காதில் கடுப்பிட்டுக் கலிங்கம் உடுத்து இது கோவில் திருமொழி தாது நல்ல தண்ணந்துழாய் கொடணிந்து போது மறுத்துப் புறமே வந்து நின்றீர் ஏதுக்கு இதுவென்? இதுவென் இதுவென்னோ?
10-8. காதில் கடிப்பு!
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
காதில் கடிப்பு அணிந்து, கலிங்கம் உடுத்து, தண்ணந்துழாய் மாலை சூடிய கோலத்தை வருணிக்கும் பதிகம். அணிகலன்களின் விவரிப்பே வழிபாடாக மாறுகிறது. கண்ணால் கண்டதைச் சொல்வதன் மூலமே மனத்தில் நிறுத்திக்கொள்ளும் முறை இது.
பெரிய திருமொழி 10-8 - காதில் கடிப்பு! (க்ருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு 5 - ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடுதல்)
துவராடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி கவராக முடித்துக் கலிக் கச்சுக் கட்டி சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர் இவரார் இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
கருளக் கொடு ஒன்றுடையீர்! தனிப் பாகீர் உருளச் சகடமது உறக்கில்' நிமிர்த்தீர் மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் இருளத்து இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
நாமம் பலவுமுடை நாரண நம்பீ! தாமத் துளபம் மிக நாறிடுகின்றீர் காமன் எனப் பாடி வந்து இல்லம் புகுந்தீர் ஏமத்து இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து மற்றும் பல மாமணி பொன் கொடணிந்து முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் எற்றுக்கு இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
ஆனாயரும் ஆநிரையும் அங்கொழிய கூனாயதோர் கொற்ற வில் ஒன்று கையேந்தி போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர் ஏனோர்கள் முன்னென்? இதுவென்? இதுவென்னோ?
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்! அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை சொல்லாதொழியீர் சொன்ன போதினால் வாரீர் எல்லே! இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
புக்காடு அரவம் பிடித்தாட்டும் புனிதீர்! இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் தக்கார் பலர் தேவிமார் சால உடையீர் எக்கே! இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்! உறுக்கி தேடித் திருமாமகள் மண்மகள் நிற்ப ஏடி! இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
அல்லிக் கமலக் கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி எல்லிப் பொழுது ஊடிய ஊடல் திறத்தை கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை சொல்லித் துதிப்பார் அவர் துக்கம் இலரே
அடிவரவு: காதில் துவர் கருளக்கொடு நாமம் சுற்றும் ஆனாயர் மல்லே புக்கு ஆடி அல்லி புள்ளுரு