மன்னிலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்து பொருகடல் சூழ் ர் தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு இது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே
11-3. மன்னிலங்கு
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
பாரதப் போரில் தேர் ஊர்ந்தவனையும், மாவலியைத் திண்மையான விலங்கில் வைத்தவனையும் நினைவுகூரும் பதிகம். ஒருவனுக்குத் தேரோட்டியாகவும், மற்றொருவனுக்குக் கட்டுப்படுத்துபவனாகவும் அவன் இருக்கிறான். எவரிடம் எப்படி நடக்க வேண்டுமோ அப்படியே நடப்பதே அவனுடைய நீதி.
பெரிய திருமொழி 11-3 - மன்னிலங்கு (தலைவி இரங்கிக் கூறிய பாசுரம் - அறத்தொடுறிற்றல்)
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர் பருந்தாட்களிற்றுக்கு அருள் செய்த செங்கண் ர் பெருந்தோள் நெடூுமாலைப் பேர் பாடி ஆட வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே!
அன்னே! இவரை அறிவன் மறை நான்கும் முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து பொன்னேய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து என்னே? இவர் எண்ணும் எண்ணம் அறியோமே
அறியோமே என்று உரைக்கலாமே? எமக்கு வெறியார் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி சிறியான் ஓர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார் நறுவெண்ணெய் உண்டுகந்தார் தம்மையே
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால் ர தம்மையே நாளும் வணங்கித் தொழுதிறைஞ்சி தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார்!' ஒளிவிசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்த்தாது மண்ணென்று இமையோர் தொழுதிறைஞ்சி!' கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கைவளைகள் என்னோ கழன்ற? இவை என்ன மாயங்கள்? பெண்ணானோம் பெண்மையோம் நிற்க அவன் மேய அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே
பாடோமே? எந்தை பெருமானை பாடி நின்று ஆடோமே? ஆயிரம் பேரானை பேர் நினைந்து சூடோமே? சூடும் துழாயலங்கல் சூடி நாம் கூடோமே? கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே!
நன்னெஞ்சே! நம்பெருமான் நாளும் இனிதமரும் அன்னம் சேர் கானல் அணியாலி கை தொழுது ர முன்னம் சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன் பொன்னஞ்சேர் சேவடி மேல் போதணியப் பெற்றோமே
பெற்றாரார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப் பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை கற்றார் ஓ! முற்றுலகாள்வர் இவை கேட்கல் உற்றார்க்கு உறுதுயர் இல்லை உலகத்தே 10 உற்றார் "' தொழுதேத்தி
அடிவரவு: மன்னிலங்கு இருந்தான் அன்னே அறியோம் தம்மை வைத்தார் கண்ணன் பாடோமே நன்னெஞ்சே பெற்றாரார் நிலை