நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் - யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து !
நான்முகன் திருவந்தாதி
திருமழிசை ஆழ்வார் · இயற்பா
Essence of this decad
திருமழிசை ஆழ்வார் அருளிய தொண்ணூற்றாறு பாசுரங்கள். "நான்முகனை நாராயணன் படைத்தான்" என்று தொடங்கி, படைப்பின் வரிசையை நிலைநாட்டுகிறார். எவர் முதல்வர் என்னும் வினாவிற்குத் தயக்கமின்றி விடையளிக்கும் நூல் இது. தர்க்கமும் பக்தியும் ஒன்றையொன்று வலுப்படுத்தும் விதம் இதன் தனிச்சிறப்பு.
தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் ஆரும் அறியார் அவன் பெருமை - ஒரும் பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும் அருள் முடிவது ஆழியான் பால்
பாலில் கிடந்ததுவும் பண்டரங்கம் மேயதுவும் ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார்? - ஞாலத்து ஒரு பொருளை வானவர் தம் மெய்ப்பொருளை அப்பில் அருபொருளை யான் அறிந்தவாறு
ஆறு சடைக் கரந்தான் அண்டர் கோன் தன்னோடும் கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே - வேறொருவர் இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து
தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம் வகிர்த்த வளையுகிர் தோள் மாலே! - உகத்தில் ஒரு நான்று நீ உயர்த்தி உள் வாங்கி நீயே அருநான்கும் ஆனாய் அறி
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார் ஈனவரே ஆதலால் இன்று
இன்றாக நாளையே ஆக இனிச் சிறிதும் நின்றாக நின் அருள் என் பாலதே - நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே! நீ என்னை அன்றி இலை
இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா - குலை கொண்ட ஈரைந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை
குறை கொண்டூ நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி - கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு
ஆங்காரவாரம் அது கேட்டூ அழல் உமிழும் பூங்கார் அரவணையான் பொன்மேனி - யாம் காண வல்லமே அல்லமே? மாமலரான் வார்சடையான் வல்லரே அல்லரே? வாழ்த்து
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால் - சூழ்த்த வாங்கினையே துழாய் மன்னு நீள்முடி என் தொல்லை மால் தன்னை வழா வண்கை கூப்பி மதித்து
மதித்தாய்போய் நான்கின் மதியார் போய் வீழ மதித்தாய் மதிகோள் விடுத்தாய் - மதித்தாய் மடக் கிடந்த மாமுதலை கோள் விடூப்பான் ஆழி விடற்கிரண்டூம் போய் இரண்டின் வீடூ
வீடாக்கும் பெற்றி அறியாது மெய் வருத்திக் கூடாக்கி நின்றுண்டு கொண்டுூழல்வீர்! - வீடாக்கும் மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு நற்பொருள் தான் நாராயணன்
நாராயணன் என்னை ஆளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் தன் - பேரான பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டூ ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்
பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில் மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை
நிலை மன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக - பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால்
ஆல நிழற்கீழ் அற நெறியை நால்வர்க்கு மேலை உகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் - ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டூ கூறாகக் கீறிய கோள் அரியை - வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் அன்றே - உவந்து எம்மைக் ' சாற்றி ஆழியான் காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம் ஈப்பாயும் எவ்வுயிர்க்கும் நீ
நீயே உலகெல்லாம் நின் அருளே நிற்பனவும் நீயே தவத் தேவ தேவனும் - நீயே எரி சுடரும் மால் வரையும் எண்திசையும் அண்டத்து இருசுடரும் ஆய இவை
இவையா! பிலவாய் திறந்தெரி கான்ற இவையா! எரி வட்டக் கண்கள் - இவையா! எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு
அழகியான் தானே அரியுருவன் தானே பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த் தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே மீனாய் உயிரளிக்கும் வித்து
வித்து மிட வேண்டூங்கொல்லோ? விடை அடர்த்த பத்தி உழவன் பழம்புனத்து - மொய்த்தெழுந்த கார்மேகம் அன்ன கருமால் திருமேனி நீர் வானம் காட்டும் நிகழ்ந்து
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார்வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீயப் - புகழ்ந்தாய் சினப் போர்ச் சுவேதனைச் சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும் வகையால் வருவது ஒன்றுண்டே - வகையால் வயிரம் குழைத்துண்ணும் மாவலி தான் என்னும் வயிர வழக்கொழித்தாய் மற்று
மற்றுத் தொழுவார் ஒருவரையும் யான் இன்மை கற்றைச் சடையான் கரிக் கண்டாய் - எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா! யான் உன்னைக் கண்டு கொள்கிற்குமாறு
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும் பேறாகக் கொள்வனோ? பேதைகாள்! - நீறாடி தான் காண மாட்டாத தாரகலச் சேவடியை யான் காண வல்லேற்கு இது
இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் - இது இலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்தார் இராவணனை ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு
உகப்புருவன் தானே ஒளி உருவன் தானே மகப்புருவன் தானே மதிக்கில் - மிகப்புருவம் ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால் அன்றிக்கொண்டு எய்தான் அவன்
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில் அவன் என்னை எய்தாமல் காப்பான் - அவன் என்னது உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே வெள்ளத்தரவணையின் மேல்
மேல் நான்முகன் அரனை இட்ட விடூ சாபம் தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் - வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள்! பிறக்கும் கருமாயம் பேசின் கதை
கதைப் பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள உதைப்பளவு போது போக்கின்றி - வதைப் பொருள் தான் வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ ஆய்ந்த குணத்தான் அடி
அடிச் சகடம் சாடி அரவாட்டி யானை பிடித்தொசித்துப் பேய் முலை நஞ்சுண்டு - வடிப் பவள வாய்ப் பின்னை தோளிக்கா வல்லேற்று எருத்திறுத்து கோப்பின்னுமானான் குறிப்பு
குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த குறிப்பு எனக்கு நன்மை பயக்க - வெறுப்பனோ? வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல் தான் கடத்தும் தன்மையான் தாள்
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்? வாளா கிடந்தருளும் வாய்திறவான் - நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான் ஐந்தலைவாய் நாகத்தணை
நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத்தணை அரங்கம் பேரன்பில் - நாகத் தணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தனாவான்
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு தான் உலவு வெங்கதிரும் தண்மதியும் - மேல் நிலவு கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் அண்டந்திருமாலகைப்பு
அகைப்பில் மனிசரை ஆறு சமயம் புகைத்தான் பொருகடல் நீர் வண்ணன் - உகைக்கு மேல் எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போதொழியும் அழைப்பு
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட - மழைப்பேர் அருவி மணி வரன்றி வந்திழிய யானை வெருவி அரவொடுங்கும் வெற்பு
வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் - கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
காணலுறுகின்றேன் கல்லருவி முத்துதிர ஓண விழவில் ஒலி அதிர - பேணி வருவேங்கடவா! என் உள்ளம் புகுந்தாய் திருவேங்கடம் அதனைச் சென்று
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை நின்று வினை கெடுக்கும் நீர்மையால் - என்றும் கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும் அடிக்கமலம் இட்டூ ஏத்தும் அங்கு
மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் - திங்கள் சுடையேற வைத்தானும் தாமரை மேலானும் 70. வரண்டி குடையேறத் தாம் குவித்துக் கொண்டு
கொண்டூ குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட அரக்கன் தலை தாளால் - பண்டெண்ணி போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே போம் குமரருள்ளீர்! புரிந்து
புரிந்து மலர் இட்டுப் புண்டரீகப் பாதம் பரிந்து படூகாடூ நிற்ப - தெரிந்தெங்கும் தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு
வைப்பன் மணி விளக்கா மாமதியை மாலுக்கென்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை - எப்பாடூம் வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே நாடூ வளைத்தாடூது'' மேல் நன்று
நன்மணி வண்ணஞூர் ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும் - பன்மணி நீ ரோடு பொருதுருளும் கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய்வினை நோய் தீர்ப்பதுவும் - வேங்கடமே தானவரை வீழத் தன் ஆழிப் படை தொட்டூ வானவரைக் காப்பான் மலை
மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தலையாமை தான் ஒரு கை பற்றி - அலையாமல் பீறக் கடைந்த பெருமான் திருநாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று
கூற்றமும் சாரா கொடூவினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன் - ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு
எனக்காவார் ஆர் ஒருவரே? எம்பெருமான் தனக்காவான் தானே மற்றல்லால் - புனக்காயா வண்ணனே! உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை?
விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்றுண்பர் தலைக்காட்பலி திரிவர் தக்கோர் - முலைக் கால் விடம் உண்ட பவேவேந்தனையே வேறா ஏத்தாதார் கடமுண்டார் கல்லாதவர்
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் - பொல்லாத தேவரைத் தேவர் அல்லாரை திருவில்லாத் தேவரைத் தேறேல்மின் தேவு
தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் - யாவராய் நிற்கின்றதெல்லாம் நெடுமால் என்று ஓராதார் கற்கின்றதெல்லாம் கடை
கடை நின்றமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற இன்பத்தராவர் - புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே! நின் அடியை யார் ஓத வல்லார் அவர்?
அவர் இவர் என்றில்லை அனங்க வேள் தாதைக்கு எவரும் எதிர் இல்லை கண்டீர் - உவரிக் கடல் நஞ்சமுண்டான் கடன் என்று வாணற்கு உடன் நின்று தோற்றான் ஒருங்கு
ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான் பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில் - மருங்கிருந்த வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்னெஞ்சம் ஆனவர் தாம் அல்லாததென்?
என்னெஞ்ச மேயான் இருள் நீக்கி எம்பிரான் மன்னஞ்ச முன்னொரு நாள் மண் அளந்தான் - என்னெஞ்ச மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து ஆயனுக்கு ஆக்கினேன் அன்பு
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனுக்கு இன்பாவாய் எல்லாமும் நீயாவாய் - பொன்பாவை கேள்வா! கிளரொளி என் கேசவனே! கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நானாள்
ஆட்பார்த்து உழி தருவாய் கண்டு கொள் என்றும் நின் தாட்பார்த்து உழி தருவேன் தன்மையை - கேட்பார்க்கு அரும்பொருளாய் நின்ற அரங்கனே! உன்னை விரும்புவதே விள்ளேன் மனம்
மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் - எனக்கே தான் இன்றொன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான் சென்றொன்றி நின்ற திரு
திரு நின்ற பக்கம் திறவிதென்று ஓரார் கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் - திருவிருந்த மார்வன் சிரீதரன் தன் வண்டூலவு தண் துழாய் தார் தன்னைச் சூடித் தரித்து
தரித்திருந்தேனாகவே தாரா கணப் போர் விரித்துரைத்த வெந்நாகத்துன்னை - தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக் காதானை ஆதிப்பெருமானை - நாதானை நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது
சூதாவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை மாதாய மாயவனை' மாதவனை - யாதானும் வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து இல்லையோ சொல்லீர் இடம்?
இடமாவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு பட நாகணை நெடிய மாற்கு - திடமாக வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான் வையேன் ஆட்செய்யேன் வலம்
வலமாக மாட்டாமை தானாக வைகல் குலமாக குற்றம் தானாக - நலமாக நாரணனை நாபதியை ஞானப் பெருமானை சீரணனை ஏத்தும் திறம்
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன் தூதுவரைக் கூவிச் செவிக்கு
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம் புவிக்கும் புவி அதுவே கண்டீர் - கவிக்கு நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில் மறைப் பொருளும் அத்தனையே தான்
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடூத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் - யான் ஒருவன் இன்றா அறிகின்றேன் அல்லேன் இருநிலத்தைச் சென்றாங்கடிப்படுத்த சேய்
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற - மாயன் அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஞ்ஞானமில்
இல்லறம் இல்லேல்'' துறவறம் இல்லென்னும் சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல - நல்லறம் ஆவனவும் நால்வேத மாத்தவமும் நாரணனே ஆவது ஈதன்று என்பாரார்?
ஆரே அறிவார்? அனைத்துலகும் உண்டூ உமிழ்ந்த பேராழியான் தன் பெருமையை - கார் செறிந்த கண்டத்தான் எண்கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி
பதிப் பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி மதித்தடைந்த வாளரவந்தன்னை - மதித்தவன் தன் வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை அல்லது ஒன்று ஏத்தாது என் நா
நாக்கொண்டுூ மானிடம் பாடேன் நலமாகத் தீக்கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் - பூக்கொண்டு வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு
பாட்டும் முறையும் படூகதையும் பல்பொருளும் ஈட்டிய தீயும் இருவிசும்பும் - கேட்ட மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் தன மாயையில் பட்டதற்பு
தற்பென்னைத் தான் அறியானேலும் தடங்கடலைக் கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் - எற்கொண்ட வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான் எவ்வினையும் மாயுமால் கண்டு
கண்டூ வணங்கினார்க்கு என்னாங்கொல்? காமன் உடல் கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த - வண்டலம்பும் தாரலங்கல் நீள்முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங் காரலங்கல் ஆனமையால் ஆய்ந்து
ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால் வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் - ஏய்ந்த தம் மெய்குந்தமாக விரும்புவரே தாமும் தம் வைகுந்தம் காண்பார் விரைந்து
விரைந்து அடைமின் மேலொரு நாள் வெள்ளம் பரக்க கரந்துலகம் காத்தளித்த கண்ணன் - பரந்துலகம் பாடின ஆடின கேட்டு படூ நரகம் வீடின வாசற்கதவு
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் குதையும் வினை ஆவி தீர்ந்தேன் - விதையாக நல்தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய் கற்ற மொழியாகிக் கலந்து
கலந்தான் என் உள்ளத்துக் காமவேள் தாதை நலந்தானும் ஈதொப்பதுண்டே? - அலர்ந்தலர்கள் இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்றிவர்கள் விட்டேத்த மாட்டாத வேந்து
ஒேவந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் மாந்தராய் மாதாய் மற்றெல்லாமாய் - சார்ந்தவர்க்குத் தன்னால் தான் நேமியான் மால்வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர்
பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் தன்னோடூ எதிர்வன் அவன் எனக்கு நேரான் - அதிரும் கழற்கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில்
தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்த பொழுது எனக்கு மற்றதுவே போதும் - கழிசினத்த வல்லாளன் வானரக்? கோன் வாலி மதனழித்த வில்லாளன் நெஞ்சத்துளன்
உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமனென்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன் கண்டாய் தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு' என்னொப்பார்க்கு ஈசனிமை
இமையப் பெருமலை போல் இந்திரனார்க்கு இட்ட சமய விருந்துண்டு ஆர் காப்பார்? - சமயங்கள் கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடூ உண்டான் உலகோடுூ உயிர்
உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போதோடி அயர்வென்ற தீர்ப்பான் பேர் பாடி - செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது
பழுதாகாது ஒன்றறிந்தேன் பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் - தொழுவாரை கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு
வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான் பால்திருந்த வைத்தாரே பல்மலர்கள் - மேல் திருந்த வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்றவர்க்கே தாழ்வாய் இருப்பார் தமர்
தமர் ஆவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும் அழரர்க்கும் ஆடரவத்தார்க்கும் . அழரர்கள் தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து ! தமியேற்கும் ஆடரவார்த்தாற்கும் நின்றும் இருந்தும் நெடுமாலை - என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்றிருப்பன் ஆப்பு அங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை கொடூத்தளித்த கோனே! குணப் பரனே! உன்னை விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்
மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறானார் நீறாக கை தெளிந்து காட்டிக் களப்படுத்து - பை தெளிந்த பாம்பின் அணையாய்! அருளாய் அடியேற்கு மேவம்பும் கறியாகுமேன்று
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் அமரர்க்கு அமராமை - ஆன்றேன் கடன் நாடும் மண்ணாடூம் கைவிட்டு மேலை இட நாடூ காண இனி
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான்! உன்னை - இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கறிந்தேன் நான் படட தசக அடிவரவு: நான்முகன் வாழ்த்துக இவை மேல் காணல் எனக்கு மனக்கேதம் சேயன் கதவு தமராவார் பொய்ந்நின்ற திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்