இரக்கம் இன்றி எங்கோன் செய்த தீமை இம்மையே எமக்கெய்திற்றுக் காணீர் பரக்க யாம் இன்றுரைத்து என்? இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்? குரக்கு நாயகர்காள்! இளங்கோவே! கோல வல்வில் இராமபிரானே! அரக்கராடழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
10-2. இரக்கமின்றி
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"இரக்கம் இன்றி எங்கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்" — செய்த வினையின் விளைவை இப்பிறப்பிலேயே அனுபவிப்பதாகச் சொல்லும் பதிகம். பழி சொல்லாமல் தன்மேலேயே வைத்துக்கொள்ளும் நேர்மை இதில் உண்டு. துன்பத்தை விதியாகக் காட்டாமல் விளைவாகக் காணும் தெளிவு இப்பதிகத்தில் தெரிகிறது.
பெரிய திருமொழி 10-2 - இரக்கமின்றி (இராமாவதாரத்தில் ஈடுபாடு 1 - இராமனிடம் தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டிக் கூத்தாடுதல்)
பத்து நீள்முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம் சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா அடியோங்கள் ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோமன்றி வாழ்ந்தோம் அத்த! எம்பெருமான்! எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தண்டகாரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான் கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே! பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றதென்? தாசரத! உன் அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
எஞ்சலில் இலங்கைக்கிறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மாமயில் அன்ன அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர் கும்பனோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
ஓதமா கடலைக் கடந்தேறி உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடியிலங்கை மலங்க எரித்து தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே ஆதர் நின்று படுகின்றது அந்தோ! அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
தழமின்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண்மருங்குல் மாழை மான் மடநோக்கியை விட்டு வாழகில்லா மதியில் மனத்தானை ஏழையை இலங்கைக்கிறை தன்னை எங்களை ஒழியக் கொலை அவனை சூழுமா நினை மாமணி வண்ணா! சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
மனங்கொண்டேறும் மண்டோதரி முதலா அங்கயற்கண்ணினார்கள் இருப்ப தனங்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமேசில தாபதரென்று புனங்கொள் மென்மயிலைச் சிறை வைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த அனங்கனன்ன திண்தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில் பொங்கெரிக்கு இரை கண்டவன் அம்பின் சரங்களே கொடுதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம் இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே! இலங்கு வெங்கதிரோன்! சிறுவா! குரங்குகட்கு அரசே! எம்மைக் கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
அங்கு வானவர்க்கு! ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன் தன்னை பொங்குமா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்!'! எங்கும் பாடி நின்று ஆடூமின் தொண்டீர்! இம்மையே இடரில்லை இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
அடிவரவு: இரக்கம் பத்து தண்டக எஞ்சல் செம்பொன் ஓதம் தாழம் மனம் புரங்கள் அங்கு ஏத்து