வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை இடராழி நீங்குகவே என்று !
முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் · இயற்பா
Essence of this decad
முதலாழ்வார்களுள் முதல்வரான பொய்கையாழ்வார் அருளிய நூறு பாசுரங்கள். "வையம் தகளியா, வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக" — உலகையே அகலாகவும், கடலை நெய்யாகவும், கதிரவனைச் சுடராகவும் கொண்டு ஞானத் தீபம் ஏற்றுவதாகத் தொடங்குகிறார். மண்ணும் நீரும் ஒளியும் சேர்ந்து ஒரு விளக்காகும் அப்படிமமே இந்நூலின் திறவுகோல். அந்தாதி முறையில், ஒவ்வொரு பாசுரத்தின் இறுதிச்சொல் அடுத்ததைத் தொடங்குகிறது.
என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது? ஒன்றும் அதனை உணரேன் நான் - அன்று அது அடைத்து உடைத்து கண் படத்த ஆழி இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்
பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடூத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே - சூருருவின் பேயளவு கண்ட பெருமான்! அறிகிலேன் நீயளவு கண்ட நெறி
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து பொறி வாசல் போர்க்கதவம் சார்த்தி - அறிவானாம் ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த ஆலம் அமர் கண்டத்தரன்
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி உரை நூல் மறை உறையும் கோயில் - வரை நீர் கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி உருவம் எரி கார் மேனி ஒன்று
ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான் இன்று மறப்பனோ? ஏழைகாள்! - அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்து இசையும் கருமங்கள் எல்லாம் - அசைவில் சீர்க் கண்ணன் நெடூமால் கடல் கடைந்த காரோத வண்ணன் படைத்த மயக்கு
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறிகதிரோன் தன்னை - முயங்கு அமருள் தேராழியால் மறைத்தது என்? நீ திருமாலே! போராழிக் கையால் பொருது
பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே - விரிதோட்ட சேவடியை நீட்டித் திசை நடூங்க விண் துளங்க மாவடிவின் நீ அளந்த மண்
மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும் விண்ணும் விழுங்கியது மெய் என்பர் - எண்ணில் அலகளவு கண்ட சீராழியாய்க்கு அன்று இவ் வுலகளவும் உண்டோ? உன் வாய்
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா - பேய் முலை நஞ்சு ஊணாக உண்டான் உருவொடூ பேர் அல்லால் காணா கண் கேளா செவி
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் - அவியாத ஞானமும் வேள்வியும் நல் அறமும் என்பரே ஏனமாய் நின்றாற்கு இயல்வு
இயல்வாக ஈந்துழாயான் அடிக்கே செல்ல முயல்வார் இயல் அமரர் முன்னம் - இயல்வாக நீதியாலோதி நியமங்களால் பரவ ஆதியாய் நின்றார் அவர்
அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி இவரிவர் எம்பெருமான் என்று - சுவர் மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த மூர்த்தி உருவே முதல்
முதலாவார் மூவரே அம்மூவர் உள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் - முதலாய நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து பல்லார் அருளும் பழுது
பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன் அரவணை மேல் கண்டூ - தொழுதேன் கடலோதம் கால் அலைப்பக் கண் வளரும் செங்கண் அடலோத வண்ணர் அடி
அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது என்பர் - வடி உகிரால் ஈர்ந்தான் இரணியனது ஆகம் இருஞ்சிறைப் புள் ஊர்ந்தான் உலகளந்த நான்று
நான்ற முலைத் தலை நஞ்சுண்டூ உறி வெண்ணெய் தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை - ஊன்றி பொருதுடைவு' கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால்
மாலும் கருங்கடலே! என் நோற்றாய்? வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான் - கோலக் கரு மேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறள் உருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால் - நற்றா மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால்' நின்று
நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால் சென்று திசை அளந்த செங்கண்மாற்கு - என்றும் படை ஆழி புள்ளுர்தி பாம்பணையான் பாதம் அடை ஆழி நெஞ்சே! அறி
அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன் பொருதிடைவு புள் பொறிகொள் சிறை உவணம் ஊர்ந்தாய் - வெறி கமழும் காம்பேய் மெந்தோளி கடை வெண்ணெய் உண்டாயை தாம்பே கொண்டூ ஆர்த்த தழும்பு
தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை தழும்பிருந்த தாள் சகடம் சாடி - தழும்பிருந்த பூங்கோதையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பு இடந்த வீங்கோத வண்ணர் விரல்
விரலோடூ வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டூ ஆய்ச்சி உரலோடூ உறப் பிணித்த நான்று - குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே? ஓங்கோத வண்ணா! உரை
உரை மேல் கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் வரை மேல் மரதகமே போல - திரை மேல் கிடந்தானைக் கீண்டானை கேழலாய்ப் பூமி இடந்தானை ஏத்தி எழும்
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் - தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று - கொலை யானைப் போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும் கார்க்கோடூ பற்றியான் கை
கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ணத்து ஐய! மலர்மகள் நின் ஆகத்தாள் - செய்ய மறையான் நின் உந்தியான் மாமதிள் மூன்றெய்த இறையான் நின் ஆகத்து இறை
இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் - பிறை மருப்பின் பைங்கண் மால் யானை படூ துயரம் காத்து அளித்த செங்கண் மால் கண்டாய் தெளி
தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீ௫இ ஞானத் தெளிதாக நன்குணர்வார் சிந்தை - எளிதாகத் தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே போய் நாடிக் கொள்ளும் புரிந்து
புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி அரி உருவும் ஆள் உருவுமாகி - எரி உருவ வண்ணத்தான் மார்பிடந்த மால் அடியை அல்லால் மற்று எண்ணத் தான் ஆமோ? இமை
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் - நமையாமல் ஆகத்து அணைப்பார் அணைவரே ஆயிர வாய் நாகத்தணையான் நகர்
நகரம் அருள் புரிந்து நான்முகற்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன் - பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியாலாம் பயன் அங்கென்?
என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகுண்டூ ஆலிலையில் முன் ஒருவனாய முகில்வண்ணா! - நின்னுருகிப் பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க்கண் ஆய்த் தாய் முலை தந்தவாறு!
ஆறிய அன்பில் அடியார் தம் ஆர்வத்தால் கூறிய குற்றமாக் கொள்ளல் நீ - தேறி நெடியோய்! அடி அடைதற்கன்றே ஈரைந்து முடியான் படைத்த முரண்
முரணை வலி தொலைதற்கு ஆமென்றே'? முன்னம் தரணி தனதாகத் தானே - இரணியனைப் புண் நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ மண் இரந்து கொண்ட வகை
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம்புனலும் ஏந்தி - திசை திசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண்சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்
ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை அடியே ் முரண பேர எறிந்த பெருமணியை - கார் உடைய மின் என்று புற்றடையும் வேங்கடமே மேல சுரர் எம்மெனு'' மாலதிடம்
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச - கிடந்ததுவும் நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே பேரோத வண்ணர் பெரிது
பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ வெருவிப் புனம் துறந்த வேழம் - இருவிசும்பில் மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேல் அசுரர் கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று
குன்றனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் இன்று முதலாக என் நெஞ்சே! - என்றும் புறன் உரையே ஆயினும் பொன்னாழிக் கையான் திறன் உரையே சிந்தித்திரு
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்? - திருமகள்' மேல் பாலோதம் சிந்தப் படநாகணைக் கிடந்த மாலோத வண்ணர் மனம்
மன மாசு தீரும் அறுவினையும் சாரா தனமாய தானே' கைகூடும் - புனமேய பூந்துமாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தாம் தொழா நிற்பார் தமர்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமர் உகந்தது எப்பேர் மற்றப்பேர் - தமர் உகந்து எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே அவ்வண்ணம் ஆழியானாம்
ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க நாமே அறிகிற்போம் நல்நெஞ்சே! - பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள்முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு 45 '' எம்மென்ற / என்னென்ற / என்னென்னும்
பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற வெண்புரிநூல் மார்பன் வினை தீர - புண் புரிந்த ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் போகத்தால்' பூமி ஆள்வார்
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ - கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல்
கழல் ஒன்று எடூத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச - அழலும் செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே! மகிழ்"
மகிழ் அலகொன்றே போல் மாறும் பல்யாக்கை நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் - முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடுமுடி எம் ஆதி காண்பார்க்கும் அரிது
அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டூ ஆர்வம் புரியப்' பரிசினால் புல்கில் - பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண்கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது
எளிதில் இரண்டடியும் காண்பதற்கு என் உள்ளம் தெளியத் தெளிந்தொழியும் செவ்வே - களியில் பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய் இருந்தான் திருநாமம் எண்
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் வண்ண மலர் ஏந்தி வைகலும் - நண்ணி ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும் திருமாலைக் கை தொழுவர் சென்று
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் - என்றும் புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குடமுலை மற்குன்றம் - கரவின்றி விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டு கோத்தாடி உண்டூ அட்டெடூத்த செங்கண் அவன்
அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன் அவன் தமரே என்றொழிவது அல்லால் - நமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர்
பேரே வரப் பிதற்றல் அல்லால் எம் பெம்மானை ஆரே அறிவார்? அது நிற்க - நேரே கடிக் கமலத்து உள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன்
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான் - நயம் நின்ற நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் தொழுது
தொழுது மலர் கொண்டூ தூபம் கை ஏந்தி எழுதும் எழுவாழி நெஞ்சே! - பழுதின்றி மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கை தொழுவான் அந்தரம் ஒன்றில்லை அடை
அடைந்த அருவினையோடூ அல்லல் நோய் பாவம் மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் - நுடங்கிடையை முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள் தன் வில் அங்கை வைத்தான் சரண்
சரணா மறை பயந்த தாமரையானோடூ மரணாய மன்னுயிர்கட்கு எல்லாம் - அரணாய பேராழி கொண்ட பிரான் அன்றி மற்றறியாது ஏராழி சூழ்ந்த உலகு
உலகும் உலகிறந்த ஊழியும் ஒண்கேழ் விலகு கருங்கடலும் வெற்பும் - உலகினில் செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன் புந்தியிலாய புணர்ப்பு
புணர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து மணம் மருவ மால் விடை ஏழ் செற்று - கணம் வெருவ ஏழுலகும் தாயினவும் எண்திசையும் போயினவும் சூழ் அரவப் பொங்கணையான் தோள்
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் கேள் அவனது இன்மொழியே கேட்டிருக்கும் - நா நாளும் கோள் நாகணையான் குரைகழலே கூறுவதே நாணாமை நள்ளேன் நயம்
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் - வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் நம்'' மேல் வினை?
வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார் தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் - நினைதற்கு அரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண் கரியானைக் கை தொழுதக்கால்
காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்றுணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும் - வேலைக்கண் ஓராழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் பேராழி கொண்டான் பெயர்
பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு ஒண்பூ உயரும் கதிரவனே நோக்கும் -உயிரும் தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
உணர்வாரார் உன் பெருமை? ஊழி தோறூழி உணர்வாரார் உன் உருவம் தன்னை? - உணர்வாரார் விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப் பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்?
பாலன் தனது உருவாய் ஏழுலகுண்டூ ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் - ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ? சோலை சூழ் குன்றெடூத்தாய்! சொல்லு'
சொல்லுந்தனையும் தொழுமின் விழுமுடம்பு செல்லுந்தனையும் திருமாலை - நல்லிதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று
நன்று பிணி முப்புக் கையகற்றி நான்கு ஊழி நின்று நிலமுழுதும் ஆண்டாலும் - என்றும் விடல் ஆழி நெஞ்சமே! வேண்டினேன் கண்டாய் அடல் ஆழி கொண்டான் மாட்டூ அன்பு
அன்பு ஆழியானை அணுகென்னும் நா அவன் தன் பண்பாழித் தோள் பரவி ஏத்தென்னும் - முன்பு ஊழி காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும் பூணாரம் பூண்டான் புகழ்
புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழாயானை இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! - திகழ் நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும் உடலும் உயிரும் ஏற்றான்
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல் மணிவண்ணத்தான் - கூற்றொரு பால் மங்கையான் பூமகளான் வார்சடையான் நீள்முடியான் கங்கையான் நீள்கழலான் காப்பு
காப்பு உன்னை உன்னக் கழியும் அருவினைகள் ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் - மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே! நின் அடியை வந்திப்பார் காண்பர் வழி
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் - பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த சீரான் திருவேங்கடம்
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் - நான்கு இடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமாம் இடர்
இடர் ஆர் படுவார்? எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடூ முதலை சூழ்ந்த - படம் உடைய பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும் கொய்ந்நாகப் பூம்போது கொண்டூ 78 என் நெஞ்சே
கொண்டானை அல்லால் கொடுூத்தாரை யார் பழிப்பார்? மண் தா என இரந்து மாவலியை - ஒண் தாரை நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே? நீள்விசும்பில் ஆர் அங்கை தோய அடுத்து
அடூத்த கடம் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி படூத்த பெரும் பாழி சூழ்ந்த - விடத்தரவை வல்லாளன் கைக்கொடூுத்த மாமேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள்?
ஆளமர் வென்றி அடூகளத்துள் அஞ்ஞான்று வாளமர் வேண்டி வரை நட்டூ - நீள் அரவைச் சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே? தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை
படையாரும் வாட்கண்ணார் பாரசி நாள் பைம்பூந் தொடையலோடுூ ஏந்திய தூபம் - இடை இடையில் மீன் மாய மாசுணும் வேங்கடமே மேலொரு நாள் மான் மாய எய்தான் வரை
வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர் நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே! - உரவுடைய நீராழியுள் கிடந்து நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான்!
பிரான்! உன் பெருமை பிறர் ஆர் அறிவார்? உராய் உலகளந்த ஞான்று - வராகத்து எயிற்று அளவு போதாவாறு என் கொலோ? எந்தை அடிக்களவு போந்த படி
படி கண்டறிதியே? பாம்பணையினான் புள் கொடி கண்டறிதியே? கூறாய் - வடிவிற் பொறி ஐந்தும் உள் அடக்கிப் போதொடு நீர் ஏந்தி நெறி நின்ற நெஞ்சமே! நீ
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா - வாசல்' கடைகழியா உள் புகாக் காமர் பூங்கோவல் இடைகழியே பற்றி இனி
இனியார் புகுவார் எழு நரக வாசல்? முனியாது மூரித்தாள் கோமின் - கனி சாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு நன்கறிந்த நாவலஞ்சூழ் நாட
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள் தோறும் பாடிலும் நின் புகழே பாடூவன் - சூடிலும் பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடூவேற்கு என்னாகில் என்னே எனக்கு?
எனக்காவார் ஆர் ஒருவரே! எம்பெருமான் தனக்காவான் தானே மற்றல்லால் - புனக்காயாம் பூமேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ மாமேனி காட்டும் வரம்
வரத்தால் வலி நினைந்து மாதவ! நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே? - உரத்தினால் ஈரரியாய் நேர் வலியோனாய இரணியனை ஓரரியாய் நீ இடந்தது ஊன்
ஊனக்குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி ஞானச் சுடர்கொளீஇ நாள் தோறும் - ஏனத்து உருவாய் உலகிடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான்?
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய் தேனாகிப் பாலாம் திருமாலே! - ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை உமிழ்ந்த வயிறு 92.
வயிறழல வாளுருவி வந்தானை அஞ்ச எயிறிலக வாய் மடித்ததென் நீ? - பொறி உகிரால் பூவடிவை ஈடழித்த பொன்னாழிக் கையா! நின் சேவடி மேல் ஈடழியச் செற்று
செற்றெழுந்து தீவிழித்துச் சென்ற இந்த ஏழுலகும் மற்றிவை ஆவென்று வாய் அங்காந்து - முற்றும் மறையவற்குக்' காட்டிய மாயவனை அல்லால் இறையேனும் ஏத்தாது என் நா
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே - மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர் தீக்கதிக்கண் செல்லும் திறம்?
திறம்பாது என் நெஞ்சமே! செங்கண் மால் கண்டாய் அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் - புறம் தான் இம் மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே கண்டாய் கடைக்கட்பிடி
பிடி சேர் களிறளித்த பேராளா! உன்தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே - பொடி சேர் அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை மேல் பாய்ந்த புனற்கங்கை என்னும் பேர்ப்பொன்
பொன் திகழு மேனிப் புரிசடை அம்புண்ணியனும் நின்றுலகம் தாய நெடூமாலும் - என்றும் இருவரங்கத்தால் திரிவரேலும் ஒருவன் ஒருவன் அங்கத்து என்றும் உளன்
உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து - உளன் கண்டாய் வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என் நெஞ்சே! - ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண்துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை 100 தசக அடிவரவு: வையம் வாய் நின்று புரி குன்று எளிதில் உலகும் நன்று ஆள் ஊன் அன்பு பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்