Skip to the text
பெரிய திருமொழி

11-4. நிலையிடம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

நிற்க இடமின்றி நெடுவெள்ளம் உம்பர் உலகையும் மூட, இமையோர்கள் தலையிட இடமின்றித் தவித்த ஊழிக்காலத்தை நினைவுகூரும் பதிகம். அனைவரும் இடமிழந்தபோது இடம் தந்தவன் அவனே. புகலிடம் என்பது ஓர் இடம் அல்ல, ஒருவர் என்பதை இப்பதிகம் காட்டுகிறது.

பெரிய திருமொழி 11-4 - நிலையிடம்‌ (அவதாரங்களின்‌ மகிமை)

1982

நிலையிடம்‌ எங்கும்‌ இன்றி நெடுவெள்ளம்‌ உம்பர்‌ வளநாடு மூட இமையோர்‌ தலையிட மற்றெமக்கு ஓர்‌ சரண்‌ இல்லை என்ன அரணாவன்‌ என்னும்‌ அருளால்‌ ர அலைகடல்நீர்‌ குழம்ப அகடாட ஒடி அகல்வானுரிஞ்ச முதுகில்‌ மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என்‌ மனனே!

1983

செருமிகு வாளெயிற்ற அரவொன்று சுற்றித்‌ திசை மண்ணும்‌ விண்ணும்‌ உடனே வெருவர வெள்ளை வெள்ளம்‌ முழுதும்‌ குழம்ப இமையோர்கள்‌ நின்று கடைய பருவரை ஒன்று நின்று முதுகில்‌ பரந்து சுழலக்‌ கிடந்து துயிலும்‌ அருவரை அன்ன தன்மை அடல்‌ ஆமை ஆன திருமால்‌ நமக்கு ஓர்‌ அரணே

1984

தீதறு திங்கள்‌ பொங்கு சுடரும்பர்‌ உம்பர்‌ உலகேழினோடும்‌ உடனே மாதிர மண்‌ சுமந்த வடகுன்றும்‌ நின்ற மலையாறும்‌ ஏழுகடலும்‌ பாதமர்‌ சூழ்‌ குளம்பின கமண்டலத்தின்‌ ஒருபால்‌ ஒடூங்க வளர்சேர்‌ ஆதிமுன்‌ ஏனமாகி அரணாய மூர்த்தி அது நம்மை ஆளும்‌ அரசே

1985

தளையவிழ்‌ கோதை மாலை இருபால்‌ தயங்க எரிகான்றிரண்டு தறுகண்‌ அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன்‌ சினங்களவிழ வளையுகிராளி மொய்ம்பின்‌ மழறவோனதாகம்‌ மதியாது சென்றொருகிரால்‌ பிளவெழ விட்ட குட்டமது வையமுடு பெருநீரின்‌ மும்மை பெரிதே

1986

வெந்திறல்‌ வாணன்‌ வேள்வியிடம்‌ எய்தி அங்கு ஓர்‌ குறளாகி மெய்ம்மை உணர செந்தொழில்‌ வேத நாவின்‌ முனியாகி வையம்‌ அடி மூன்று இரந்து பெறினும்‌ மந்திரமீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன்‌ வணங்க வளர்‌ சேர்‌ அந்தரம்‌ ஏழினூடு செல உய்த்த பாதமது நம்மை ஆளும்‌ அரசே

1987

இருநில மன்னர்‌ தம்மை இருநாலும்‌ எட்டூம்‌ ஒருநாலும்‌ ஒன்றும்‌ உடனே செருநுதலூடு போகி அவர்‌ ஆவி மங்க மழுவாளில்‌ வென்ற திறலோன்‌ பெருநில மங்கை மன்னர்‌ மலர்மங்கை நாதர்‌ புலமங்கை கேள்வர்‌ புகழ்‌ சேர்‌ பெருநிலம்‌ உண்டு உமிழ்ந்த பெருவாயராகி அவர்‌ நம்மை ஆள்வர்‌ பெரிதே

1988

இலைமலி பள்ளி எய்தி இது மாயம்‌ என்ன இனமாய மான்‌ பின்‌ எழில்‌ சேர்‌ அலைமலி வேற்கணாளை அகல்விப்பதற்கு ஓர்‌ உருவாய மானை அமையா கொலைமலி எய்துவித்த கொடியோன்‌ இலங்கை பொடியாக வென்றி அமருள்‌ சிலைமலி செஞ்சரங்கள்‌ செல உய்த்த நங்கள்‌ திருமால்‌ நமக்கு ஓர்‌ அரணே

1989

முன்‌ உலகங்கள்‌ ஏழும்‌ இருள்‌ மண்டியுண்ண முதலோடு வீடுமறியாது என்னிது? வந்தது என்ன இமையோர்‌ திகைப்ப எழில்‌ வேதமின்றி மறைய பின்னும்‌! வானவர்க்கும்‌ முனிவர்க்கும்‌ நல்கி இருள்‌ தீர்ந்து இவ்வையம்‌ மகிழ அன்னமதாய்‌ இருந்து அங்கு அறநூல்‌ உரைத்த அது நம்மை ஆளும்‌ அரசே

1990

துணைநிலை மற்றெமக்கு ஒருளதென்றிராது தொழுமின்கள்‌ தொண்டர்‌! தொலைய உண முலை முன்‌ கொடுத்த உரவோளதாவி !88 பின்னையும்‌ உகவுண்டு வெண்ணெய்‌ மருவி பணமுலை ஆயர்‌ மாதர்‌ உரலோடு கட்ட அதனோடும்‌ ஓடி அடல்‌ சேர்‌ இணை மருதிற்று வீழ நடை கற்ற தெற்றல்‌ வினை பற்றறுக்கும்‌ விதியே

1991

கொலைகெழு செம்முகத்த களிறொன்று கொன்று கொடியோன்‌ இலங்கை பொடியா சிலைகெழு செஞ்சரங்கள்‌ செல உய்த்த நங்கள்‌ திருமாலை வேலை புடை சூழ்‌ கலிகெழு மாடவீதி வயல்‌ மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்‌ ஒலிகெழு பாடல்‌ பாடி உழல்கின்ற தொண்டர்‌ அவர்‌ ஆள்வர்‌ உம்பர்‌ உலகே

அடிவரவு: நிலை செருமிகு தீதறு தளை வெந்திறல்‌ இருநிலம்‌ இலைமலி முன்‌ துணை கொலை மான்‌