Skip to the text
பெரிய திருமொழி

9-7. தந்தைதாய்

திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்

Essence of this decad

"தந்தை, தாய், மக்கள், சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்து" — உறவுகளின் கட்டுக்குள் சிக்கிய வாழ்வை நினைத்து வருந்தும் பதிகம். அவற்றை வெறுக்கச் சொல்லவில்லை; அவற்றின் மேல் வைத்த எதிர்பார்ப்பே துன்பமாகிறது என்கிறார். பழித்து விலகுவதற்குப் பதிலாக, சரியான இடத்தில் நம்பிக்கை வைக்கச் சொல்கிறார்.

பெரிய திருமொழி 9-7 - தந்தைதாய்‌ (திருவல்லவாழ்‌)

1808

தந்தை தாய்‌ மக்களே சுற்றம்‌ என்று உற்றவர்‌ பற்றி நின்ற பந்தமார்‌ வாழ்க்கையை நொந்து நீ பழி எனக்‌ கருதினாயேல்‌ அந்தமாய்‌ ஆதியாய்‌ ஆதிக்கும்‌ ஆதியாய்‌ ஆயனாய மைந்தனார்‌ வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

1809

மின்னுமா வல்லியும்‌ வஞ்சியும்‌ வென்ற நுண்ணிடை நுடங்கும்‌ அன்னமென்‌ நடையினார்‌ கலவியை அருவருத்து அஞ்சினாயேல்‌ துன்னுமாமணி முடிப்‌ பஞ்சவர்க்காகி முன்‌ தூது சென்ற மன்னனார்‌ வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

1810

பூணுலா மென்முலைப்‌ பாவைமார்‌ பொய்யினை மெய்யிதென்று பேணுவார்‌ பேசும்‌ அப்பேச்சை நீ பிழை எனக்‌ கருதினாயேல்‌ நீணிலா வெண்குடை வாணனார்‌ வேள்வியில்‌ மண்‌ இரந்த மாணியார்‌ வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

1811

பண்ணுலா மென்மொழிப்‌ பாவைமார்‌ பணைமுலை அணைதும்‌ நாம்‌ என்று எண்ணுவார்‌ எண்ணம்‌ அதொழித்து நீ பிழைத்துய்யக்‌ கருதினாயேல்‌ விண்ணுளார்‌ விண்ணின்‌ மீதியன்ற வேங்கடத்துளார்‌ வளங்கொள்‌ முந்நீர்‌ வண்ணனார்‌ வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

1812

மஞ்சு தோய்‌ வெண்குடை மன்னராய்‌ வாரணம்‌ சூழ வாழ்ந்தார்‌ துஞ்சினார்‌ என்பதோர்‌ சொல்லை நீ துயர்‌ எனக்‌ கருதினாயேல்‌ நஞ்சு தோய்‌ கொங்கை மேல்‌ அங்கை வாய்‌ வைத்து அவள்‌ நாளை உண்ட மைந்தனார்‌!' வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

1813

உருவினார்‌ பிறவி சேர்‌ ஊன்‌ பொதி நரம்பு தோல்‌ குரம்பையுள்‌ புக்கு அருவி நோய்‌ செய்து நின்று ஐவர்‌ தாம்‌ வாழ்வதற்கு அஞ்சினாயேல்‌ ர்‌ திருவினார்‌ வேதம்‌ நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம்‌ ஆறும்‌ மருவினார்‌ வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

1814

நோய்‌ எலாம்‌ பெய்ததோர்‌ ஆக்கையை மெய்யெனக்‌ கொண்டு வாளா பேயர்‌ தாம்‌ பேசும்‌ அப்பேச்சை நீ பிழை எனக்‌ கருதினாயேல்‌ தீயுலா வெங்கதிர்த்‌ திங்களாய்‌ மங்குல்‌ வானாகி நின்ற மாயனார்‌ வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

1815

மஞ்சு சேர்‌ வான்‌ எரி நீர்‌ நிலம்‌ கால்‌ இவை மயங்கி நின்ற அஞ்சு சேர்‌ ஆக்கையை அரணமன்று என்றுய்யக்‌ கருதினாயேல்‌ சந்து சேர்‌ மென்முலைப்‌ பொன்மலர்ப்‌ பாவையும்‌ தாமும்‌ நாளும்‌ வந்து சேர்‌ வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

1816

வெள்ளியார்‌ பிண்டியார்‌ போதியார்‌ என்றிவர்‌ ஓதுகின்ற கள்ள நூல்‌ தன்னையும்‌ கருமமன்று (8 மஞ்சனார்‌ என்றுய்யக்‌ கருதினாயேல்‌ தெள்ளியார்‌ கைதொழும்‌ தேவனார்‌ மாமுநீர்‌ அமுது தந்த வள்ளலார்‌ வல்லவாழ்‌ சொல்லுமா வல்லையாய்‌ மருவு நெஞ்சே!

1817

மறைவலார்‌ குறைவிலார்‌ உறையுமூர்‌ வல்லவாழ்‌ அடிகள்‌ தம்மை சிறைகுலா வண்டறை சோலை சூழ்‌ கோலநீள்‌ ஆலி நாடன்‌ கறையுலா வேல்‌ வல்ல கலியன்‌ வாயொலி இவை கற்று வல்லார்‌ இறைவராய்‌ இருநிலம்‌ காவல்‌ பூண்டு இன்பம்‌ நன்கெய்துவாரே

அடிவரவு: தந்தை மின்னும்‌ பூண்‌ பண்‌ மஞ்சு உருவின்‌ நோய்‌ மஞ்சுசேர்‌ வெள்ளியார்‌ மறை முந்துற