Skip to the text
பெரிய திருமொழி

10-3. ஏத்துகின்றோம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"ஏத்துகின்றோம் நாத் தழும்ப இராமன் திருநாமம்" — நாக்குத் தழும்பேறும் அளவுக்கு இராம நாமத்தைச் சொல்வதாக அறிவிக்கும் பதிகம். சுக்கிரீவனையும் விளித்து வணங்குவது இதன் தனிச்சிறப்பு. இறைவனுக்குத் தொண்டு செய்தவர்களையும் சேர்த்து வணங்கும் மரபு இங்கே தொடங்குகிறது.

பெரிய திருமொழி 10-3 - ஏத்துகின்றோம்‌ (இராமாவதாரத்தில்‌ ஈடுபாடு 2 - இராமனிடம்‌ தோல்வியுற்ற அரக்கர்‌ அபயம்‌ வேண்டிக்‌ கூத்தாடுதல்‌)

1868

ஏத்துகின்றோம்‌ நாத்தழும்ப இராமன்‌ திருநாமம்‌ சோத்தம்‌ நம்பீ! சுக்கிரீவா! உம்மைத்‌ தொழுகின்றோம்‌ வார்த்தை பேசீர்‌ எம்மை உங்கள்‌ வானரம்‌ கொல்லாமே கூத்தர்‌ போல ஆடுகின்றோம்‌ குழமணி தூரமே

1869

எம்பிரானே! என்னை ஆள்வாய்‌! என்றென்று அலற்றாதே அம்பின்‌ வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான்‌ நம்பி அனுமா! சுக்கிரீவா! அங்கதனே! நளனே! கும்பகர்ணன்‌ பட்டூப்‌ போனான்‌ குழமணி தூரமே

1870

ஞாலம்‌ ஆளும்‌ உங்கள்‌ கோமான்‌ எங்கள்‌ இராவணற்கு காலனாகி வந்தவா! கண்டு அஞ்சிக்‌ கருமுகில்‌ போல்‌ நீலன்‌ வாழ்க சுடேணன்‌ வாழ்க அங்கதன்‌ வாழ்க என்று !8 வெங்கதிரோன்‌ தன்‌ !70 அவ்வானவர்க்கு 7! இவ்வுலகில்‌ கோலமாக ஆடுகின்றோம்‌ குழமணி தூரமே

1871

மணங்கள்‌ நாறும்‌ வார்குழலார்‌ மாதர்கள்‌ ஆதரத்தை புணர்ந்த சிந்தைப்‌ புன்மையாளன்‌ பொன்ற வரிசிலையால்‌ கணங்களுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன்‌ குணங்கள்‌ பாடி ஆடுகின்றோம்‌ குழமணி தூரமே

1872

வென்றி தந்தோம்‌ மானம்‌ வேண்டோம்‌ தானம்‌ எமக்காக இன்று தம்மின்‌ எங்கள்‌ வாணாள்‌ எம்பெருமான்‌ தமர்காள்‌! நின்று காணீர்‌ கண்கள்‌ ஆர நீர்‌ எம்மைக்‌ கொல்லாதே குன்று போல ஆடுகின்றோம்‌ குழமணி தூரமே

1873

கல்லின்‌ முந்நீர்‌ மாற்றி வந்து காவல்‌ கடந்து இலங்கை அல்லல்‌ செய்தான்‌ உங்கள்‌ கோமான்‌ எம்மை அமர்க்களத்து வெல்லகில்லாது அஞ்சினோம்‌ காண்‌ வெங்கதிரோன்‌ சிறுவா! கொல்ல வேண்டா ஆடுகின்றோம்‌ குழமணி தூரமே

1874

மாற்றமாவது இத்தனையே வம்மின்‌ அரக்கருள்ளீர்‌! சீற்றம்‌ நும்மேல்‌ தீர வேண்டில்‌ சேவகம்‌ பேசாதே ஆற்றல்‌ சான்ற தொல்‌ பிறப்பில்‌ அனுமனை வாழ்கவென்று கூற்றமன்னார்‌ காண ஆடீர்‌ குழமணி தூரமே

1875

கவள யானை பாய்புரவி தேரோடு அரக்கர்‌ எல்லாம்‌ துவள வென்ற வென்றியாளன்‌ தன்‌ தமர்‌ கொல்லாமே தவள மாட நீடயோத்தி காவலன்‌ தன்‌ சிறுவன்‌ குவளை வண்ணன்‌ காண ஆடீர்‌ குழமணி தூரமே

1876

ஏடொத்தேந்தும்‌ நீளிலைவேல்‌ எங்கள்‌ இராவணனார்‌ ஓடிப்‌ போனார்‌ நாங்கள்‌ எய்த்தோம்‌ உய்வதோர்‌ காரணத்தால்‌ சூடிப்‌ போந்தோம்‌ உங்கள்‌ கோமன்‌ ஆணை தொடரேன்மின்‌ கூடிக்‌ கூடி ஆடுகின்றோம்‌ குழமணி தூரமே

1877

வென்ற தொல்சீர்த்‌ தென்னிலங்கை வெஞ்சமத்து அன்றரக்கர்‌ குன்றமன்னார்‌ ஆடி உய்ந்த குழமணி தூரத்தை கன்றி நெய்நீர்‌ நின்ற வேற்கைக்‌ கலியன்‌ ஒலிமாலை ஒன்றும்‌ ஒன்றும்‌ ஐந்தும்‌ மூன்றும்‌ பாடி நின்றாடுமினே

அடிவரவு: ஏத்துகின்றோம்‌ எம்பிரானே ஞாலம்‌ மணங்கள்‌ வென்றி கல்லின்‌ மாற்றம்‌ கவளம்‌ ஏடு வென்ற சந்தம்‌