பெரிய மொழி 8-8 - வானோரளவும் மு) (திருக்கண்ணபுரம் 8 - தசாவதாரம்)
8-8. வானோரளவும்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
வானோர் அளவும் முந்நீர் பொங்கி வளர்ந்த ஊழிக்காலத்தில், வலிய மீன் வடிவம் கொண்டு வந்து காத்தவனைப் பாடும் பதிகம். எல்லாம் நீரில் மூழ்கியபோதும் ஒன்று மட்டும் மிஞ்சியது — காக்க வேண்டும் என்ற அவனது எண்ணம். மச்ச அவதாரத்தின் நினைவு இப்பதிகத்தில் தெளிவாக விரிகிறது.
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்தாமரைக் கண்ணன் ஆனாவுருவில் ஆனாயன் அவனை அம்மாவிளை வயலுள் கானார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
மலங்கு விலங்கு நெடூவெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு இலங்கு சோதி ஆரமுதம் அடிமலர் எய்துமளவு ஓர் ஆமையாய் விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை கூராராரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும் காரார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெஞ்சமத்து பிளந்து வளைந்த உகிரானைப் பெருந்தண் செந்நெற்குலை தடிந்து களஞ்செய் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
தொழுநீர் வடிவின் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி பால் முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை ர உழுநீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும் கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழுகால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை ர் குடியா வண்டு கொண்டூண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் கடியார் புறவில் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடி இலங்கை குடுகொண்டோட வெஞ்சமத்து ர செய்த வெம்போர் நம் பரனைச் செழுந்தண் கானல் மண நாறும் கைதை வேலிக் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத் தான் தோன்றி வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண்பால் செல்ல வெஞ்சமத்து செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப கற்ற மறையோர் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்துய்யப் பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை உவரி ஓதம் முத்துந்த ஒருபால் ஒருபால் ஒண்செந்நெல் கவரி வீசும் கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலி செய்த தேனார் இன்சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே
அடிவரவு: வானோர் மலங்கு பார் உளைந்த தொழு வடி வையம் ஒற்றை துவரி மீனோடு கைம்மானம்