செக்கர்மா முகில் உடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி அஞ்சுடர் மதியம் பூண்டூ பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய் திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம் கடலோன் கைமிசைக் கண் வளர்வது போல் பீதகவாடை முடி பூண் முதலா மேதகு? பல்கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப நச்சு வினைக் கவர் தலை அரவின் அமளி ஏறி எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை உந்தி தனிப் பெரும் நாயக! மூவுலகளந்த சேவடியோயே! !
திருவாசிரியம்
நம்மாழ்வார் · இயற்பா
Essence of this decad
நம்மாழ்வார் அருளிய ஏழு பாசுரங்கள் மட்டுமே கொண்ட சிறு நூல். "செக்கர் மா முகில் உடுத்து, மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி" — செவ்வானத்தை ஆடையாகவும் கதிரவனை முடியாகவும் அணிந்த பேருருவை வருணிக்கிறார். ஆசிரியப்பா என்னும் யாப்பில் அமைந்தமையால் திருவாசிரியம் எனப் பெயர் பெற்றது. மிகச் சிறியது; ஆனால் விசுவரூபக் காட்சியை முழுமையாகச் சொல்லிவிடுகிறது.
உலகு படைத்துண்ட எந்தை அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவாவா ருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருட்கு அசைவோர் அசைக திருவொடூ மருவிய இயற்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு நல்வீடு பெறினும் கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?
குறிப்பில் கொண்டூ நெறிப்பட உலகம் மூன்றுடன் வணங்கு தோன்று புகழ் ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி சுடர் விளங்ககலத்து வரை புரை திரை பொர? பெரு வரை வெருவர'? ர் உருமுரல் ஒலி மலி நளிர் கடல் படவர வரசு உடல் தட வரை சுழற்றிய தனிமாத் தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகாவே இசையும் கொல்? ஊழிதோறாழி ஓவாதே
ஊழிதோறாழி ஓவாது வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்? யாவகை உலகமும் யாவரும் இல்லா மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருட் கெல்லாம் அரும்பெறல் தனி வித்து ஒரு தான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை ஈன்று முக்கண் ஈசனொடூ தேவு பல நுதலி மூவுலகம் விளைத்த உந்தி மாயக் கடவுள் மாமுதல் அடியே
மாமுதல் அடிப் போது ஒன்று கவிழ்த்தலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப் போது ஒன்று விண் செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்துவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ தாமரைக் காடூ மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது மாய் இருநாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பகக் காவு பற்பலவன்ன பொரு முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய்க்கு அல்லதும்' அடியதோ உலகே?
ஓஓ! உலகினது இயல்வே! ஈன்றோள் இருக்க மணை நீராட்டி படைத்திடந்து உண்டுமிழ்ந் தளந்து தேர்ந்து உலகளிக்கும் முதற்பெரும் கடவுள் நிற்ப புடைப் பல தான் அறி தெய்வம் பேணுதல் தனாது புல்லறிவு ஆண்மை பொருந்தக் காட்டி கொல்வன முதலா அல்லன முயலும் இனைய செய்கை இன்ப துன்பளி தொல்மா மாயப் பிறவியுள் நீங்கா பல்மா மாயத்து அழுந்துமா நளிர்ந்தே
நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா யாவகை உலகமும் யாவரும் அகப்பட நிலம் நீர் தீ கால் சுடர் இருவிசும்பும் மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க ஒருபொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்படக் கரந்து ஒர் ஆலிலைச் சேர்ந்த எம் பெருமா மாயனை அல்லது ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே?
அடிவரவு: செக்கர் உலகு குறிப்பு ஊழி மாமுதல் ஓஓஉலகு நளிர் முயற்றி நம்மாழ்வார் திருவடிகளே சரணம்