எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்தடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான் பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே
9-10. எங்கள்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"எங்கள் எம்மிறை, எம்பிரான், இமையோர்க்கு நாயகன்" என்று அடுக்கி அழைத்து, ஏத்தும் அடியவர்களின் மனத்தைப் பிரியாமல் அவன் இருப்பதைச் சொல்லும் பதிகம். கோயிலில் மட்டுமல்ல, நினைப்பவர் நெஞ்சிலும் அவன் நிலைத்திருக்கிறான். ஒன்பதாம் பத்து இந்த நிரந்தர அருகாமையின் உறுதியுடன் நிறைவடைகிறது.
பெரிய திருமொழி 9-10 - எங்கள் (திருக்கோட்டியூர்)
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் செவ்வி தோய வல்லான் திருமாமகட்கு இனியான் மெளவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து! மாருதம் தெய்வ நாற வரும் திருக்கோட்டியூரானே
வெள்ளியான் கரியான் மணினிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை எமக்கு ஒள்ளியான் உயர்ந்தான் உலகேமழும் உண்டு உமிழ்ந்தான் துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் மணைந்த கற்றை சந்தனமுந்தி வந்தசை தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டியூரானே
ஏறுமேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் கூறு தான் கொடுத்தான் குலமாமகட்கு இனியான் நாறு சண்பக மல்லிகை மலர் பல்கி? இன்னிள வண்டு நல் நறும் தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டியூரானே
வங்கமாகடல் வண்ணன் மாமணிவண்ணன் விண்ணவர் கோன் மதுமலர்த் தொங்கல் நீள்முடியான் நெடியான் படி கடந்தான் மங்குல் தோய் மணி மாட வெண்கொடி மாகமீதுயர்ந்தேறி வானுயர் திங்கள் தான் அணவும் திருக்கோட்டியூரானே
காவலன் இலங்கைக்கிறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் என்னையாளுடை எம்பிரான் நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கென தேவர் வந்து இறைஞ்சும் திருக்கோட்டியூரானே
கன்று கொண்டு விளங்களி எறிந்து ஆறநிரைக்கு அழிவென்று மாமழை நின்று காத்துகந்தான் நிலமாமகட்கு இனியான் குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளந் தென்றல் வந்துலவும் திருக்கோட்டியூரானே
பூங்குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரிமாச் மில்லி... செகுத்து அடியேனை ஆளுகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் தூங்கு தண்பலவின் கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி தேங்கு தண்புனல் சூழ் திருக்கோட்டியூரானே
கோவையின் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மாமலர் மிசை மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர் மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும் தேவ தேவ பிரான் திருக்கோட்டியூரானே
ஆலுமாவலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணிபொழில் சேல்கள் பாய் கழனித் திருக்கோட்டியூரானை நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமிழால் நினைந்த இந் நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே
அடிவரவு: எங்கள் எவ்வம் வெள்ளியான் ஏறு வங்கம் காவலன் கன்று பூங்குருந்து கோவை ஆலும் ஒருநல்