Skip to the text
பெரிய திருமொழி

10-6. எங்கானும்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"எங்கானும் ஈதொப்பதோர் மாயம் உண்டே?" — இதற்கு இணையான வியப்பு எங்கேனும் உண்டோ என்று ஆழ்வார் கேட்கும் பதிகம். நரநாராயணனாய் இருந்து உலகிற்கு அறநூல்களை விரித்தவனை நினைவுகூர்கிறார். வியப்பைக் கேள்வியாக மாற்றுவதே இப்பதிகத்தின் உத்தி.

பெரிய திருமொழி 10-6 - எங்கானும்‌ (க்ருஷ்ணாவதாரத்தில்‌ ஈடூபாடு 3 - மற்றை அவதாரங்களின்‌ மேன்மையோடு க்ருஷ்ணாவதாரத்தின்‌ எளிமையை அனுபவித்தல்‌)

1898

எங்கானும்‌ ஈதொப்பதோர்‌ மாயம்‌ உண்டே? நரநாரணனாய்‌ உலகத்து அறநூல்‌ சிங்காமை விரித்தவன்‌ எம்பெருமான்‌ அதுவன்றியும்‌ செஞ்சுடரும்‌ நிலனும்‌ பொங்கார்‌ கடலும்‌ பொருப்பும்‌ நெருப்பும்‌ நெருக்கிப்‌ புகப்‌ பொன்மிடறு அத்தனை போது அங்காந்தவன்‌ காண்மின்‌ இன்று ஆய்ச்சியரால்‌ அளைவெண்ணெய்‌ உண்டு ஆப்புண்டிருந்தவனே

1899

குன்றொன்று மத்தா அரவம்‌ அளவிக்‌ குரை மாகடலைக்‌ கடைந்திட்டு ஒருகால்‌ நின்று உண்டை கொண்டோட்டி வன்கூன்‌ நிமிர நினைந்த! பெருமான்‌ அதுவன்றியும்‌ முன்‌ நன்றுண்ட தொல்சீர்‌ மகரக்‌ கடலேழ்‌ மலையேழ்‌ உலகேழ்‌ ஒழியாமை நம்பி அன்றுண்டவன்‌ காண்மின்‌ இன்று ஆய்ச்சியரால்‌ அளைவெண்ணெய்‌ உண்டு ஆப்புண்டிருந்தவனே

1900

உளைந்திட்டெழுந்த மதுகைடவர்கள்‌ உலப்பில்‌ வலியார்‌ அவர்‌ பால்‌ வயிரம்‌ விளைந்திட்டது என்றெண்ணி விண்ணோர்‌ பரவ அவர்‌ நாள்‌ ஒழித்த பெருமான்‌ முன நாள்‌ வளைந்திட்ட வில்லாளி வல்வாள்‌ எயிற்று மலை போல்‌ அவுணன்‌ உடல்‌ வள்ளுகிரால்‌ அளைந்திட்டவன்‌ காண்மின்‌ இன்று ஆய்ச்சியரால்‌ அளைவெண்ணெய்‌ உண்டு ஆப்புண்டிருந்தவனே

1901

தளர்ந்திட்டு இமையோர்‌ சரண்‌ தா எனத்‌ தான்‌ சரணாய்‌ முரணாயவனை உகிரால்‌ பிளந்திட்டூ அமரர்க்கு அருள்‌ செய்துகந்த பெருமான்‌ திருமால்‌ விரிநீர்‌ உலகை வளர்ந்திட்ட தொல்சீர்‌ விறல்‌ மாவலியை நினைத்த மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண்‌ குறளாய்‌ அளந்திட்டவன்‌ காண்மின்‌ இன்று ஆய்ச்சியரால்‌ அளைவெண்ணெய்‌ உண்டு ஆப்புண்டிருந்தவனே

1902

நீண்டான்‌ குறளாய்‌ நெடூவான்‌ அளவும்‌ அடியார்‌ படும்‌ ஆழ்துயராயவெல்லாம்‌ தீண்டாமை நினைந்து இமையோர்‌ அளவும்‌ செல வைத்த பிரான்‌ அதுவன்றியும்‌ முன்‌ வேண்டாமை நமன்‌ தமர்‌ என்‌ தமரை வினவப்‌ பெறுவார்‌ அலரென்று உலகேழ்‌ ஆண்டான்‌ அவன்‌ காண்மின்‌ இன்று ஆய்ச்சியரால்‌ அளைவெண்ணெய்‌ உண்டு ஆப்புண்டிருந்தவனே

1903

பழித்திட்ட இன்பப்‌ பயன்‌ பற்றறுத்துப்‌ பணிந்தேத்த வல்லார்‌ துயராயவெல்லாம்‌ ஒழித்திட்டு அவரைத்‌ தனக்காக்க வல்ல பெருமான்‌ திருமால்‌ அதுவன்றியும்‌ முன்‌ தெழித்திட்டு எழுந்தே எதிர்‌ நின்ற மன்னன்‌ சினத்தோள்‌ அவை ஆயிரமும்‌ மழுவால்‌ அழித்திட்டவன்‌ காண்மின்‌ இன்று ஆய்ச்சியரால்‌ அளைவெண்ணெய்‌ உண்டு ஆப்புண்டிருந்தவனே

1904

படைத்திட்டது இவ்வையம்‌ உய்ய முன நாள்‌ பணிந்தேத்த வல்லார்‌ துயராயவெல்லாம்‌ துடைத்திட்டு அவரைத்‌ தனக்காக்கவென்னத்‌ தெளியா அரக்கர்‌ திறல்‌ போய்‌ அவிய மிடைத்திட்டூு எழுந்த குரங்கைப்‌ படையா விலங்கல்‌ புகப்பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன்‌ காண்மின்‌ இன்று ஆய்ச்சியரால்‌ அளைவெண்ணெய்‌ உண்டு ஆப்புண்டிருந்தவனே

1905

நெறித்திட்ட மென்கூழை நல்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லே அதனை இறுத்திட்டு அவள்‌ இன்பம்‌ அன்போடு அணைந்திட்டு இளங்கொற்றவனாய்த்‌ துளங்காத முந்நீர்‌ செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்‌ செழுநீள்‌ முடி தோளொடு தாள்‌ துணிய அறுத்திட்டவன்‌ காண்மின்‌ இன்று ஆய்ச்சியரால்‌ அளைவெண்ணெய்‌ உண்டு ஆப்புண்டிருந்தவனே

1906

சுரிந்திட்ட செங்கேழ்‌ உளைப்பொங்கரிமாத்‌ தொலையப்‌ பிரியாது சென்றெய்தி எய்தாது இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன்வாய்‌ இருகூறு செய்த பெருமான்‌ முன நாள்‌ வரிந்திட்ட வில்லால்‌ மரம்‌ ஏழும்‌ எய்து மலை போல்‌ உருவத்து ஓர்‌ இராக்கதி மூக்கு அரிந்திட்டவன்‌ காண்மின்‌ இன்று ஆய்ச்சியரால்‌ அளைவெண்ணெய்‌ உண்டு ஆப்புண்டிருந்தவனே

1907

நின்றார்‌ முகப்புச்‌ சிறிதும்‌ நினையான்‌ வயிற்றை நிறைப்பான்‌ உறிப்பால்‌ தயிர்‌ நெய்‌ அன்று ஆய்ச்சியர்‌ வெண்ணெய்‌ விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமானடி மேல்‌ நன்றாய தொல்சீர்‌ வயல்‌ மங்கையர்‌ கோன்‌ கலியன்‌ ஒலிசெய்‌ தமிழ்‌ மாலை வல்லார்‌ என்றானும்‌ எய்தார்‌ இடர்‌ இன்பம்‌ எய்தி இஇமையோர்க்கும்‌ அப்பால்‌ செல எய்துவாரே

அடிவரவு: எங்கானும்‌ குன்று உளைந்து தளர்ந்து நீண்டான்‌ பழித்திட்ட படை நெறி சுரி நின்றார்‌ மானம்‌