Skip to the text
பெரியாழ்வார் திருமொழி

2-9. வெண்ணெய்விழுங்கி

பெரியாழ்வார் · முதலாயிரம்

Essence of this decad

ஆய்ச்சியர் யசோதையிடம் முறையிடும் பதிகம். "வெண்ணெயை விழுங்கிவிட்டு வெறுங்கலத்தை மலைமேல் எறிந்து ஓசை கேட்கிறான்; உன் மகனை நீயே காத்துக்கொள்" என்கிறார்கள். இல்லம் புகுந்து மகளைக் கூவி, கையிலிருந்த வளையைக் கழற்றிக்கொண்டு ஓடுகிறான் என்று குற்றம் சாட்டுகிறார்கள். குறை சொல்வதுபோலவே "வருக வருக வாமன நம்பீ" என்று அழைக்கும் அன்பும் அதனுள் ஒளிந்திருக்கிறது.

பெரியாழ்வார்‌ திருமொழி 2-9 வெண்ணெய்விழுங்கி (வெண்ணெய்‌ களவாடல்‌ முதலிய பாலக்ரீடை வர்ணனம்‌)

202

வெண்ணெய்‌ விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்கும்‌ கண்ண பிரான்‌ கற்ற கல்வி தன்னைக்‌ காக்ககில்லோம்‌ உன்‌ மகனைக்‌ காவாய்‌ புண்ணில்‌ புளிப்பெய்தால்‌ ஒக்கும்‌ தீமை புரை புரையால்‌ இவை செய்ய வல்ல அண்ணற்கண்ணானோர்‌ மகனைப்‌ பெற்ற அசோதை நங்காய்‌ உன்‌ மகனைக்‌ கூவாய்‌

203

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே கரியகுழல்‌ செய்யவாய்‌ முகத்துக்‌ காகுத்த நம்பீ வருக இங்கே அரியனிவன்‌ எனக்கு இன்று நங்காய்‌ அஞ்சன வண்ணா அசலகத்தார்‌ பரிபவம்‌ பேசத்‌ தரிக்ககில்லேன்‌ பாவியேனுக்கு இங்கே போதராயே

204

திருவுடைப்‌ பிள்ளை தான்‌ தீயவாறு தேக்கம்‌ ஒன்றுமிலன்‌ தேசுடையன்‌ உருக வைத்த குடத்தொடு வெண்ணெய்‌ உறிஞ்சி உடைத்திட்டுப்‌ போந்து நின்றான்‌ அருகிருந்தார்‌ தம்மை அநியாயம்‌ செய்வது தான்‌ வழக்கோ அசோதாய்‌ வருகவென்று உன்மகன்‌ தன்னைக்‌ கூவாய்‌ வாழவொட்டான்‌ மதுசூதனனே

205

கொண்டல்‌ வண்ணா இங்கே போதராயே கோயிற்‌ பிள்ளாய்‌ இங்கே போதராயே தெண்‌ திரைகூழ்‌ திருப்பேர்க்‌ கிடந்த திருநாரணா இங்கே போதராயே உண்டு வந்தேன்‌ அம்மம்‌ என்று சொல்லி ஓடி அகம்புக ஆய்ச்சி தானும்‌ கண்டெதிரே சென்றெடுத்துக்‌ கொள்ளக்‌ கண்ணபிரான்‌ கற்ற கல்வி தானே (க)

206

பாலைக்‌ கறந்து அடுப்பேற வைத்துப்‌ பல்வளையாள்‌ என்‌ மகள்‌ இருப்ப மேலையகத்தே நெருப்பு வேண்டிச்‌ சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்‌ ர்‌ சாளக்கிராமம்‌ உடைய நம்பி சாய்த்துப்‌ பருகிட்டூப்‌ போந்து நின்றான்‌ ஆலைக்‌ கரும்பின்‌ மொழி அனைய அசோதை நங்காய்‌ உன்மகனைக்‌ கூவாய்‌

207

போதர்‌ கண்டாய்‌ இங்கே போதர்‌ கண்டாய்‌ போதரேன்‌ என்னாதே போதர்‌ கண்டாய்‌ ஏதேனும்‌ சொல்லி அசலகத்தார்‌ ஏதேனும்‌ பேச நான்‌ கேட்க மட்டேன்‌ கோதுகலமுடைக்‌ குட்டனேயோ குன்றெடூத்தாய்‌ குடமாடு கூத்தா வேதப்‌ பொருளே என்‌ வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே

208

செந்நெலரிசி சிறுபருப்புச்‌ செய்த அக்காரம்‌ நறுநெய்‌ பாலால்‌ பன்னிரண்டு திருவோணம்‌ அட்டேன்‌ பண்டும்‌ இப்பிள்ளை பரிசறிவன்‌ இன்னமுகப்பன்‌ நான்‌ என்று சொல்லி எல்லாம்‌ விழுங்கிட்டூப்‌ போந்து நின்றான்‌ உன்மகன்‌ தன்னை அசோதை நங்காய்‌ கூவிக்‌ கொள்ளாய்‌ இவையும்‌ சிலவே

209

கேசவனே இங்கே போதராயே கில்லேன்‌ என்னாது இங்கே போதராயே நேசமிலாதார்‌ அகத்திருந்து நீ விளையாடாதே போதராயே தூசனம்‌ சொல்லும்‌ தொழுத்தைமாரும்‌ தொண்டரும்‌ நின்ற இடத்தில்‌ நின்று தாய்‌ சொல்லுக்‌ கொள்வது தன்மம்‌ கண்டாய்‌ தாமோதரா இங்கே போதராயே

210

கன்னலில்‌ அட்டூவத்தோடு சீடை காரெள்ளின்‌ உண்டை கலத்திலிட்டு என்னகமென்று நான்‌ வைத்துப்‌ போந்தேன்‌ இவன்‌ புக்கு அவற்றைப்‌ பெறுத்திப்‌ போந்தான்‌ பின்னும்‌ அகம்‌ புக்கு உறியை நோக்கிப்‌ பிறங்கொளி வெண்ணெயும்‌ சோதிக்கின்றான்‌ உன்மகன்‌ தன்னை அசோதை நங்காய்‌ கூவிக்‌ கொள்ளாய்‌ இவையும்‌ சிலவே

211

சொல்லிலரசிப்படுதி நங்காய்‌ சூழலுடையன்‌ உன்பிள்ளை தானே இல்லம்‌ புகுந்து என்மகளைக்‌ கூவிக்‌ கையில்‌ வளையைக்‌ கழற்றிக்‌ கொண்டு கொல்லையில்‌ நின்றும்‌ கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவற்‌ பழங்கள்‌ கொண்டு நானல்லேன்‌ என்று சிரிக்கின்றானே

212

வண்டு களித்திரைக்கும்‌ பொழில்‌ சூழ்‌ வருபுனல்‌ காவிரித்‌ தென்னரங்கன்‌ பண்டவன்‌ செய்த கிரீடை எல்லாம்‌ பட்டர்பிரான்‌ விட்டுசித்தன்‌ பாடல்‌ கொண்டிவை பாடிக்‌ குனிக்க வல்லார்‌ கோவிந்தன்‌ தன்‌ அடியார்களாகி எண்‌ திசைக்கும்‌ விளக்காகி நிற்பார்‌ இணையடி என்‌ தலை மேலனவே