வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டூு காலிப்பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா கடல்நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா
2-6. வேலிக்கோல்
பெரியாழ்வார் · முதலாயிரம்
Essence of this decad
வேலிக்கோலை வில்லாக்கி, மயில் இறகைச் சூடி, கன்றுகளுடன் விளையாடித் திரியும் பிள்ளையின் பருவம். கொங்கு, குடந்தை, கோட்டியூர், பேர் என எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் என்று தாய் பெருமிதம் கொள்கிறாள். சங்கம் ஏந்தும் அத்தடக்கைக்கு ஏற்ற அணிகலன் வேண்டும் என்று விரும்புகிறாள். இலங்கை மன்னனை வென்று விபீடணனுக்கு அரசளித்தவன்தான் இந்தச் சிறுவன் என்பதை நினைவுகூர்கிறாள்.
பெரியாழ்வார் திருமொழி 2-6 வேலிக்கோல் (காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்)
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல் அங்கமுடையதோர் கோல் கொண்டு வா அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா
கறுத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான் நெறித்த குழல்களை நீங்க முன்னோடி சிறுக் கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர கோல் கொண்டு வா
ஒன்றே உரைப்பான் ஒருசொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல் ர சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல்நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டு வா
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் ஊன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் பாரொன்றிப் பாரதம் கை செய்து பார்த்தற்குத் தேரொன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா தேவ பிரானுக்கு ஓர கோல் கொண்டு வா
ஆலத்திலையான் அரவினணை மேலான் நீலக் கடலுள் நெடூங்காலம் கண் வளர்ந்தான் பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா
பொன் திகழ் சித்திரகூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ தன்னிகரொன்றில்லாச் சிலைகால் வளைத்திட்ட மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னிலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா
அக்காக்காய் நம்பிக்குக் ர கோல் கொண்டு வாவென்று மிக்காளுரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன் ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர் மக்களைப் பெற்று மகிழ்வர் இவ்வையத்தே