குன்றம் ஒன்றெடுத்து ஏந்தி ர மாமழை அன்று காத்த அம்மான் அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ? தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன்?
11-1. குன்றமொன்று
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
குன்றமொன்றை ஏந்திப் பெருமழையிலிருந்து காத்த அம்மானையும், அரக்கரை வென்ற வில்லாளனையும் இணைத்துப் பாடும் பதிகம். மழையிலிருந்தும் பகையிலிருந்தும் காப்பது ஒரே செயலின் இரு வடிவங்கள். பதினொன்றாம் பத்து இக்காப்புக் காட்சியுடன் தொடங்குகிறது.
பெரிய திருமொழி 11-1 - குன்றமொன்று (பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறும் பாசுரம்)
காரும் வார்பனிக் கடலும் அன்னவன் தாரும் மார்வமும் கண்டதண்டமோ? சோருமாமுகில் துளியினூடு வந்து ஈரவாடை தான் ஈரும் என்னையே
சங்கும் மாமையும் தளரும் மேனி மேல் திங்கள் வெங்கதிர் சீறும் என் செய்கேன்? பொங்கு வெண்திரைப் புணரி வண்ணனார் கொங்கலார்ந்ததார் கூவும் என்னையே
அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று அங்கோர் தாய் உருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ? திங்கள் வெங்கதிர் சீறுகின்றதே
அங்கோர் ஆளரியாய் அவுணனை பங்கமா இரு கூறு செய்தவன் மங்குல் மாமதி வாங்கவே கொலோ? பொங்கு மாகடல் புலம்புகின்றதே
சென்று வார்சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ? முன்றில் பெண்ணை மேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர மேவி நின்று நான் கண்டதண்டமோ? வீவில் ஐங்கணை வில்லி அம்பு கோத்து ஆவியே இலக்காக எய்வதே!
மால் இனந்துழாய் வரும் என் நெஞ்சகம் மாலின் அந்துழாய் வந்து என்னுள் புக கோலவாடையும் கொண்டு வந்ததோர் ஆலி வந்ததால் அரிது காவலே
கெண்டையொண் கணும் துயிலும் என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகிலே
அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட்கலி கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே
அடிவரவு: குன்றம் காரும் சங்கு அங்கோராய் அங்கோராளரி சென்று பூவை மால் கெண்டை அன்று குன்றமெடூத்து