வியமுடை விடையினம் உடைதர மடமகள் குயமிடை'! தடவரை அகலமது உடையவர் நயமுடை' நடையனம் இளையவர் நடை பயில் கயமிடை கணபுரம் அடிகள் தம் இடமே
8-7. வியமுடை
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
காளைகள் திரியும் காட்சியிலும், மடமகளின் அழகிலும் தொடங்கி, மலைபோன்ற அகலமுடையவனை நோக்கி நகரும் பதிகம். ஊரின் வாழ்க்கைக்காட்சிகளுக்கு நடுவே இறைவனை நிறுத்துவது திருமங்கையாழ்வாரின் வழக்கம். புனிதம் தனியிடத்தில் அல்ல, வாழ்வின் நடுவேயே இருக்கிறது.
பெரிய திருமொழி 8-7 - வியமுடை (திருக்கண்ணபுரம் 7)
இணைமலி மருதினொடு எருதிற இகல் செய்து துணைமலி முலையவள் மணமிகு கலவியுள் மணமலி விழவினொடு அடியவர் அளவிய கணமலி கண்புரம் அடிகள் தம் இடமே
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை மயலுற வரை குடை எடூுவிய நெடியவர் முயல்துளர் மிளைமுயல் துள வளவிளை வயல் கயல்துளு கணபுரம் அடிகள் தம் இடமே
ஏதலர் நகை செய இளையவர் அளை வெணெய் போது செய் தமரிய புனிதர் நல்விரை மலர் கோதிய மதுகரம் குலவிய மலர்மகள் காதல் செய் கணபுரம் அடிகள் தம் இடமே
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ அண்டமொடு அகலிடம் அளந்தவர் அமர் செய்து விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரியெழ கண்டவர் கணபுரம் அடிகள் தம் இடமே
மழுவியல் படையுடை அவனிடம் மழை முகில் தழுவிய உருவினர் திருமகள் மருவிய கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண் எழுவிய கணபுரம் அடிகள் தம் இடமே 6 குயழுடை நயமட
பரிதியொடு அணிமதி பனி வரை திசை நிலம் எரிதியொடு எனவின இயல்வினர் செலவினர் சுருதியொடு அருமறை முறை சொலும் அடியவர் கருதிய கணபுரம் அடிகள் தம் இடமே
படிபுல்கும் அடியிணை பலர் தொழ மலர் வைகு கொடுபுல்கு தடவரை அகலமது உடையவர் முடிபுல்கு நெடூவயல் படைசெல வடிமலர்' கடிபுல்கு கணபுரம் அடிகள் தம் இடமே
புலமனு மலர் மிசை மலர்மகள் புணரிய நிலமகள் எனவின மகளிர்கள் இவரொடும் வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை கலமனு கணபுரம் அடிகள் தம் இடமே
மலிபுகழ் கணபுரம் உடைய எம் அடிகளை வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர் கலியன தமிழ் இவை விழுமிய இசையினொடு ஒலி சொலும் அடியவர் உறுதுயர் இலரே
அடிவரவு: வியம் இணை புயல் ஏதலர் தொண்டர் மழு பரிதியொடு படி புலம் மலிபுகழ் வானோர்