Skip to the text
பெரிய திருமொழி

10-1. ஒருநல்சுற்றம்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"ஒரு நல் சுற்றம், எனக்கு உயிர், ஒண்பொருள்" — உறவும் உயிரும் செல்வமும் அவனேயாக இருப்பதைச் சொல்லும் பதிகம். நேற்றுக் கண்டதைப் போலவே இன்றும் அவனைத் தேடும் மனநிலையை ஆழ்வார் சொல்கிறார். ஒன்றைப் பலவற்றின் இடத்தில் வைப்பது அல்ல — பலவற்றின் இடத்திலும் ஒன்றே இருப்பதைக் காண்பது இது.

பெரிய திருமொழி 10-1 - ஒருநல்சுற்றம்‌ (பல திவ்யதேசங்கள்‌)

1848

ஒருநல்‌ சுற்றம்‌ எனக்குயிர்‌ ஒண்பொருள்‌ வருநல்‌ தொல்கதி ஆகிய மைந்தனை நெருநல்‌ கண்டது நீர்மலை இன்று போய்‌ கருநெல்‌ சூழ்‌ கண்ணமங்கையுள்‌ காண்டூுமே

1849

பொன்னை மாமணியை அணி ஆர்ந்ததோர்‌ மின்னை வேங்கடத்து உச்சியில்‌ கண்டு போய்‌ என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்‌ தன்னை யாம்‌ சென்று காண்டும்‌ தண்காவிலே

1850

வேலை ஆலிலைப்‌ பள்ளி விரும்பிய பாலை ஆரமுதத்தினைப்‌ பைந்துழாய்‌ மாலை ஆலியில்‌ கண்டு மகிழ்ந்து போய்‌ ஞாலமுன்னியைக்‌ காண்டும்‌ நாங்கூரிலே

1851

துளக்கமில்‌ சுடரை அவுணன்‌ உடல்‌ பிளக்கும்‌ மைந்தனைப்‌ பேரில்‌ வணங்கிப்‌ போய்‌ ர்‌ அளப்பில்‌ ஆரமுதை அமரர்க்கு அருள்‌ விளக்கினை சென்று வெள்ளறைக்‌ காண்டுமே

1852

சுடலையில்‌ சுடூநீறன்‌ அமர்ந்ததோர்‌ நடலை தீர்த்தவனை நறையூர்‌ கண்டு என்‌ உடலையுள்‌ புகுந்து உள்ளம்‌ உருக்கியுண்‌ விடலையைச்‌ சென்று காண்டும்‌ மெய்யத்துளே

1853

வானை ஆரமுதம்‌ தந்த வள்ளலை தேனை நீள்வயல்‌ சேறையில்‌ கண்டு போய்‌ ஆனை வாட்டி அருளும்‌ அமரர்‌ தம்‌ கோனை யாம்‌ குடந்தைச்‌ சென்று காண்டூமே

1854

கூந்தலார்‌ மகிழ்‌ கோவலனாய்‌ வெண்ணெய்‌ மாந்தழுந்தையில்‌ கண்டு மகிழ்ந்து போய்‌ பாந்தள்‌ பாழியில்‌ பள்ளி விரும்பிய வேந்தனைச்‌ சென்று காண்டும்‌ வெஃகாவுளே

1855

பத்தராவியைப்‌ பால்மதியை அணித்‌ தொத்தை மாலிருஞ்சோலைத்‌ தொழுது போய்‌ ர்‌ முத்தினை மணியை மணிமாணிக்க வித்தினை சென்று விண்ணகர்க்‌ காண்டூுமே

1856

கம்பமா களிறு அஞ்சிக்‌ கலங்க ஓர்‌ கொம்பு கொண்ட குரைகழல்‌ கூத்தனை கொம்புலாம்‌ பொழில்‌ கோட்டியூர்க்‌ கண்டு போய்‌ நம்பனைச்‌ சென்று கண்டும்‌ நாவாயுளே

1857

பெற்றமாளியைப்‌! பேரில்‌ மணாளனை கற்ற நூல்‌ கலிகன்றி உரை செய்த சொல்‌ திறம்‌ இவை சொல்லிய தொண்டர்கட்கு பற்றமாளிகை அற்றம்‌ இல்லை அண்டம்‌ அவர்க்கு ஆட்சியே

அடிவரவு: ஒரு பொன்னை வேலை துளக்கம்‌ சுடலையில்‌ வானை கூந்தல்‌ பத்தர்‌ கம்பம்‌ பெற்ற இரக்கம்‌