தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவான் பொன்னேய் நெய்யொடு பாலழுதுண்டு ஒருபுள்ளுவன் பொய்யே தவழும் மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
3-1. தன்னேராயிரம்
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
தன்னைப் போன்ற ஆயிரம் பிள்ளைகளுடன் தளர்நடை இட்டு வரும் கண்ணனை யசோதை வருணிக்கிறாள். நெய்யும் பாலும் திருடி உண்டுவிட்டு, ஒன்றும் அறியாதவன் போல் பொய்யாகத் தவழ்கிறான் என்கிறாள். கன்றைத் தூக்கி விளாமரத்தில் எறிந்தது போன்ற அவனது செயல்களையும் இடையிடையே சொல்கிறாள். குறும்பும் வலிமையும் ஒரே உடலில் இருக்கும் வியப்பு இப்பதிகம் முழுதும் நிறைந்திருக்கிறது.
பெரியாழ்வார் திருமொழி 3-1 தன்னேராயிரம் (யசோதைப் பிராட்டி கண்ணனது அதிமானுவு சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)
பொன்போல் மஞ்சனமாட்டி அழுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால் வன்பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கிருந்து மின்போல் நுண்ணிடையாள் ஒருகன்னியை வேற்றுருவம் செய்து வைத்த அன்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து இன்று நீ வந்தாய் ர் இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
மையார் கண்ட மடவாய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் கொய்யார் பூந்துகில் பற்றித் தனி நின்று குற்றம் பலபல செய்தாய் பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ புத்தகத்துக்குள கேட்டேன் ஐயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
முப்போதும் கடைந்தீண்டிுய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி கப்பாலாயர்கள் காவிற் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி 33 மெய்ப்பாலுண்டழு பிள்ளைகள் போல நீ விம்மி விம்மி அழுகின்ற அப்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
கரும்பார் நீள்வயல் காய்கதிர்ச் செந்நெலைக் கற்றா நிறை மண்டித் தின்ன விரும்பாக் கன்றொன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே சுரும்பார் மென்குழல் கன்னி ஒருத்திக்குச் சூழ்வலை வைத்துத் திரியும் அரம்பா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
மருட்டார் மென்குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம்பாடி சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி பொருட்டாயமிலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றமல்லால் மற்றிங்கு அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து தோளாலிட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய் கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
தாய்மார் மோர்விற்கப் போவர் தமப்பன்மார் கற்றா நிறைப் பின்பு போவர் நீ ஆய்ப்பாடி இளங்கன்னிமார்களை நேர் படவே கொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
தொத்தார் பூங்குழல் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்து இரானாழிகை மூவேழு சென்ற பின் வந்தாய் ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் அத்தா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
காரார்மேனி நிறத்தெம்பிரானைக் கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி ஆரா இன்னமுதுண்ணத் தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம் பாரார் தொல்புகழான் புதுவை மன்னன் பட்டர் பிரான் சொன்ன பாடல் ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே