Skip to the text
பெரிய திருமொழி

11-8. மாற்றமுள!

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன்" — மறுப்பு வரலாம் என்று தெரிந்தும் சொல்லத் தொடங்கும் பதிகம். "மக்கள் தோற்றக் குழியில் மீண்டும் என்னைத் தோற்றுவிப்பாயோ?" என்று ஆழ்வார் நேரடியாகக் கேட்கிறார். மீண்டும் பிறக்க வேண்டாம் என்ற வேண்டுதலை இவ்வளவு வெளிப்படையாகக் கேட்பது அரிது. பெரிய திருமொழி இக்கேள்வியுடன் நிறைவடைகிறது.

பெரிய திருமொழி 11-8 - மாற்றமுள! (தேஹ சம்பந்தத்தை அறுத்துத்‌ தந்தருள வேண்டூம்‌' என்று ஆழ்வார்‌ எம்பெருமானைப்‌ ப்ரார்த்தித்தல்‌)

2022

மாற்றமுள ஆகிலும்‌ சொல்லுவன்‌ மக்கள்‌ தோற்றக்‌ குழி தோற்றுவிப்பாய்‌ கொல்‌? என்று இன்னம்‌ ஆற்றங்கரை வாழ்‌ மரம்‌ போல அஞ்சுகின்றேன்‌ நாற்றச்‌ சுவை ஊறு ஒலியாகிய நம்பீ!

2023

சீற்றமுள ஆகிலும்‌ செப்புவன்‌ மக்கள்‌ தோற்றக்‌ குழி தோற்றுவிப்பாய்‌ கொல்‌ என்று அஞ்சி காற்றத்து இடைப்பட்ட கலவர்‌ மனம்‌ போல ஆற்றத்‌ துளங்கா நிற்பன்‌ ஆழி வலவா!

2024

தூங்கார்‌ பிறவிக்கள்‌ இன்னம்‌ புகப்பெய்து வாங்காய்‌ என்று சிந்தித்து நான்‌ அதற்கு அஞ்சி ர பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற்‌ போல்‌ தாங்காது உள்ளம்‌ தள்ளும்‌ என்‌ தாமரைக்‌ கண்ணா!

2025

உருவார்‌ பிறவிக்கள்‌ இன்னம்‌ புகப்பெய்து திரிவாய்‌ என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி இருபாடு எரி கொள்ளியின்‌ உள்‌ எறும்பே போல்‌ உருகா நிற்கும்‌ என்‌ உள்ளம்‌ ஊழி முதல்வா!

2026

கொள்ளக்‌ குறையாத இடும்பைக்‌ குழியில்‌ தள்ளி புகப்பெய்தி கொல்‌? என்று அதற்கு அஞ்சி வெள்ளத்து இடைப்பட்ட நரியினம்‌ போலே உள்ளம்‌ துளங்கா நிற்பன்‌ ஊழி முதல்வா!

2027

படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம்‌ மடை நின்று அலரும்‌ வயலாலி மணாளா! ர்‌ இடையன்‌ எறிந்த மரமே ஒத்திராமே அடைய அருளாய்‌ எனக்கு உந்தன்‌ அருளே

2028

வேம்பின்‌ புழு வேம்பன்றி உண்ணாது அடியேன்‌ நான்‌ பின்னும்‌ உன்‌ சேவடி அன்றி நயவேன்‌ தேம்பல்‌ இளந்திங்கள்‌ சிறை விடுத்து ஐவாய்ப்‌ பாம்பின்‌ அணைப்‌ பள்ளி கொண்டாய்‌ பரஞ்சோதி!

2029

அணியார்‌ பொழில்‌ சூழ்‌ அரங்க நகரப்பா! துணியேன்‌ இனி நின்‌ அருள்‌ அல்லது எனக்கு ர மணியே! மணி மாணிக்கமே! மதுசூதா! பணியாய்‌ எனக்கு உய்யும்‌ வகை பரஞ்சோதீ!

2030

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்‌ எந்தாய்‌! தொண்டரானவர்க்கு இன்னருள்‌ செய்வாய்‌ சந்தோகா! தலைவனே! தாமரைக்‌ கண்ணா! அந்தோ! அடியேற்கு அருளாய்‌ உன்னருளே

2031

குன்றம்‌ எடுத்து ர ஆனிரை காத்தவன்‌ தன்னை மன்றில்‌! புகழ்‌ மங்கை மன்‌ கலிகன்றி சொல்‌ ர்‌ ஒன்று நின்ற ஒன்பதும்‌ வல்லவர்‌ தம்‌ மேல்‌ என்றும்‌ வினையாயின சாரகில்லாவே

அடிவரவு: மாற்றம்‌ சீற்றம்‌ தூங்கார்‌ உருவார்‌ கொள்ள படை வேம்பின்‌ மலி அணியார்‌ நந்தா குன்றம்‌ நிதியினை திருமங்கையாழ்வார்‌ திருவடிகளே சரணம்‌