Skip to the text
திருநெடுந்தாண்டகம்

திருநெடுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

திருமங்கையாழ்வாரின் முப்பது பாசுரங்கள் கொண்ட நெடுந்தாண்டகம். "மின்னுருவாய், முன்னுருவில் வேதம் நான்காய்" என்று மின்னலின் ஒளியாகவும் வேதங்களாகவும் இருப்பவனை விளித்துத் தொடங்குகிறது. திருமஞ்சனக் காலத்தில் சேவிக்கப்படும் மரபுடைய இந்நூல், தலைவி பாவனையிலும் நேரடி வேண்டுதலிலும் மாறிமாறிப் பேசுகிறது. இரண்டாம் ஆயிரம் இந்நூலுடன் நிறைவடைகிறது.

(முதல்‌ பத்துப்‌ பாசுரங்கள்‌ - ஆழ்வார்‌ தாமான தன்மையில்‌ அருளிச்‌ செய்தவை)

2052

மின்னுருவாய்‌ முன்னுருவில்‌ வேதம்‌ நான்காய்‌ (9 திருமஞ்சன காலத்தில்‌ சேவிக்கப்படுவது விளக்கொளியாய்‌ முளைத்தெழுந்த திங்கள்‌ தானாய்‌ பின்னுருவாய்‌ முன்னுருவில்‌ பிணி மூப்பு இல்லாப்‌ பிறப்பிலியாய்‌ இறப்பதற்கே எண்ணாது எண்ணும்‌ பொன்னுருவாய்‌ மணி உருவில்‌ பூதம்‌ ஐந்தாய்ப்‌ புனல்‌ உருவாய்‌ அனல்‌ உருவில்‌ திகழும்‌ சோதி தன்னுருவாய்‌ என்னுருவில்‌ நின்ற எந்தை தளிர்‌ புரையும்‌ திருவடி என்‌ தலை மேலவே

2053

பாருருவில்‌ நீர்‌ எரி கால்‌ விசும்புமாகிப்‌ பல்‌ வேறு சமயமுமாய்ப்‌ பரந்து நின்ற ஏருருவில்‌ மூவருமே என்ன! நின்ற இமையவர்‌ தம்‌ திருவுரு வேறெண்ணும்‌ போது ஓருருவம்‌ பொன்னுருவம்‌ ஒன்று செந்தீ ஒன்று மாகடல்‌ உருவம்‌ ஒத்து நின்ற மூவுருவும்‌ கண்ட போது ஒன்றாம்‌ சோதி முகில்‌ உருவம்‌ எம்‌ அடிகள்‌ உருவந்தானே

2054

திருவடிவில்‌ கருநெடுமால்‌ சேயன்‌ என்றும்‌ திரேதைக்கண்‌ வளை உருவாய்த்‌ திகழ்ந்தான்‌ என்றும்‌ பெருவடிவில்‌ கடல்‌ அமுதம்‌ கொண்ட காலம்‌ பெருமானைக்‌ கருநீல வண்ணன்‌ தன்னை ஒரு வடிவத்து ஓர்‌ உருவென்று உணரலாகா! ஊழிதோறூழி நின்றேத்தல்‌ அல்லால்‌ கருவடிவில்‌ செங்கண்ண வண்ணன்‌ தன்னைக்‌ கட்டூரையே யார்‌ ஒருவர்‌ காண்கிற்பாரே?

2055

இ௭ந்திரற்கும்‌ பிரமற்கும்‌ முதல்வன்‌ தன்னை இருநிலம்‌ கால்‌ தீ நீர்‌ விண்‌ பூதம்‌ ஐந்தாய்‌ செந்திறத்த தமிழோசை வட சொல்லாகித்‌ திசை நான்குமாய்த்‌ திங்கள்‌ ஞாயிறாகி அந்தரத்தில்‌ தேவர்க்கும்‌ அறியலாகா அந்தணனை அந்தணர்‌ மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால்‌ மறவாது என்றும்‌ வாழுதியேல்‌ வாழலாம்‌ மட நெஞ்சமே!

2056

ஒண்மிதியில்‌ புனலுருவி ஒருகால்‌ நிற்ப ஒருகாலும்‌ காமருசீர்‌ அவுணன்‌ உள்ளத்து எண்மதியும்‌ கடந்து அண்ட மீது போகி இருவிசும்பினூடு போய்‌ எழுந்து மேலைத்‌ தண்மதியும்‌ கதிரவனும்‌ தவிர ஓடித்‌ என ! உணரலாகாது தாரகையின்‌ புறம்‌ தடவி அப்பால்‌ மிக்கு மண்‌ முழுதும்‌ அகப்படூத்து நின்ற எந்தை மலர்‌ புரையும்‌ திருவடியே வணங்கினேனே

2057

அலம்‌ புரிந்த நெடுந்தடக்கை அமரர்‌ வேந்தன்‌ அஞ்சிறைப்‌ புள்‌ தனிப்‌ பாகன்‌ அவுணர்க்கு என்றும்‌ சலம்‌ புரிந்து அங்கருள்‌ இல்லாத்‌ தன்மையாளன்‌ தான்‌ உகந்த ஊரெல்லாம்‌ தன்‌ தாள்‌ பாடி நிலம்‌ பரந்து வரும்‌ கலுழிப்‌ பெண்ணை ஈர்த்த நெடூவேய்கள்‌ படூமுத்த முந்த உந்தி புலம்‌ பரந்து பொன்‌ விளைக்கும்‌ பொய்கை வேலிப்‌ பூங்கோவலூர்‌ தொழுதும்‌ போது நெஞ்சே!

2058

வற்புடைய வரை நெடுந்தோள்‌ மன்னர்‌ மாள வடிவாய மழுவேந்தி உலகம்‌ ஆண்டு வெற்புடைய நெடூங்கடலுள்‌ தனிவேல்‌ உய்த்த வேள்‌ முதலா வென்றானூர்‌ விந்தை! மேய கற்புடைய மடக்கன்னி காவல்‌ பூண்ட கடிபொழில்‌ சூழ்‌ நெடுமறுகில்‌ கமல வேலி பொற்புடைய மலை அரையன்‌ பணிய நின்ற பூங்கோவலூர்‌ தொழுதும்‌ போது நெஞ்சே!

2059

நீரகத்தாய்‌! நெடுவரையின்‌ உச்சி மேலாய்‌! நிலாத்திங்கள்‌ துண்டத்தாய்‌! நிறைந்த கச்சி ஊரகத்தாய்‌ ஒண்துறை நீர்‌ வெஃகா உள்ளாய்‌! உள்ளுவார்‌ உள்ளத்தாய்‌! உலகம்‌ ஏத்தும்‌ காரகத்தாய்‌! கார்வானத்துள்ளாய்‌! கள்வா! காமரு பூங்காவிரியின்‌ தென்பால்‌ மன்னு பேரகத்தாய்‌! பேராது என்‌ நெஞ்சின்‌ உள்ளாய்‌! பெருமான்‌! உன்‌ திருவடியே பேணினேனே

2060

வங்கத்தால்‌ மாமணி வந்து உந்து முந்நீர்‌ மல்லையாய்‌! மதிள்‌ கச்சி ஊராய்‌! பேராய்‌! கொங்கத்தார்‌!' வளங்கொன்றை அலங்கல்‌ மார்வன்‌ குல வரையன்‌ மடப்பாவை இடப்பால்‌ கொண்டான்‌ பங்கத்தாய்‌! பாற்கடலாய்‌! பாரின்‌ மேலாய்‌! பனி வரையின்‌ உச்சியாய்‌! பவள வண்ணா! எங்குற்றாய்‌? எம்பெருமான்‌! உன்னை நாடி ஏழையேன்‌ இங்ஙனமே உழி தருகேனே! 9 விந்தம்‌

2061

பொன்னானாய்‌! பொழில்‌ ஏழும்‌ காவல்‌ பூண்ட புகழானாய்‌! இகழ்வாய தொண்டனேன்‌ நான்‌ என்னானாய்‌! என்னானாய்‌! என்னல்‌ அல்லால்‌ என்‌ அறிவன்‌ ஏழையேன்‌? உலகம்‌ ஏத்தும்‌ தென்னானாய்‌! வடவானாய்‌! குடபாலானாய்‌! குணபால மத யானாய்‌! இமையோர்க்கு என்றும்‌ முன்னானாய்‌! பின்னானார்‌ வணங்கும்‌ சோதி! திருமூழிக்களத்தானாய்‌! முதலானாயே! 10 (அடுத்த பத்துப்‌ பாசுரங்கள்‌ - தலைவனைப்‌ பிரிந்த தலைவியின்‌ ஆற்றாமை கண்ட தாய்‌ இரங்கிக்‌ கூறியவை)

2062

பட்டூடுக்கும்‌ அயர்த்திரங்கும்‌ பாவை பேணாள்‌ பனி நெடூங்கண்‌ நீர்‌ ததும்பப்‌ பள்ளி கொள்ளாள்‌ என்‌ துணைப்‌ போது என்‌ குடங்கால்‌ இருக்ககில்லாள்‌ எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே? என்னும்‌ மட்டூவிக்கி மணி வண்டு முரலும்‌ கூந்தல்‌ மடமானை இது செய்தார்‌ தம்மை மெய்யே கட்டூவிச்சி சொல்‌ என்னச்‌ சொன்னாள்‌ நங்காய்‌! கடல்‌ வண்ணர்‌ இது செய்தார்‌ காப்பார்‌ ஆரே?

2063

நெஞ்சுருகிக்‌ கண்‌ பனிப்ப நிற்கும்‌ சோரும்‌ நெடிதுயிர்க்கும்‌ உண்டறியாள்‌ உறக்கம்‌ பேணாள்‌ நஞ்சரவில்‌ துயில்‌ அமர்ந்த நம்பீ! என்னும்‌ வம்பார்‌ பூம்‌! வயலாலி மைந்தா! என்னும்‌ அஞ்சிறைய புட்கொடியே ஆடும்‌ பாடும்‌ அணி அரங்கம்‌ ஆடுதுமோ? தோழீ! என்னும்‌ என்‌ சிறகின்‌ கீழ்‌ அடங்காப்‌ பெண்ணைப்‌ பெற்றேன்‌ இருநிலத்து ஓர்‌ பழி படைத்தேன்‌ ஏ! பாவமே!

2064

கல்‌ எடுத்துக்‌ கல்மாரி காத்தாய்‌! என்றும்‌ காமரு பூங்கச்சி ஊரகத்தாய்‌! என்றும்‌ வில்‌ இறுத்து மெல்லியல்‌ தோள்‌ தோய்ந்தாய்‌! என்றும்‌ வெஃகாவில்‌ துயில்‌ அமர்ந்த வேந்தே! என்றும்‌ மல்‌ அடர்த்து மல்லரை அன்று அட்டாய்‌! என்றும்‌ மா கீண்ட கைத்தலத்து என்‌ மைந்தா! என்றும்‌ சொல்‌ எடுத்துத்‌ தன்‌ கிளியைச்‌ சொல்லே என்று துணை முலை மேல்‌ துளி சோரச்‌ சோர்கின்றாளே!

2065

முளைக்‌ கதிரைக்‌ குறுங்குடியுள்‌ முகிலை மூவா மூவுலகும்‌ கடந்து அப்பால்‌ முதலாய்‌ நின்ற ப அளப்பரிய ஆரமுதை அரங்கம்‌ மேய அந்தணனை அந்தணர்‌ தம்‌ சிந்தையானை விளக்கொளியை மரதகத்தைத்‌ திருத்தண்காவில்‌ வெஃகாவில்‌ திருமாலைப்‌ பாடக்‌ கேட்டு வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ வருக என்று மடக்‌ கிளியைக்‌ கை கூப்பி வணங்கினாளே

2066

கல்‌ உயர்ந்த நெடுமதிள்‌ சூழ்‌ கச்சி மேய களிறு என்றும்‌ கடல்‌ கிடந்த கனியே! என்றும்‌ அல்லியம்‌ பூமலர்ப்‌ பொய்கைப்‌ பழனவேலி அணியழுந்தூர்‌ நின்று உகந்த அம்மான்‌! என்றும்‌ சொல்‌ உயர்ந்த நெடூுவீணை முலை மேல்‌ தாங்கித்‌ தூமுறுவல்‌ நகை இறையே தோன்றநக்கு மெல்விரல்கள்‌ சிவப்பு எய்தத்‌ தடவி ஆங்கே மென்கிளி போல்‌ மிக மிழற்றும்‌ என்‌ பேதையே

2067

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்‌! என்றும்‌ கடிபொழில்‌ சூழ்‌ கணபுரத்து என்‌ கனியே! என்றும்‌ மன்றமரக்‌ கூத்தாடி மகிழ்ந்தாய்‌! என்றும்‌ வடதிருவேங்கடம்‌ மேய மைந்தா! என்றும்‌ வென்றசுரர்‌ குலம்‌ களைந்த வேந்தே! என்றும்‌ விரிபொழில்‌ சூழ்‌ திருநறையூர்‌ நின்றாய்‌! என்றும்‌ துன்று குழல்‌ கருநிறத்து என்‌ துணையே! என்றும்‌ துணை முலை மேல்‌ துளி சோரச்‌ சோர்கின்றாளே!

2068

பொங்கார்‌ மெல்லிளம்‌ கொங்கை பொன்னே பூப்பப்‌ பொருகயல்‌ கண்‌ நீர்‌ அரும்பப்‌ போந்து நின்று செங்கால மடப்‌ புறவம்‌ பெடைக்குப்‌ பேசும்‌ சிறு குரலுக்கு உடல்‌ உருகிச்‌ சிந்தித்து ஆங்கே தண்காலும்‌ தண்குடந்தை நகரும்‌ பாடித்‌ தண்கோவலூர்‌ பாடி ஆடக்‌ கேட்டு நங்காய்‌! நங்குடிக்கு இதுவோ நன்மை? என்ன நறையூரும்‌ பாடூவாள்‌ நவில்கின்றாளே

2069

கார்வண்ணம்‌ திருமேனி கண்ணும்‌ வாயும்‌ கைத்தலமும்‌ அடியிணையும்‌ கமல வண்ணம்‌ பார்வண்ண மடமங்கை பத்தர்‌ பித்தர்‌ பனிமலர்‌ மேல்‌ பாவைக்குப்‌ பாவம்‌ செய்தேன்‌ ர்‌ ஏர்‌ வண்ண என்‌ பேதை என்‌ சொல்‌ கேளாள்‌ எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே? என்னும்‌ நீர்வண்ணன்‌ நீர்மலைக்கே போவேன்‌ என்னும்‌ இதுவன்றோ நிறைவழிந்தார்‌ நிற்குமாறே!

2070

முற்றாரா வனமுலையாள்‌ பாவை மாயன்‌ மொய்யகலத்துள்‌ இருப்பாள்‌ அஃதும்‌ கண்டு அற்றாள்‌ தன்‌ நிறைவழிந்தாள்‌!! ஆவிக்கின்றாள்‌ அணி அரங்கம்‌ ஆடுதுமோ? தோழீ! என்னும்‌ பெற்றேன்‌ வாய்ச்‌ சொல்‌ இறையும்‌ பேசக்‌ கேளாள்‌ பேர்‌ பாடித்‌ தண்குடந்தை நகரும்‌ பாடி பொற்றாமரைக்‌ கயம்‌ நீராடப்‌ போனாள்‌ பொருவற்றாள்‌ என்‌ மகள்‌ உம்‌ பொன்னும்‌ அஃதே

2071

தேராளும்‌ வாள்‌ அரக்கன்‌ செல்வம்‌ மாளத்‌ தென்‌ இலங்கை முன்‌ மலங்கச்‌ செந்தீ ஒல்கி பேராளன்‌ ஆயிரம்‌ தோள்‌ வாணன்‌ மாளப்‌ பொருகடலை அரண்‌ கடந்து புக்கு மிக்க பாராளன்‌ பார்‌ இடந்து பாரை உண்டு பார்‌ உமிழ்ந்து பார்‌ அளந்து பாரை ஆண்ட பேராளன்‌ பேர்‌ ஓதும்‌ பெண்ணை மண்‌ மேல்‌ பெருந்தவத்தள்‌ என்றல்லால்‌ பேசலாமே? 20 (அடூத்த ஐந்து பாசுரங்கள்‌ - தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல்‌)

2072

மைவண்ண நறுங்குஞ்சி குழல்‌ பின்‌ தாழ மகரம்‌ சேர்‌ குழை இருபாடு இலங்கி ஆட எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இஇருவராய்‌ வந்தார்‌ என்‌ முன்னே நின்றார்‌ கை வண்ணம்‌ தாமரை வாய்‌ கமலம்‌ போலும்‌ கண்‌ இணையும்‌ அரவிந்தம்‌ அடியும்‌ அஃதே அவ்வண்ணத்தவர்‌ நிலைமை கண்டும்‌ தோழ்‌! அவரை நாம்‌ தேவர்‌ என்று அஞ்சினோமே!

2073

நைவளம்‌ ஒன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார்‌ போல்‌ இறையே நயங்கள்‌ பின்னும்‌ செய்வளவில்‌ என்‌ மனமும்‌ கண்ணும்‌ ஓடி எம்பெருமான்‌ திருவடிக்‌ கீழ்‌ அணைய இப்பால்‌ கை வளையும்‌ மேகலையும்‌ காணேன்‌ கண்டேன்‌ கனமகரக்‌ குழை இரண்டும்‌ நான்கு தோளும்‌ எவ்வளவுண்டு எம்பெருமான்‌ கோயில்‌? என்றேற்கு இதுவன்றோ எழிலாலி என்றார்‌ தாமே 22 நிறையழிந்தார்‌ ''! நிறையழிந்தாள்‌

2074

உள்ளூரும்‌ சிந்தை நோய்‌ எனக்கே தந்து என்‌ ஒளி வளையும்‌ மாநிறமும்‌ கொண்டார்‌ இங்கே தெள்ளூரும்‌ இளந்தெங்கின்‌ தேறல்‌ மாந்திச்‌ சேலுகளும்‌ திருவரங்கம்‌ நம்மூர்‌ என்னக்‌? கள்ளூரும்‌ பைந்துழாய்‌ மாலையானைக்‌ கனவிடத்தில்‌ யான்‌ காண்பன்‌ கண்ட போது புள்ளூரும்‌ கள்வா! நீ போகேல்‌ என்பன்‌ என்றாலும்‌ இது நமக்கோர்‌ புலவி தானே

2075

இருகையில்‌ சங்கிவை நில்லா எல்லே பாவம்‌! இஇலங்கொலி நீர்‌ பெரும்‌ பெளவம்‌ மண்டி உண்ட பெரு வயிற்ற கருமுகிலே ஒப்பர்‌ வண்ணம்‌ பெருந்தவத்தர்‌ அருந்தவத்து முனிவர்‌ சூழ ஒரு கையில்‌ சங்கு ஒரு கை மற்றாழி ஏந்தி உலகுண்ட பெரு வாயர்‌ இங்கே வந்து என்‌ பொருகயற்‌ கண்‌ நீர்‌ அரும்பப்‌ புலவி தந்து புனல்‌ அரங்கம்‌ ஊரென்று போயினாரே

2076

மின்னிலங்கு திருவுருவும்‌ பெரிய தோளும்‌ கரி முனிந்த கைத்தலமும்‌ கண்ணும்‌ வாயும்‌ தன்னலர்ந்த நறுந்துழாய்‌ மலரின்‌ கீழே தாழ்ந்திலங்கு மகரம்‌ சேர்‌ குழையும்‌ காட்டி என்‌ நலனும்‌ என்‌ நிறைவும்‌ என்‌ சிந்தையும்‌ என்‌ வளையும்‌ கொண்டு என்னை ஆளும்‌ கொண்டு பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப்‌ பொழிலின்‌ ஊடே புனல்‌ அரங்கம்‌ ஊரென்று போயினாரே 25 (வண்டு விடு தூது)

2077

தேமருவு பொழில்‌ இடத்து மலர்ந்த போதைத்‌ தேனதனை வாய்‌ மடுத்து உன்‌ பெடையும்‌ நீயும்‌ பூ மருவி இனிதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறு வண்டே! தொழுதேன்‌ உன்னை ஆமருவி நிரை மேய்த்த அமரர்‌ கோமான்‌ அணியழுந்தூர்‌ நின்றானுக்கு இன்றே சென்று நீ மருவி அஞ்சாதே நின்று ஓர்‌ மாது நின்‌ நயந்தாள்‌ என்று இறையே இயம்பிக்‌ காணே 26 (நாரை விடு தூது)

2078

செங்கால மட நாராய்‌! இன்றே சென்று திருக்கண்ணபுரம்‌ புக்கு என்‌ செங்கண்‌ மாலுக்கு என்‌ காதல்‌ என்‌ துணைவர்க்கு உரைத்தியாகில்‌ இது ஒப்பது எமக்கு இன்பம்‌ இல்லை நாளும்‌ பைங்கானம்‌ ஈதெல்லாம்‌ உனதே ஆகப்‌ பழனமீன்‌ கவர்ந்து உண்ணத்‌ தருவன்‌ தந்தால்‌ இங்கே வந்து இனிதிருந்து உன்‌ பெடையும்‌ நீயும்‌ இருநிலத்தில்‌ இனிதின்பம்‌ எய்தலாமே 27 (பறவைகளைத்‌ தூது விடுத்த தலைவி தலைவன்‌ வரக்‌ காணாமையால்‌ அவனைப்‌ பற்றி ஊடல்‌ கொண்டு தோழிக்குக்‌ கூறிய பாசுரம்‌)

2079

தென்னிலங்கை அரண்‌ சிதறி அவுணன்‌ மாளச்‌ சென்று உலகம்‌ மூன்றினையும்‌ திரிந்தோர்‌ தேரால்‌ மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின்‌ மாகளிற்றைத்‌ தோழீ! என்தன்‌ பொன்னிலங்கு முலைக்‌ குவட்டில்‌ பூட்டிக்‌ கொண்டு போகாமை வல்லேனாய்ப்‌ புலவி எய்தி என்னிலங்கம்‌ எல்லாம்‌ வந்து இன்பம்‌ எய்த எப்பொழுதும்‌ நினைந்து உருகி இருப்பன்‌ நானே 28 (அடூத்த இரண்டு பாசுரங்கள்‌ - ஆழ்வார்‌ தாமான தன்மையில்‌ அருளிச்‌ செய்தவை)

2080

அன்றாயர்‌ குலமகளுக்கு அரையன்‌ தன்னை அலை கடலைக்‌ கடைந்தடைத்த அம்மான்‌ தன்னை குன்றாத வலி அரக்கர்‌ கோனை மாளக்‌ கொடுஞ்சிலை வாய்ச்‌ சரம்‌ துரந்து குலம்‌ களைந்து வென்றானை குன்றெடுத்த தோளினானை விரிதிரை நீர்‌ விண்ணகரம்‌ மருவி நாளும்‌ நின்றானை தண்‌ குடந்தைக்‌ கிடந்த மாலை நெடியானை அடிநாயேன்‌ நினைந்திட்டேனே

2081

மின்னுமா மழை தவழும்‌ மேகவண்ணா! விண்ணவர்‌ தம்‌ பெருமானே! அருளாய்‌ என்று அன்னமாய்‌ முனிவரோடு அமரர்‌ ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான்‌ தன்னை மன்னுமா மணிமாட மங்கை வேந்தன்‌ மானவேல்‌ பரகாலன்‌ கலியன்‌ சொன்ன பன்னிய நூல்‌ தமிழ்‌ மாலை வல்லார்‌ தொல்லைப்‌ பழவினையை முதலரிய வல்லார்‌ தாமே

அடிவரவு: மின்‌ பார்‌ திருவடிவில்‌ இந்திரற்கும்‌ ஒண்மிதி அலம்‌ வற்பு நீரகம்‌ வங்கத்தால்‌ பொன்‌ பட்டு நெஞ்சு கல்‌ முளை கல்லுயர்ந்த கன்று பொங்கு கார்‌ முற்று தேராளும்‌ மை நைவளம்‌ உள்ளூரும்‌ இருகை மின்‌ தேமருவு செங்கால தென்னிலங்கை அன்றாயர்‌ மின்னுமா வையம்‌ திருமங்கையாழ்வார்‌ திருவடிகளே சரணம்‌