மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து இது கோவில் திருமொழி பூவலருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ?
9-9. மூவரில்!
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
மூவரில் முன்முதல்வனாய், முழங்கும் கடலுள் கிடந்து, தாமரை உந்தியில் உலகைப் படைத்தவனைப் பாடும் பதிகம். மும்மூர்த்திகளுள் முதன்மையானவன் யார் என்ற வினாவிற்கு ஆழ்வார் தெளிவாக விடையளிக்கிறார். வாதத்தை அல்ல, காட்சியையே சான்றாக முன்வைக்கிறார்.
பெரிய திருமொழி 9-9 - மூவரில்! (திருமாலிருஞ்சோலை 2 - பிரிவாற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்துத் தாய் இரங்கிக் கூறிய பாசுரம்)
புனைவளர் பூம்பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள் முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை சினைவளர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் கனை கழல் காணுங்கொலோ? கயற்கண்ணி எம் காரிகையே
உண்டு உலகேழினையும் ஒரு பாலகன் ஆலிலை மேல் கண் துயில் கொண்டு உகந்த ௧௬ மாணிக்க மாமலையை திண் திறல் மாகரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற அண்டர் தம் கோவினை இன்று அணுகுங்கொல்? என் ஆயிழையே
சிங்கமதாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த பங்கய மாமலர்க் கண் பரனை எம் பரஞ்சுடரை திங்கள் நன் மாமுகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற நங்கள் பிரானை இன்று நணுகுங்கொல்? என் நன்னுதலே
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானமும்! மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன் தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற வானவர் கோனை இன்று வணங்கித் தொழ வல்லள் கொலோ?
நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் வாசமலர்ப் பொழில் சூழ் வட மாமதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ?
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து கள்ளச் சகடு உதைத்த கர மாணிக்க மாமலையை தெள்ளருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ?
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மாமலையை தீர்த்தனைப் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கை தொழவும் முடியுங்கொல்? என் மொய்குழற்கே
வலம்புரி ஆழியனை வரையார் திரள் தோளன் தன்னை புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனை சிலம்பியல் ஆறுடைய திருமாலிருஞ்சோலை நின்ற நலந்திகழ் நாரணனை நணுகுங்கொல்? என் நன்னுதலே
தேடற்கு அரியவனைத் திருமாலிருஞ்சோலை நின்ற ஆடல் பறவையனை அணியாயிழை காணும் என்று மாடக் கொடு மதிள் சூழ் மங்கையார் கலி கன்றி சொன்ன பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே
அடிவரவு: மூவரில் புனை உண்டு சிங்கமது தானவன் நேசம் புள்ளினை பார்த்தனுக்கு வலம்புரி தேடற்கு எங்கள்