலை உள் பொதிந்த சிந்தனையேன் தன்னை ஆர்க்கு அடலாம் செவ்வே அடர்த்து? [2]
அடர்பொன் முடியானை ஆயிரம் பேரானை சுடர்கொள் சுடர் ஆழியானை - இடர் கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே இனி?
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே? தனி நின்ற சார்விலா மூர்த்தி! - பனி நீர் அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு முகத்தான் நின் உந்தி முதல்
முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் - முதல்வா! நிகரிலகு காருருவா! நின் அகத்ததன்றே? புகரிலகு தாமரையின் பூ
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண்தோறும் - பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று
என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால் ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் - குன்று குடையாக ஆகாத்த கோவலனார் நெஞ்சே! புடை தான் பெரிதே புவி
புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் - அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்? ஊன் பருகு நேமியாய்! உள்ளு
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம் விள்ள விழித்து உன்னை மெய்யுற்றால் - உள்ள உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ? உலகளந்த மூர்த்தி! உரை
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே? இரைக்கும் கடல் கிடந்த எந்தாய்! - உரைப்பெல்லாம் நின்னன்றி மற்றிலேன் கண்டாய்! எனது உயிர்க்கு ஓர் சொல் நன்றியாகும் துணை
துணை நாள் பெரும் கிளையும் தொல்குலமும் சுற்றத் திணை நாளும் இன்புடைத்தாமேலும் - கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நல்நெஞ்சே! ஓவாத ஊணாக உண்
உள்நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை அஞ்சுமே? விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே? - மண்ணாட்டில் ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழி அங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும் இறக்கவும் இன்புடைத்தாமேலும் - மறப்பெல்லாம் ஏதமே என்றல்லால் எண்ணுவனே? மண் அளந்தான் பாதமே ஏத்தாப் பகல்
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இருபொழுதும் ஆள்வர் - தகவாத் தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்றோரார் செழும்பரவை மேயார் தெரிந்து
தெரிந்து உணர்வொன்று இன்மையால் தீவினையேன் வாளா இருந்து ஒழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம் - கரந்துருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை அம்மானை ஏத்தாது அயர்த்து
அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே! சொன்னேன் உயப்போம் நெறி இதுவே கண்டாய் - செயற்பால வல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன் மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து
வாழ்த்தி அவன் அடியைப் பூப்புனைந்து நின் தலையைத் தாழ்த்து இருகை கூப்பு என்றால் கூப்பாத - பாழ்த்த விதி! எங்குற்றாய் என்றவனை ஏத்தாது என் நெஞ்சமே! தங்கத்தானாமேலும் தங்கு
தங்கா முயற்றிய வாய்த் தாழ் விசும்பின் மீது பாய்ந்து எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்? - பொங்கோதத் தண்ணம்பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய கண்ணன் பால் நல்நிறம் கொள்கார்
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் - சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ்துயரை என் நினைந்து போக்குவர் இப்போது?
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே! - எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய்கழலே ஏத்த முயல் 87 தசக அடிவரவு: முயற்றி நாழ் சென்று அழகு வலியம் மனமாளும் இறைமுறையான் இனி பகல் ஒருபேர் நம்மாழ்வார் திருவடிகளே சரணம்