முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார் கலவியை விடுதடுமாறல் அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய எம் அடிகள் தம் கோயில் சந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே!
9-8. முந்துற
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"முந்துற உரைக்கேன்" — முதலில் இதைச் சொல்லிவிடுகிறேன் என்று ஆழ்வார் தொடங்கும் பதிகம். மணம் கமழும் கூந்தலுடைய மடவாரின் கலவியை விடுவதில் உள்ள தடுமாற்றத்தை மறைக்காமல் ஒப்புக்கொள்கிறார். ஏழு உலகும் ஏழு கடலும் அவனுடையவை என்பதை நினைவுகூர்ந்து அத்தடுமாற்றத்தைக் கடக்கிறார்.
பெரிய திருமொழி 9-8 - முந்துற (திருமாலிருஞ்சோலை 1)
இண்டையும் புனலும் கொண்டிடை இன்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில் விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே!
பிணிவளர் ஆக்கை நீங்க நின்றேத்தப் பெருநிலம் அருளின் முன்னருளி அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த எம் அடிகள் தம் கோயில் கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில் குறவர் தம் கவணிடைத் துரந்த மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே!
சூர்மயிலாய பேய் முலை சுவைத்துச் சுடூசரம் அடூசிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் ர் கார்மலி வேங்கை கோங்கலர் புறவில் கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் வார்புனல் சூழ் தண்மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே!
வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணிமுடி ஒருபதும் புரள அணங்கெழுந்தவந்தன் கவந்தம் நின்றாட அமர் செய்த அடிகள் தம் கோயில் பிணங்கலில் நெடுூவேய் நுதிமுகம் கிழிப்பப் பிரசம் வந்திழிதர பெருந்தேன் மணங்கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே!
விடங்கலந்தமர்ந்த அரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள் தம் கோயில் தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறென்று முனிந்து மடங்கல் நின்றதிரும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே!
தேனுகனாவி போயுக அங்கோர் செழுந்திரள் பனங்கனி உதிர தானுகந்தெறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடங்கொண்ட கோயில் வானகச் சோலை மரதகச் சாயல் மாமணிக் கல்லதர் நிறைந்து! '' நுழைந்துநிரந்து மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே!
புதமிகு விசும்பில் புணரி சென்றணவப் பொருகடல் அரவணைத் துயின்று பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனிமுகில் வண்ணர் தம் கோயில் கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களிவண்டு பருக மதமிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே!
புந்தியில் சமணர் புத்தர் என்றிவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடங்கொண்ட கோயில் சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும் மந்திரத்திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே!
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மாமணி வண்ணரை வணங்கும் தொண்டரைப் பரவும் சுடரொளி நெடூவேல் சூழ் வயல் ஆலி நன்னாடன் கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல் கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வர் இக்குரைகடல் உலகே
அடிவரவு: முந்துற இண்டை பிணி சூர்மையில் வணங்கலில் விடம் தேனுகன் புதமிகு புந்தி வண்டமர் மூவர்