Skip to the text
திருவிருத்தம்

திருவிருத்தம்

நம்மாழ்வார் · இயற்பா

Essence of this decad

நம்மாழ்வாரின் முதல் நூல் — நூறு பாசுரங்கள். "பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை" என்று தன் நிலையை ஒப்புக்கொண்டு, இவ்வாறே இனி இருக்க வேண்டாம் என்று வேண்டுகிறார். அகப்பொருள் மரபில், தலைவி தலைவனைப் பிரிந்து ஏங்கும் பாவனையில் பெரும்பாலான பாசுரங்கள் அமைந்துள்ளன. நான்கு நூல்களுள் முதலாவதான இது வேதத்தின் ரிக்குக்கு ஒப்பிடப்படுகிறது.

தாமான தன்மையில்‌ அருளிச்‌ செய்தது

2478

பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லா ஒழுக்கும்‌ அழுக்குடம்பும்‌ இந்நின்ற நீர்மை இனி யாம்‌ உறாமை உயிர்‌ அளிப்பான்‌ எந்நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌! இமையோர்‌ தலைவா! மெய்ந்நின்று கேட்டருளாய்‌ அடியேன்‌ செய்யும்‌ விண்ணப்பமே !

2479

செமுநீர்த்‌ தடத்துக்‌ கயல்‌ மிளிர்ந்தால்‌ ஒப்ப சேய்‌ அரிக்கண்‌ அழுநீர்‌ துளும்ப அலமருகின்றன வாழியரோ முழுநீர்‌ முகில்‌ வண்ணன்‌ கண்ணன்‌ விண்ணாட்டவர்‌ மூதுவராம்‌ தொழுநீர்‌ இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ்‌ குழற்கே

2480

குழற்‌ கோவலர்‌ மடப்பாவையும்‌ மண்மகளும்‌ திருவும்‌ நிழற்‌ போல்வனர்‌ கண்டு நிற்குங்கொல்‌? மீளுங்கொல்‌? தண்ணந்துழாய்‌ அழற்‌ போல்‌ அடூஞ்சக்கரத்து அண்ணல்‌ விண்ணோர்‌ தொழக்‌ கடவும்‌ தழற்‌ போல்‌ சினத்த அப்புள்ளின்‌ பின்‌ போன தனி நெஞ்சமே

2481

தனி நெஞ்சம்‌ முன்னவர்‌ புள்ளே கவர்ந்தது தண்ணந்துழாய்க்கு இனி நெஞ்சம்‌ இங்குக்‌ கவர்வது யாமிலம்‌ நீ நடுவே முனி வஞ்சப்‌ பேய்ச்சி முலை சுவைத்தான்‌ முடி சூடு துழாய்ப்‌ பனி நஞ்ச மாருதமே! எம்மதாவி பனிப்பு இயல்வே?

2482

பனிப்பு இயல்வாக உடைய தண்வாடை இக்காலம்‌ இவ்வூர்ப்‌ பனிப்பு இயல்வெல்லாம்‌ தவிர்ந்து எரி வீசும்‌ அந்தண்ணந்துழாய்‌ பனிப்‌ புயல்‌ சோரும்‌ தடங்கண்ணி மாமைத்‌ திறத்துக்‌ கொலாம்‌? பனிப்‌ புயல்‌ வண்ணண்‌ செங்கோல்‌ ஒரு நான்று தடாவியதே

2483

தடாவிய அம்பும்‌ முரிந்த சிலைகளும்‌ போக விட்டூ கடாயின கொண்டூ ஒல்கும்‌ வல்லி ஈதேனும்‌ அசுரர்‌ மங்கக்‌ கடாவிய வேகப்‌ பறவையின்‌ பாகன்‌ மதன செங்கோல்‌ நடாவிய கூற்றம்‌ கண்டீர்‌ உயிர்‌ காமின்கள்‌ ஞாலத்துள்ளே

2484

ஞாலம்‌ பனிப்பச்‌ செறித்து நன்னீர்‌ இட்டுக்கால்‌ சிதைந்து நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்‌ கோலம்‌ சுமந்து பிரிந்தார்‌ கொடுமை குழறு தண்‌ பூம்‌ காலங்கொலோ? அறியேன்‌ வினையாட்டியேன்‌ காண்கின்றவே

2485

காண்கின்றனகளும்‌ கேட்கின்றனகளும்‌ காணில்‌ இந்நாள்‌ பாண்குன்ற நாடர்‌ பயில்கின்றன இதெல்லாம்‌ அறிந்தோம்‌ மாண்குன்றம்‌ ஏந்தித்‌ தண்‌ மாமலை வேங்கடத்து உம்பர்‌ நம்பும்‌ சேண்குன்றம்‌ சென்று பொருள்‌ படைப்பான்‌ கற்றதிண்ணனவே

2486

திண்‌ பூஞ்சுடர்‌ நுதி நேமி அஞ்செல்வர்‌ விண்ணாடூ அனைய வண்பூ மணிவல்லி ஆரே பிரிபவர்‌ தாம்‌? இவையோ கண்‌ பூங்கமலம்‌ கருஞ்சுடராடி வெண்முத்து அரும்பி வண்பூங்குவளை மட மான்‌ விழிக்கின்ற மாயிதழே

2487

மாயோன்‌ வட திருவேங்கட நாட வல்லிக்‌ கொடிகாள்‌! நோயோ உரைக்கிலும்‌ கேட்கின்றிலீர்‌ உரையீர்‌ நுமது வாயோ? அது அன்றி வல்வினையேனும்‌ கிளியும்‌ எள்கும்‌ ஆயோ? அடும்‌ தொண்டையோ? அறையோ! இது அறிவரிதே

2488

அரியனயாம்‌ இன்று காண்கின்றன கண்ணன்‌ விண்ணனையாய்‌! பெரியன காதம்‌ பொருட்கோ பிரிவென ஞாலம்‌ எய்தற்கு உரியன ஒண்முத்தும்‌ பைம்பொன்னும்‌ ஏந்தி ஓரோ குடங்கைப்‌ பெரியன கெண்டைக்‌ குலம்‌ இவையோ வந்து பேர்கின்றவே

2489

பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல்‌ பயலை ஊர்கின்றது கங்குல்‌ ஊழிகளே இதெல்லாம்‌ இனவே ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான்‌ கண்ணன்‌ தண்ணந்துழாய்‌ சார்கின்ற நன்னெஞ்சினார்‌ தந்து போன தனி வளமே

2490

தனி வளர்‌ செங்கோல்‌ நடாவு தழல்‌ வாய்‌ அரசவியப்‌ பனி வளர்‌ செங்கோல்‌ இருள்‌ வீற்றிருந்தது பார்‌ முழுதும்‌ துனி வளர்‌ காதல்‌ துழாயைத்‌ துழாவு தண்வாடை தடிந்து இனி வளை காப்பவர்‌ ஆர்‌? எனை ஊழிகள்‌ ஈர்வனவே

2491

ஈர்வன வேலும்‌ அஞ்சேலும்‌ உயிர்‌ மேல்‌ மிளிர்ந்து இவையோ பேர்வனவோ வல்ல தெய்வ நல்வேள்‌ கணை பேரொளியே சோர்வன நீலச்‌ சுடர்‌ விடு மேனி அம்மான்‌ விசும்பூர்‌ தேர்வன தெய்வமன்னீர கண்ணோ? இச்செழும்‌ கயலே

2492

கயலோ நும்‌ கண்கள்‌? என்று களிறு வினவி நிற்றீர்‌ அயலோர்‌ அறியிலும்‌ ஈதென்ன வார்த்தை? கடல்‌ கவர்ந்த புயலோடூ உலாம்‌ கொண்டல்‌ வண்ணன்‌ புன வேங்கடத்து எம்மொடும்‌ பயலோவிலீர்‌ கொல்லை காக்கின்ற நாளும்‌ பல பலவே

2493

பல பல ஊழிகள்‌ ஆயிடும்‌ அன்றி ஓர்‌ நாழிகையைப்‌ பல பல கூறிட்ட கூறாயிடும்‌ கண்ணன்‌ விண்ணனையாய்‌! பல பல நாள்‌ அன்பர்‌ கூடிலும்‌ நீங்கிலும்‌ யாம்‌ மெலிதும்‌ பல பல சூழலுடைத்து அம்ம! வாழி இப்பாயிருளே

2494

இருள்‌ விரிந்தால்‌ அன்ன மாநீர்த்‌ திரை கொண்டூ வாழியரோ இருள்‌ பிரிந்தார்‌ அன்பர்‌ தேர்‌ வழி தூரல்‌ அரவணை மேல்‌ இருள்‌ விரி நீலக்‌ கருநாயிறு சுடர்‌ கால்வது போல்‌ இருள்‌ விரி சோதி பெருமான்‌ உறையும்‌ எறிகடலே!

2495

கடல்‌ கொண்டூ எழுந்தது வானம்‌ அவ்வானத்தை அன்றிச்‌ சென்று கடல்‌ கொண்டூ ஒழிந்த அதனால்‌ இது கண்ணன்‌ மண்ணும்‌ விண்ணும்‌ கடல்‌ கொண்டு எழுந்த அக்காலம்‌ கொலோ? புயல்‌ காலம்‌ கொலோ? கடல்‌ கொண்ட கண்ணீர்‌ அருவி செய்யா நிற்கும்‌ காரிகையே

2496

காரிகையார்‌ நிறை காப்பவர்‌ யார்‌ என்று கார்‌ கொண்டுூ இன்னே மாரிகை ஏறி அறை இடம்‌ காலத்தும்‌ வாழியரோ சாரிகைப்‌ புள்ளர்‌ அந்தண்ணந்துழாய்‌ இறை கூயருளார்‌ சேரிகை ஏரும்‌ பழியாய்‌ விளைந்தது என்‌ சின்மொழிக்கே

2497

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம்‌ இந்நோய்‌ இனதென்று இன்மொழி கேட்கும்‌ இளந்தெய்வம்‌ அன்றிது வேல! நில்‌ நீ என்‌ மொழி கேண்மின்‌ என்‌ அம்மனைமீர்‌! உலகு ஏழும்‌ உண்டான்‌ சொல்‌ மொழி மாலை அந்தண்ணந்துழாய்‌ கொண்டூ சூட்டூமினே

2498

'சூட்டு நன்மாலைகள்‌ தூயன ஏந்தி விண்ணோர்கள்‌ நன்னீர்‌ ஆட்டி அந்தூபம்‌ தரா நிற்கவே அங்கு ஓர்‌ மாயையினால்‌ ஈட்டிய வெண்ணை தொடூவுண்ணப்‌ போந்திமில்‌ ஏற்றுவன்‌ கூன்‌ கோட்டிடை ஆடினை கூத்து அடல்‌ ஆயர்‌ தம்‌ கொம்பினுக்கே

2499

கொம்பார்‌ தழைகை சிறு நாண்‌ எறிவிலம்‌ வேட்டை கொண்டாட்டூ அம்பார்‌ களிறு வினவுவது ஐயர்‌ புள்‌ ஊரும்‌ கள்வர்‌ தம்‌ பாரகத்து என்றும்‌ ஆடாதன தம்மில்‌ கூடாதன வம்பார்‌ வினாச்‌ சொல்லவோ எம்மை வைத்தது இவ்வான்‌ புத்தே

2500

புனமோ? புனத்தயலே வழி போகும்‌ அருவினையேன்‌ மனமோ? மகளிர்‌! நும்‌ காவல்‌ சொல்லீர்‌ புண்டரீகத்து அங்கேழ்‌ காரிகைக்கே இது திருமஞ்சன காலத்தில்‌ சேவிக்கப்படூவது வனமோர்‌ அனைய கண்ணான்‌ கண்ணன்‌ வாணாடூ அமரும்‌ தெய்வத்‌ தினமோர்‌ அனையீர்களாய்‌ இவையோ நும்‌ இயல்வுகளே?

2501

இயல்வு ஆயின வஞ்ச நோய்‌ கொண்டு உலாவும்‌ ஓரோ குடங்கைக்‌ கயல்‌ பாய்வன பெரு நீர்க்‌ கண்கள்‌ தம்மொடும்‌ குன்றம்‌ ஒன்றால்‌ புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள்‌ ஊரும்‌ துழாய்க்‌ கொயல்வாய்‌ மலர்‌ மேல்‌ மனத்தொடு என்னாங்கொல்‌ எங்கோல்‌ வளைக்கே?

2502

எங்கோல்‌ வளை முதலாக்‌ கண்ணன்‌ மண்ணும்‌ விண்ணும்‌ அளிக்கும்‌ செங்கோல்‌ வளைவு விளைவிக்குமால்‌ திறல்‌ சேர்‌ அமரர்‌ தங்கோனுடைய தங்கோன்‌ உம்பர்‌ எல்லாயவர்க்கும்‌ தங்கோன்‌ நங்கோன்‌ உகக்கும்‌ துழாய்‌ என்‌ செய்யாது இனி நானிலத்தே?

2503

நானிலம்‌ வாய்க்‌ கொண்டூ நன்னீர்‌ அறம்‌ என்று கோது கொண்ட வேேனிலம்‌ செல்வன்‌ சுவைத்துமிழ்‌ பாலை கடந்த பொன்னே! கால்நிலம்‌ தோய்ந்து விண்ணோர்‌ தொழும்‌ கண்ணன்‌ வெஃகாவுது அம்பூந்‌ தேனிளம்‌ சோலை அப்பாலது எப்பாலைக்கும்‌ சேமத்ததே

2504

சேமம்‌ செங்கோன்‌ அருளே செருவாரும்‌ நட்பு ஆகுவர்‌ என்று ஏமம்‌ பெற வையம்‌ சொல்லும்‌ மெய்யே பண்டு எல்லாம்‌ அறை கூய்‌ யாமங்கள்‌ தோறு எரி வீசும்‌ நம்‌ கண்ணன்‌ அந்தண்ணந்துழாய்த்‌ தாமம்‌ புனைய அவ்வாடை ஈதோ வந்து தண்‌ என்றதே

2505

தண்ணன்‌ துழாய்‌ வளை கொள்வது யாம்‌ இழப்போம்‌ நடுவே வண்ணன்‌ துழாவி ஓர்‌ வாடை உலாவும்‌ வள்வாய்‌ அலகால்‌ புள்ளந்துழாமே பொரு நீர்த்‌ திருவரங்கா! அருளாய்‌ எண்ணம்‌ துழாவும்‌ இடத்து உளவோ பண்டும்‌ இன்னன்னவே?

2506

இன்னன்ன தூது எம்மை ஆளற்றப்‌ பட்டிரந்தாள்‌ இவள்‌ என்று அன்னன்ன சொல்லாப்‌ பெடையொடும்‌ போய்‌ வரும்‌ நீலம்‌ உண்ட மின்னன்ன மேனிப்‌ பெருமான்‌ உலகில்‌ பெண்‌ தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ? குடிச்‌ சீர்மையில்‌ அன்னங்களே !

2507

அன்னம்‌ செல்வீரும்‌ வண்டானம்‌ செல்வீரும்‌ தொழுது இரந்தேன்‌ முன்னம்‌ செல்வீர்கள்‌ மறவேன்மினோ கண்ணன்‌ வைகுந்தனோடூ என்‌ நெஞ்சினாரைக்‌ கண்டால்‌ என்னைச்‌ சொல்லி அவரிடை நீர்‌ இன்னம்‌ செல்லீரோ? இதுவோ தகவென்று இசைமின்களே!

2508

இசைமின்கள்‌ தூது என்று இசைத்தால்‌ இசையிலம்‌ என்‌ தலை மேல்‌ அசைமின்கள்‌ என்றால்‌ அசையுங்கொலாம்‌? அம்பொன்‌ மாமணிகள்‌ திசைமின்‌ மிளிரும்‌ திருவேங்கடத்துவன்‌ தாள்‌ சிமய மிசை மின்‌ மிளிரிய போவான்‌ வழிக்‌ கொண்ட மேகங்களே !

2509

மேகங்களோ! உரையீர்‌ திருமால்‌ திருமேனி ஒக்கும்‌ யோகங்கள்‌ உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்‌? உயிர்‌ அளிப்பான்‌ மாகங்கள்‌ எல்லாம்‌ திரிந்து நன்னீர்கள்‌ சுமந்து நுந்தம்‌ ஆகங்கள்‌ நோவ வருத்தும்‌ தவமாம்‌ அருள்‌ பெற்றதே

2510

அருளார்‌ திருச்சக்கரத்தால்‌ அகல்‌ விசும்பும்‌ நிலனும்‌ இருளார்‌ வினை கெடச்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌ ஈங்கோர்‌ பெண்பால்‌ பொருளோ எனும்‌ இகழ்வோ? இவற்றின்‌ புறத்தாள்‌ என்று எண்ணோ? தெருளோம்‌ அரவணையீர்‌! இவள்‌ மாமை சிதைக்கின்றதே

2511

சிதைக்கின்ற தாழி என்று ஆழியைச்‌ சீறி தன்‌ சீறடியால்‌ உதைக்கின்ற நாயகன்‌ தன்னொடு மாலே! உனது தண்தார்‌ ததைக்கின்ற தண்ணந்துழாய்‌ அணிவான்‌ அதுவே மனமாய்ப்‌ பதைக்கின்ற மாதின்‌ திறத்து அறியேன்‌ செயற்பாலதுவே

2512

பால்வாய்ப்‌ பிறைப்‌ பிள்ளை ஒக்கலைக்‌ கொண்டூ பகல்‌ இழந்த மேல்பால்‌ திசைப்‌ பெண்‌ புலம்புறு மாலை உலகளந்த மால்பால்‌ துழாய்க்கு மனம்‌ உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்‌ சோல்வான்‌ புகுந்து இதுவோர்‌ பனிவாடை துழாகின்றதே

2513

துழா நெடூஞ்சூழ்‌ இருள்‌ என்று தந்தண்‌ தாரது பெயரா எழா நெடூ ஊழி எழுந்த இக்காலத்தும்‌ ஈங்கு இவளோ! வழா நெடுந்துன்பத்தள்‌ என்று இரங்கார்‌ அம்மனோ! இலங்கைக்‌ குழா நெடூ மாடம்‌ இழுத்த பிரானார்‌ கொடூுமைகளே!

2514

கொடுங்கால்‌ சிலையர்‌ நிரை கோள்‌ உழவர்‌ கொலையில்‌ வெய்ய கடூங்கால்‌ இளைஞர்‌ துடி படும்‌ கவ்வைத்து அருவினையேன்‌ நெடுங்காலமும்‌ கண்ணன்‌ நீள்‌ மலர்ப்‌ பாதம்‌ பரவிப்‌ பெற்ற தொடுங்கால்‌ ஒசியும்‌ இடை இளமான்‌ சென்ற சூழ்‌ கடமே

2515

கடம்‌ ஆயினகள்‌ கழித்து தன்‌' கால்‌ வன்மையால்‌ பல நாள்‌ தடம்‌ ஆயின புக்கு நீர்‌ நிலை நின்ற தவம்‌ இது கொல்‌? குடமாடி இம்மண்ணும்‌ விண்ணும்‌ குலுங்க உலகளந்து நடமாடிய பெருமான்‌ உருவொத்தன நீலங்களே

2516

நீலத்‌ தடவரை மேல்‌ புண்டரீக நெடுந்தடங்கள்‌ போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்‌ பொங்கு முந்நீர்‌ ஞாலப்‌ பிரான்‌ விசும்புக்கும்‌ பிரான்‌ மற்றும்‌ நல்லோர்‌ பிரான்‌ கோலம்‌ கரிய பிரான்‌ எம்பிரான்‌ கண்ணின்‌ கோலங்களே

2517

கோலப்‌ பகள்‌ களிறு ஒன்று கல்புய்ய குழாம்‌ விரிந்த நீலக்‌ கங்குல்‌ களிறெல்லாம்‌ நிறைந்தன நேரிழையீர்‌ ! ஞாலப்‌ பொன்‌ மாதின்‌ மணாளன்‌ துழாய்‌ நங்கள்‌ சூழ்குழற்கே தன்‌ தண்‌ ஏலப்புனைந்து என்னைமார்‌ எம்மை நோக்குவது என்று கொலோ?

2518

என்றும்‌ புன்‌ வாடை இது கண்டறிதும்‌ இவ்வாறு வெம்மை ஒன்றும்‌ உருவும்‌ சுவடும்‌ தெரியிலம்‌ ஓங்கசுரர்‌ பொன்றும்‌ வகை புள்ளை ஊர்வான்‌ அருள்‌ அருளாத இந்நாள்‌ மன்றில்‌ நிறை பழி தூற்றி நின்று என்னை வன்காற்று அடூமே

2519

வன்காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த மென்கால்‌ கமலத்‌ தடம்‌ போள்‌ பொலிந்தன மண்ணும்‌ விண்ணும்‌ என்காற்கு அளவின்மை காண்மின்‌ என்பான்‌ ஒத்து வான்‌ நிமிர்ந்த தன்காற்‌' பணிந்த என்பால்‌ எம்பிரான தடங்கண்களே

2520

கண்ணும்‌ செந்தாமரை கையும்‌ அவை அடியோ அவையே வண்ணம்‌ கரியதோர்‌ மால்‌ வரை போன்று மதி விகற்பால்‌ விண்ணும்‌ கடந்து உம்பர்‌ அப்பால்‌ மிக்கு மற்று எப்பால்‌ யவர்க்கும்‌ எண்ணும்‌ இடத்ததுவோ? எம்பிரானது எழில்‌ நிறமே

2521

நிறமுயர்‌ கோலமும்‌ பேரும்‌ உருவும்‌ இவை இவையென்று அறமுயல்‌ ஞானச்‌ சமயிகள்‌ பேசிலும்‌ அங்கு அங்கெல்லாம்‌ உறவுயர்‌ ஞானச்‌ சுடர்‌ விளக்காய்‌ நின்றதன்றி ஒன்றும்‌ பெற முயன்றார்‌ இல்லையால்‌ எம்பிரான பெருமையையே

2522

பெரும்‌ கேழலார்‌ தம்‌ பெருங்கண்‌ மலர்ப்‌ புண்டரீகம்‌ நம்‌ மேல்‌ ஒருங்கே பிறழ வைத்தார்‌ இவ்வகாலம்‌ ஒருவர்‌ நம்‌ போல்‌ வருங்கேழ்பவர்‌ உளரே? தொல்லை வாழியம்‌ சூழ்‌ பிறப்பு மருங்கே வரப்‌ பெறுமே? சொல்லு வாழி மட நெஞ்சமே!

2523

மட நெஞ்சம்‌ என்றும்‌ தமது என்றும்‌ ஓர்‌ கருமம்‌ கருதி விட நெஞ்சை உற்றார்‌ விடவோ அமையும்‌ அப்பொன்‌ பெயரோன்‌ தடநெஞ்சம்‌ கீண்ட பிரானார்‌ தமது அடிக்கீழ்‌ விடப்‌ போய்த்‌ திடநெஞ்சமாய்‌ எம்மை நீத்து இன்று தாறும்‌ திரிகின்றதே

2524

திரிகின்றது வடமாருதம்‌ திங்கள்‌ வெந்தீ முகந்து சொரிகின்றது அதுவும்‌ அது கண்ணன்‌ விண்ணூர்‌ தொழவே சரிகின்றது சங்கம்‌ தண்ணந்துழாய்க்கு வண்ணம்‌ பயலை விரிகின்றது முழு மெய்யும்‌ என்னாங்கொல்‌ என்‌ மெல்லியற்கே?

2525

மெல்லியல்‌ ஆக்கைக்‌ கிருமி குருவில்‌ மிளிர்‌ தந்து ஆங்கே செல்லிய செல்கைத்து உலகை என்‌ காணும்‌? என்னாலும்‌ தன்னைச்‌ சொல்லிய சூழல்‌ திருமால்‌ அவன்‌ கவி யாது கற்றேன்‌ பல்லியின்‌ சொல்லும்‌ சொல்லா கொள்வதோ உண்டு பண்டு பண்டே

2526

பண்டும்‌ பல பல வீங்கிருள்‌ காண்டும்‌ இப்பாயிருள்‌ போல்‌ கண்டும்‌ அறிவதும்‌ கேட்பதும்‌ யாமிலம்‌ காள வண்ண வண்டுண்‌ துழாய்ப்‌ பெருமான்‌ மதுசூதனன்‌ தாமோதரன்‌ உண்டும்‌ உமிழ்ந்தும்‌ கடாய மண்ணேரன்ன ஒண்ணுதலே!

2527

ஒண்ணுதல்‌ மாமை ஒளி பயவாமை விரைந்து நந்தேர்‌ நண்ணுதல்‌ வேண்டும்‌ வலவ! கடாகின்று தேன்‌ நவின்ற விண்‌ முதல்‌ நாயகன்‌ நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்‌ மண்‌ முதல்‌ சேர்வுற்று அருவி செய்யா நிற்கும்‌ மாமலைக்கே

2528

மலை கொண்டூ மத்தா அரவால்‌ சுழற்றிய மாயப்‌ பிரான்‌ அலை கண்டு கொண்ட அமுதம்‌ கொள்ளாது கடல்‌ பரதர்‌ விலை கொண்டு தந்த சங்கம்‌ இவை வேரித்‌ துழாய்‌ துணையாத்‌ துலை கொண்டூ தாயம்‌ கிளர்ந்து கொள்வான்‌ ஒத்து அழைக்கின்றதே

2529

அழைக்கும்‌ கருங்கடல்‌ வெண்திரைக்‌ கைக்‌ கொண்டு போய்‌ அலர்‌ வாய்‌ மழைக்கண்‌ மடந்தை அரவணை ஏற மண்மாதர்‌ விண்வாய்‌ அழைத்துப்‌ புலம்பி முலை மலை மேல்‌ நின்றும்‌ ஆறுகளாய்‌ மழைக்‌ கண்ண நீர்‌ திருமால்‌ கொடியான்‌ என்று வார்கின்றதே!

2530

வாராயின முலையாள்‌ இவள்‌ வானோர்‌ தலைமகனாம்‌ சீராயின தெய்வ நன்னோய்‌ இது தெய்வத்‌ தண்ணந்துழாய்த்‌ தாராயினும்‌ தழையாயினும்‌ தண்கொம்பதாயினும்‌ கீழ்‌ வேராயினும்‌ நின்ற மண்ணாயினும்‌ கொண்டூ வீசுமினே

2531

வீசும்‌ சிறகால்‌ பறத்திர்‌ விண்ணாடூ நுங்கட்கு எளிது பேசும்படி அன்ன பேசியும்‌ போவது நெய்‌ தொடூவுண்டூ ஏசும்படி அன்ன செய்யும்‌ எம்‌ ஈசர்‌ விண்ணோர்‌ பிரானார்‌ மாசில்‌ மலரடிக்‌ கீழ்‌ எம்மைச்‌ சேர்விக்கும்‌ வண்டுகளே!

2532

வண்டூகளோ! வம்மின்‌ நீர்ப்பூ நிலப்பூ மரத்தில்‌ ஒண்பூ உண்டூ களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்‌ ஏனம்‌ ஒன்றாய்‌ மண்‌ துகளாடி வைகுந்தம்‌ அன்னாள்‌ குழல்வாய்‌ விரை போல்‌ விண்டூகள்‌ வாரும்‌ மலர்‌ உளவோ நும்‌ வியலிடத்தே?

2533

வியலிடம்‌ உண்ட பிரானார்‌ விடுத்த திருவருளால்‌ உயலிடம்‌ பெற்று உய்ந்தம்‌ அஞ்சலம்‌ தோழி! ஓர்‌ தண்தென்றல்‌ வந்து அயலிடை யாரும்‌ அறிந்திலர்‌ அம்பூந்துழாயின்‌ இன்தேன்‌ புயலுடை நீர்மையினால்‌ தடவிற்று என்‌ புலன்‌ கலனே

2534

புலக்குண்டலப்‌ புண்டரீகத்த போர்க்‌ கெண்டை வல்லி ஒன்றால்‌ விலக்குண்டுூ உலாகின்று வேல்‌ விழிக்கின்றன கண்ணன்‌ கையால்‌ மலக்குண்டு அமுதம்‌ சுரந்த மறி கடல்‌ போன்றவற்றால்‌ கலக்குண்ட நான்று கண்டார்‌ எம்மை யாரும்‌ கழறலரே

2535

கழல்‌ தலம்‌ ஒன்றே நில முழுதாயிற்று ஒரு கழல்‌ போய்‌ நிழல்‌ தர எல்லா விசும்பும்‌ நிறைந்தது நீண்ட அண்டத்து உழறலர்‌ ஞானச்‌ சுடர்‌ விளக்காய்‌ உயர்ந்தோரை இல்லா அழறலர்‌ தாமரைக்‌ கண்ணன்‌ என்னோ இங்கு அளக்கின்றதே?

2536

அளப்பரும்‌ தன்மைய ஊழியம்‌ கங்குல்‌ அந்தண்ணந்துழாய்க்கு உளப்பெரும்‌ காதலின்‌ நீளிய வாயுள ஓங்கு முந்நீர்‌ வளப்பெரு நாடன்‌ மதுசூதனன்‌ என்னும்‌ வல்வினையேன்‌ தளப்பெரு நீள்‌ முறுவல்‌ செய்ய வாய தட முலையே

2537

முலையோ முழு முற்றும்‌ போந்தில மொய்பூம்‌ குழல்‌ குறிய கலையோ அரையில்லை நாவோ குழறும்‌ கடல்‌ மண்ணெல்லாம்‌ விலையோ என மிளிரும்‌ கண்‌ இவள்‌ பரமே? பெருமான்‌ மலையோ திருவேங்கடம்‌ என்று கற்கின்ற வாசகமே

2538

வாசகம்‌ செய்வது நம்‌ பரமே? தொல்லை வானவர்‌ தம்‌ நாயகன்‌ நாயகரெல்லாம்‌ தொழும்‌ அவன்‌ ஞால முற்றும்‌ வேயகம்‌ ஆயினும்‌ சோரா வகை இரண்டே அடியால்‌ தாயவன்‌ ஆய்க்குலமாய்‌ வந்து தோன்றிற்று நம்‌ இறையே

2539

இறையோ இரக்கினும்‌ ஈங்கோர்‌ பெண்பால்‌ எனவும்‌ இரங்காது அறையோ! என நின்றதிரும்‌ கருங்கடல்‌ ஈங்கு இவள்‌ தன்‌ நிறையோ இனி உன்‌ திருவருளால்‌ அன்றிக்‌ காப்பரிதால்‌ முறையோ? அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்‌ வண்ணனே 62.

2540

வண்ணம்‌ சிவந்துள வானாடூ அமரும்‌ குளிர்‌ விழிய தண்மென்‌ கமலத்தடம்‌ போல்‌ பொலிந்தன தாம்‌ இவையோ கண்ணன்‌ திருமால்‌ திருமுகம்‌ தன்னொடும்‌ காதல்‌ செய்தேற்கு எண்ணம்‌ புகுந்து அடியேனொடூ இக்காலம்‌ இருக்கின்றதே

2541

இருக்கார்‌ மொழியால்‌ நெறி இழுக்காமை உலகளந்த திருத்தாள்‌ இணை நிலத்‌ தேவர்‌ வணங்குவர்‌ யாமும்‌ அவா ஒருக்கா வினையொடூம்‌ எம்மொடும்‌ நொந்து கனியின்மையின்‌ கருக்காய்‌ கடிப்பவர்‌ போல்‌ திருநாமச்‌ சொல்‌ கற்றனமே

2542

கற்றுப்‌ பிணை மலர்க்‌ கண்ணின்‌ குலம்‌ வென்று ஓரோ கருமம்‌ உற்றுப்‌ பயின்று செவியொடூ உசாவி உலகம்‌ எல்லாம்‌ முற்றும்‌ விழுங்கி உமிழ்ந்த பிரானார்‌ திருவடிக்‌ கீழ்‌ உற்றும்‌ உறாதும்‌ மிளிர்ந்த கண்ணாய்‌ எம்மை உண்கின்றவே

2543

உண்ணாது உறங்காது உணர்வுறும்‌ எத்தனை யோகியர்க்கும்‌ எண்ணாய்‌ மிளிரும்‌ இயல்வினவாம்‌ எரி நீர்‌ வளி வான்‌ மண்ணாகிய எம்பெருமான்‌ தனது வைகுந்தம்‌ அந்நாள்‌ கண்ணாய்‌ அருவினையேன்‌ உயிராயின காவிகளே

2544

காவியும்‌ நீலமும்‌ வேலும்‌ கயலும்‌ பல பல என்று ஆவியின்‌ தன்மை அளவல்ல பாரிப்பு அசுரைச்‌ செற்ற மாவியம்‌ புள்‌ வல்ல மாதவன்‌ கோவிந்தன்‌ வேங்கடம்‌ சேர்‌ தூவியம்‌ பேடை அந்நாள்‌ கண்களாய துணை மலரே

2545

மலர்ந்தே ஒழிந்தில மாலையும்‌ மாலைப்பொன்‌ வாசிகையும்‌ புலம்‌ தோய்‌ தழைப்‌ பந்தர்‌ தண்டூற நாற்றி பொருகடல்‌ சூழ்‌ நிலம்‌ தாவிய எம்பெருமான்‌ தனது வைகுந்தமன்னாய்‌! கலந்தார்‌ வர எதிர்‌ கொண்டூ வன்கொன்றைகள்‌ கார்த்தனவே

2546

காரற்றிருள்‌ செகிலேற்றின்‌ சுடருக்கு உளைந்து வெல்வான்‌ போரேற்றெதிர்ந்தது புன்‌ தலை மாலை புவனி எல்லாம்‌ நீரேற்று அளந்த நெடிய பிரான்‌ அருளா விடூமே? வாரேற்றிள முலையாய்‌! வருந்தேல்‌ உன்‌ வளைத்‌ திறமே

2547

வளைவாய்த்‌ திருச்சக்கரத்து எங்கள்‌ வானவனார்‌ முடி மேல்‌ தளைவாய்‌ நறுங்கண்ணித்‌ தண்ணன்‌ துழாய்க்கு வண்ணம்‌ பயலை விளைவான்‌ மிக வந்து நாள்‌ திங்கள்‌ ஆண்டூ ஊழி நிற்க எம்மை உளைவான்‌ புகுந்து இது ஓர்‌ கங்குல்‌ ஆயிரம்‌ ஊழிகளே

2548

ஊழிகளாய்‌ உலகேமழும்‌ உண்டான்‌ என்றிலம்‌ பழங்கண்டு ஆழி களாம்‌ பழ வண்ணம்‌ என்றேற்கு அஃதே கொண்டு அன்னை நாழிவளோ என்னும்‌ ஞாலம்‌ உண்டான்‌ வண்ணம்‌ சொல்லிற்று என்னும்‌ தோழிகளோ! உரையீர்‌ எம்மை அம்மனை சூழ்கின்றவே

2549

சூழ்கின்ற கங்குல்‌ சுருங்கா இருளின்‌ கருந்திணிம்பை போழ்கின்ற திங்கள்‌ அம்பிள்ளையும்‌ போழ்க துழாய்‌ மலர்க்கே தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன்‌ மாமைக்கு இன்று வாழ்கின்றவாறு இதுவோ? வந்து தோன்றிற்று வாலியதே

2550

வால்‌ வெண்ணிலவு உலகாரச்‌ சுரக்கும்‌ வெண்திங்கள்‌ என்னும்‌ பால்‌ விண்‌ சுரவி சுரமுதிர்‌ மாலை பரிதி வட்டம்‌ போலும்‌ சுடர்‌ அடலாழிப்‌ பிரான்‌ பொழில்‌ ஏழளிக்கும்‌ சால்பின்‌ தகைமை கொலாம்‌? தமியாட்டி தளர்ந்ததுவே

2551

தளர்ந்தும்‌ முறிந்தும்‌ வரு திரைப்‌ பாயல்‌ திரு நெடுங்கண்‌ வளர்ந்தும்‌ அறிவுற்றும்‌ வையம்‌ விழுங்கியும்‌ மால்‌ வரையைக்‌ கிளர்ந்துமறி தரக்‌ கீண்டெடுூத்தான்‌ முடி சூடூ துழாய்‌ அளைந்துண்‌ சிறு பசுந்தென்றல்‌ அந்தோ! வந்து உலாகின்றதே

2552

உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம்‌ ஆவியை ஊடுருவக்‌ குலாகின்ற வெஞ்சிலை வாள்‌ முகத்தீர்‌! குனி சங்கிடறிப்‌ புலாகின்ற வேலைப்‌ புணரி அம்பள்ளி அம்மான்‌ அடியார்‌ நிலாகின்ற வைகுந்தமோ? வையமோ? நும்‌ நிலை இடமே

2553

இடம்‌ போய்‌ விரிந்து இவ்வுலகளந்தான்‌ எழிலார்‌ தண்துழாய்‌ வடம்‌ போதினையும்‌ மட நெஞ்சமே! நங்கள்‌ வெள்வளைக்கே விடம்‌ போல்‌ விரிதல்‌ இது வியப்பே? வியன்‌ தாமரையின்‌ தடம்‌ போது ஒடுங்க மெல்லாம்பல்‌ அலர்விக்கும்‌ வெண்திங்களே

2554

திங்களம்பிள்ளை புலம்ப தன்‌ செங்கோல்‌ அரசு பட்ட செங்களம்‌ பற்றி நின்றெள்கு புன்மாலை தென்பால்‌ இலங்கை வெங்களம்‌ செய்த நம்‌ விண்ணோர்‌ பிரானார்‌ துழாய்‌ துணையா நங்களை மாமை கொள்வான்‌ வந்து தோன்றி நலிகின்றதே

2555

நலியும்‌ நரகனை வீட்டிற்றும்‌ வாணன்‌ திண்தோள்‌ துணித்த வலியும்‌ பெருமையும்‌ யாம்‌ சொல்லும்‌ நீர்த்தல்ல மை வரை போல்‌ பொலியும்‌ உருவிற்‌ பிரானார்‌ புனை பூந்துழாய்‌ மலர்க்கே மெலியும்‌ மட நெஞ்சினார்‌ தந்து போயின வேதனையே

2556

பவேவேதனை வெண்புரி நூலனை விண்ணோர்‌ பரவ நின்ற நாதனை ஞாலம்‌ விழுங்கும்‌ அநாதனை ஞாலந்தத்தும்‌ பாதனைப்‌ பாற்கடல்‌ பாம்பணை மேல்‌ பள்ளி கொண்டூ அருளும்‌ சீதனையே தொழுவார்‌ விண்ணுளாரிலும்‌ சீரியரே

2557

சீர்‌ அரசாண்டு தன்‌ செங்கோல்‌ சில நாள்‌ செலீஇக்கழிந்த பார்‌ அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த பேரரசே! எம்‌ விசும்பரசே! எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே! அருளாய்‌ இருளாய்‌ வந்து உறுகின்றதே

2558

உருகின்ற கன்மங்கள்‌ மேலன ஓர்ப்பிலராய்‌ இவளைப்‌ பெருகின்ற தாயர்‌ மெய்‌ நொந்து பெறார்‌ கொல்‌? துழாய்‌ குழல்‌ வாய்த்‌ துறுகின்றிலர்‌ தொல்லை வேங்கடமாட்டவும்‌ சூழ்கின்றிலர்‌ இருகின்றதால்‌ இவள்‌ ஆகம்‌ மெல்லாவி எரி கொள்ளவே

2559

எரி கொள்‌ செந்நாயிறு இரண்டுடனே உதயம்‌ மலை வாய்‌ விரிகின்ற வண்ணத்த எம்பெருமான்‌ கண்கள்‌ மீண்டு அவற்றுள்‌ எரி கொள்‌ செந்தீ வீழசுரரைப்‌ போல எம்போலியர்க்கும்‌ விரிவ சொல்லீர்‌ இதுவோ? வையம்‌ முற்றும்‌ விளரியதே

2560

விளரிக்‌ குரல்‌ அன்றில்‌ மென்படை மேகின்ற முன்றில்‌ பெண்ணை முளரிக்‌ குரம்பை இது இதுவாக முகில்‌ வண்ணன்‌ பேர்‌ கிளரிக்‌ கிளரிப்‌ பிதற்றும்‌ மெல்லாவியும்‌ நைவும்‌ எல்லாம்‌ தளரில்‌ கொலோ? அறியேன்‌ உய்யலாவது இத்தையலுக்கே

2561

தையல்‌ நல்லார்கள்‌ குழாங்கள்‌ குழிய குழுவின்‌ உள்ளும்‌ ஐய நல்லார்கள்‌ குழிய விழவினும்‌ அங்கு அங்கெல்லாம்‌ கைய பொன்னாழி வெண்சங்கொடும்‌ காண்பான்‌ அவாவுவன்‌ நான்‌ மைய வண்ணா! மணியே! முத்தமே! என்தன்‌ மாணிக்கமே!

2562

மாணிக்கம்‌ கொண்டு குரங்கெறி ஒத்து இருளோடு முட்டி ஆணிப்பொன்‌ அன்ன சுடர்‌ படூ மாலை உலகளந்த மாணிக்கமே! என்‌ மரதகமே! மற்றொப்பாரை இல்லா ஆணிப்‌ பொன்னே! அடியேனடி ஆவி அடைக்கலமே!

2563

அடைக்கலத்து ஓங்கு கமலத்து அலர்‌ அயன்‌ சென்னி என்னும்‌ முடைக்‌ கலத்தூண்‌ முன்‌ அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்‌ படைக்கலம்‌ ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன்தாம்புகளால்‌ புடைக்கு அலந்தானை' எம்மானை என்‌ சொல்லிப்‌ புலம்புவனே?

2564

புலம்பும்‌ கனகுரல்‌'?! போழ்வாய அன்றிலும்‌ பூங்கழி பாய்ந்து அலம்பும்‌ கனகுரல்‌ சூழ்‌ திரை ஆழியும்‌ ஆங்கு அவை நின்‌ வலம்புள்ளது நலம்‌ பாடும்‌ இது குற்றமாக வையம்‌ சிலம்பும்படி செய்வதே? திருமால்‌ இத்திருவினையே

2565

திருமால்‌ உருவொக்கும்‌ மேரு அம்மேருவில்‌ செஞ்சுடரோன்‌ திருமால்‌ திருக்கைத்‌ திருச்சக்கரம்‌ ஒக்கும்‌ அன்ன கண்டும்‌ திருமால்‌ உருவோடு அவன்‌ சின்னமே பிதற்றா நிற்பது ஓர்‌ திருமால்‌ தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும்‌ தீவினையே?

2566

தீவினைக்கு அரு நஞ்சை நல்வினைக்கு இன்னமுதத்தினை பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது ஆவினை மேய்க்கும்‌ வல்லாயனை அன்றுலகு ஈரடியால்‌ தாவின ஏற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே?

2567

தலைப்பெய்து யான்‌ உன்‌ திருவடிச்‌ சூடும்‌ தகைமையினால்‌ நிலைப்பெய்த ஆக்கைக்கு நோற்ற இம்மாயமும்‌ மாயம்‌ செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமையும்‌ காண்தோறு அசுரர்‌ குழாம்‌ தொலைப்பெய்த நேமி எந்தாய்‌! தொல்லை ஊழி சுருங்கலதே

2568

சுருங்குறி வெண்ணெய்‌ தொடு உண்ட கள்வனை வையம்‌ முற்றும்‌ ஒருங்குற உண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு இருங்குறளாகி இசைய ஓர்‌ மூவடி வேண்டிச்‌ சென்ற பெருங்கிறியானை அல்லால்‌ அடியேன்‌ நெஞ்சம்‌ பேணலதே

2569

பேணலம்‌ இல்லா அரக்கர்‌ முந்நீர பெரும்‌ பதிவாய்‌ நீள்நகர்‌ நீளெரி வைத்தருளாய்‌ என்று நின்னை விண்ணோர்‌ தாள்‌ நிலம்‌ தோய்ந்து தொழுவர்‌ நின்‌ மூர்த்தி பல்‌ கூற்றிலொன்று காணலுமாங்கொல்‌? என்றே வைகல்‌ மாலையும்‌ காலையுமே

2570

காலை வெய்யோற்கு முன்னோட்டுக்‌ கொடுத்த கங்குல்‌ குறும்பர்‌ மாலை வெய்யோன்‌ பட வையகம்‌ பாவுவர்‌ அன்ன கண்டும்‌ காலை நல்ஞானத்‌ துறை படிந்தாடிக்‌ கண்‌ போது செய்து மாலை நல்நாவில்‌ கொள்ளார்‌ நினையார்‌ அவன்‌ மைப்படியே

2571

மைப்படி மேனியும்‌ செந்தாமரைக்‌ கண்ணும்‌ வைதிகரே மெய்ப்படியால்‌ உன்‌ திருவடிச்‌ சூடும்‌ தகைமையினார்‌ எப்படி ஊராமிலைக்கக்‌ குருட்டாமிலைக்கும்‌ என்னும்‌ அப்படி யானும்‌ சொன்னேன்‌ அடியேன்‌ மற்று யாதென்பனே?

2572

யாதானும்‌ ஒர்‌ ஆக்கையில்‌ புக்கு அங்கு ஆப்புண்டும்‌ ஆப்பவிழ்ந்தும்‌ மூதாவியில்‌ தடுமாறும்‌ உயிர்‌ முன்னமே அதனால்‌ யாதானும்‌ பற்றி நீங்கும்‌ விரதத்தை நல்‌ வீடு செய்யும்‌ மாதாவினைப்‌ பிதுவை திருமாலை வணங்குவனே

2573

வணங்கும்‌ துறைகள்‌ பல பல ஆக்கி மதி விகற்பால்‌ பிணங்கும்‌ சமயம்‌ பல பல ஆக்கி அவை அவை தோறு அணங்கும்‌ பல பல ஆக்கி நின்‌ மூர்த்தி பரப்பி வைத்தாய்‌ இணங்கு நின்னோரை இல்லாய்‌! நின்கண்‌ வேட்கை எழுவிப்பவே ௦

2574

எழுவதும்‌ மீண்டே படுவதும்‌ பட்டு எனை ஊழிகள்‌ போய்க்‌ கழிவதும்‌ கண்டு கண்டு எள்கல்‌ அல்லால்‌ இமையோர்கள்‌ குழாம்‌ தொழுவதும்‌ சூழ்வதும்‌ செய்‌ தொல்லை மாலைக்‌ கண்ணாரக்‌ கண்டூ கழிவதோர்‌ காதல்‌ உற்றார்க்கும்‌ உண்டோ கண்கள்‌ துஞ்சுதலே?

2575

துஞ்சா முனிவரும்‌ அல்லாதவரும்‌ தொடர நின்ற எஞ்சாப்‌ பிறவி இடர்‌ கடிவான்‌ இமையோர்‌ தமக்கும்‌ தன்‌ சார்வு '' இலாத தனிப்பெரு மூர்த்தி தன்‌ மாயம்‌ செவ்வே நெஞ்சால்‌ நினைப்பரிதால்‌ வெண்ணெய்‌ ஊணென்னும்‌ ஈனச்‌ சொல்லே

2576

ஈனச்‌ சொல்‌ ஆயினுமாக எறி திரை வையம்‌ முற்றும்‌ ஏனத்து உருவாய்‌ இடந்த பிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌ வானத்தவர்க்கும்‌ அல்லாதவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ ஞானப்‌ பிரானை அல்லால்‌ இல்லை நான்‌ கண்ட நல்லதுவே

2577

நல்லார்‌ நவில்‌ குருகூர்‌ நகரான்‌ திருமால்‌ திருப்பேர்‌ வல்லார்‌ அடிக்கண்ணி சூடிய மாறன்‌ விண்ணப்பம்‌ செய்த சொல்லார்‌ தொடையல்‌ இந்நூறும்‌ வல்லார்‌ அழுந்தார்‌ பிறப்பாம்‌ பொல்லா அருவினை மாயவன்‌ சேற்று அள்ளல்‌ பொய்ந்நிலத்தே 100 தச௪க அடிவரவு: பொய்‌ அரியன சூட்டு இசை என்றும்‌ மலை வாசகம்‌ ஊழி உறுகின்ற சுருங்கு செக்கர்‌ நம்மாழ்வார்‌ திருவடிகளே ஷரணம்‌