திருத்தாய் செம்போத்தே! திருமாமகள் தன் கணவன் மருத்தார் தொல்புகழ் மாதவனை வர திருத்தாய் செம்போத்தே!
10-10. திருத்தாய்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
செம்போத்துப் பறவையை விளித்து, திருமாமகளின் கணவனான மாதவனை வரவழைக்குமாறு வேண்டும் பதிகம். பறவைத் தூது மரபின் மற்றொரு வடிவம் இது. மனிதரிடம் சொல்ல முடியாததைப் பறவையிடம் சொல்லும் நிலையே இதன் பின்னணி.
பெரிய திருமொழி 10-10 - திருத்தாய் (தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாது கூறிய பாசுரம்)
கரையாய் காக்கைப் பிள்ளாய்! கருமாமுகில் போல் நிறத்தன் உரையார் தொல்புகழ் உத்தமனை வர கரையாய் காக்கைப் பிள்ளாய்!
கூவாய் பூங்குயிலே! குளிர்மாரி தடுத்துகந்த மாவாய் கீண்ட மணிவண்ணனை வர ர கூவாய் பூங்குயிலே!
கொட்டாய் பல்லிக் குட்டி! குடமாடி உலகளந்த மட்டார் பூங்குழல் மாதவனை வர கொட்டாய் பல்லிக் குட்டி!
சொல்லாய் பைங்கிளியே! சுடராழி வலனுயர்த்த மல்லார் தோள் வட வேங்கடவனை வர சொல்லாய் பைங்கிளியே!
கோழி கூவென்னுமால் தோழி! நான் என் செய்கேன்? ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று கோழி கூவென்னுமால்
காமற்கு என் கடவேன்? கருமாமுகில் வண்ணற்கு அல்லால் பூமேல் ஐங்கணை கோத்துப் புகுந்தெய்ய காமற்கு என் கடவேன்?
இங்கே போதுங்கொலோ? இனவேல் நெடுங்கண் களிப்ப கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்த மால் இங்கே போதுங்கொலோ?
இன்னார் என்றறியேன் அன்னே! ஆழியொடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்றறியேன்
தொண்டீர்! பாடுமினோ சுரும்பார் பொழில் மங்கையர் கோன் ஒண்தார் வேல் கலியனொலி மாலைகள் தொண்டீர்! பாடுமினோ
அடிவரவு: திருத்தாய் கரையாய் கூவாய் கொட்டாய் சொல்லாய் கோழி காமற்கு இங்கே இன்னார் தொண்டீர் குன்றமொன்று