தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு பொன்னை நைவிக்கும் அப்பூஞ்செருந்தி மணநீழல்வாய் என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமானிடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே
9-3. தன்னை
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
"தன்னை நைவிக்கிலேன், வல்வினையேன், தொழுதும் எழு" — தன்னை வருத்திக்கொள்ள இயலாத நிலையிலும் தொழுது எழு என்று தன் நெஞ்சிற்குச் சொல்லும் பதிகம். செருந்தி மலரின் மணநிழலில் நின்று அவன் நினைவால் வாடுவதைச் சொல்கிறார். இயலாமையின் நடுவிலும் வழிபாட்டைத் தொடரும் உறுதி இதில் தெரிகிறது.
பெரிய திருமொழி 9-3 - தன்னை (திருப்புல்லாணி 1 - தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிய பாசுரம்)
உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்தென்? தொழுதும் எழு முருகு வண்டுண் மலர்க் கைதையின் நீழலில் முன்னொர் நாள் பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தானிடம் பொருது முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே
ஏது செய்தால் மறக்கேன்? மனமே! தொழுதும் எழு தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின் பேதை நினைப் பிரியேன் இனி என்று அகன்றானிடம் போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே
கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடுயேற்கு முன் நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன் மங்கை நல்லாய்! தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர் பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு துணரி ஞாழல் நறும் போது நம் சூழ்குழல் பெய்து பின் தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தானிடம் புணரியோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே
எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்தென்? தொழுதும் எழு வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவுமிடம் கள்ளவிழும் மலர்க் காவியும் தூமடல் கைதையும் புள்ளும் அள்ளற்பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே
பரவி நெஞ்சே! தொழுதும் எழு போய் அவன் பாலமாய் இரவும் நாளும் இனிக் கண் துயிலாதிருந்து என் பயன்? விரவி முத்தம் நெடுவெண்மணல் மேல் கொண்டு வெண்திரை புரவியென்னப் புதம் செய்து வந்துந்து புல்லாணியே
அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய் சலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு உலவுகால் நற்கழியோங்கு தண்பைம்பொழிலூடு இசை புலவு கானல் களிவண்டினம் பாடு புல்லாணியே
ஓதி நாமங்குளித்து உச்சி தன்னால் ஒளி மாமலர் பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய் போதும் மாதே! தொழுதும் அவன் மன்னு புல்லாணியே
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரை புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணி மேல் கலங்கல் இல்லாப் புகழான் கலியனொலி மாலை! வலங்கொள் தொண்டர்க்கு இடமாவது பாடில் வைகுந்தமே
அடிவரவு: தன்னை உருகி ஏது கொங்கு உணரில் எள்கி பரவி அலம் ஓதி இலங்கு காவார்