இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம் போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய்
2-8. இந்திரனோடு
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
மாலைப்பொழுதில் வீடு திரும்ப அழைக்கும் பதிகம். இந்திரனும் பிரமனும் ஈசனும் இமையவரும் மறைந்து நின்று மலர் தூவுகிறார்கள்; கன்றுகள் இல்லம் புகுந்து பசுக்கள் கதறுகின்றன. "அந்திப் பொழுதில் மன்றில் நிற்காதே; கஞ்சன் ஒரு பேயை உன் மேல் ஏவியிருக்கிறான் என்பர்" என்று தாய் எச்சரிக்கிறாள். மறையோர் சங்கில் நீர் கொண்டு வந்து நிற்கிறார்கள், சந்தி வணங்க வா என்றும் அழைக்கிறாள்.
பெரியாழ்வார் திருமொழி 2-8 இந்திரனோடு (கண்ணனை த்ருஷ்டிதோவஷும் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்)
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசுவெல்லாம் நின்றொழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் மன்றில் நில்லேல் அந்திப் போது மதிள் திருவெள்ளறை நின்றாய் நன்று கண்டாய் எந்தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்
செப்போது மென்முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டூ அப்போது நான் உரப்பப் போய் அடிசிலுமுண்டிலை ஆள்வாய் ர முப்போதும் வானவரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்
கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை என்றென்று எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய் வண்ணமே வேலையதொப்பாய் வள்ளலே காப்பிட வாராய்
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் ர நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு மஞ்சு தவழ் மணிமாட மதிள் திருவெள்ளறை நின்றாய் அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய்
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பிள்ளை அரசே நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய் பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்
இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே செம்பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் கம்பக் கபாலி காண் அங்குக் கடிதோடுிக் காப்பிட வாராய்
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய் உருக்காட்டும் அந்தி விளக்கு இன்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய்
போதமர் செல்வக் கொழுந்து புணர் திருவெள்ளறையானை மாதர்க்குயர்ந்த அசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம் வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை பாதப் பயன் கொள்ள வல்ல பத்தருள்ளார் வினை போமே