தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெறுமளவு இருந்தேனை ர அந்தி காவலன் அழுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடும் மந்த மாருதம் வனமுலை தடவந்து வலி செய்வதொழியாதே
8-5. தந்தை காலில்
திருமங்கையாழ்வார் · இரண்டாம் ஆயிரம்
Essence of this decad
தந்தையின் காலில் இருந்த விலங்கு அறும்படி தோன்றியவனைப் பின்தொடர்ந்து தன் சிந்தை சென்றுவிட்டதை ஆழ்வார் சொல்லும் பதிகம். "தமியேன் தன் சிந்தை போயிற்று" — தான் இங்கே நிற்க, மனம் மட்டும் அங்கே சென்றுவிட்டது. பிரிவின் நகைச்சுவையும் வலியும் ஒருசேர இதில் உண்டு.
பெரிய திருமொழி 8-5 - தந்தை காலில் (திருக்கண்ணபுரம் 5 - தலைவனைப் பிரிந்த தலைவி அந்திப்பொழுதில் தலைவன் வாராது தாழ்த்த, தென்றல் முதலியவற்றால் வருந்திக் கூறுதல்)
மாரி மாக்கடல் வளைவணற்கிளையவன் வரை புரை திருமார்பில் தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணை காணேன் ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும் தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன்று அறியேனே
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா பேயின் ஆருயிர் உண்டுடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ? தூய மாமதிக் கதிர் சுடத் துணை இல்லை இணைமுலை வேகின்றதால் ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே
கயங்கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண்சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறிகடல் நீர் தயங்கு வெண்திரைத் திவலை நுண்பனி எனும் தழல் முகந்து இளமுலை மேல் இயங்கு மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கெனப் பெறலாமே
ஏழு மாமரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் தோழி! நாம் இதற்கென் செய்தும்? துண இல்லை சுடர் படு முது நீரில் ஆழ ஆழ்கின்ற ஆவியை அடூவதோர் அந்தி வந்து அடைகின்றதே
முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட முழங்கழல் எரி அம்பின் வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்? எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடூங்கண் துயிலா கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியுமாறு அறியேனே
கலங்க மாக்கடல் கடைந்தடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம் மலங்க வெஞ்சமத்து அடூசரம் துரந்த எம் அடிகளும் வாரானால் இலங்கு வெங்கதிர் இளமதி அதனொடும் விடை மணி அடும் ஆயன் விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவதொன்று அறியேனே
முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால் ஒழுகு நுண்பனிக்கு ஒ௫டங்கிய பேடையை அடங்க அஞ்சிறை கோலி தழுவு நள்ளிருள் தனிமையின் கடியதோர் கொடுவினை அறியேனே
கனஞ்செய் மாமதிள் கணபுரத்தவனொடும் கனவினில் அவன் தந்த மனஞ்செய் இன்பம் வந்து உள்புக வெள்கி என் வளை நெக இருந்தேனை சினஞ்செய் மால்விடைச் சிறு மணி ஓசை என் சிந்தையைச் சிந்துவிக்கும் அனந்தல் அன்றிலின் அரிகுரல் பாவியேன் ஆவியை அடுூகின்றதே
வார்கொள் மென்முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரை செய்த கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார் ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே
அடிவரவு: தந்தை மாரி ஆயன் கயம் ஏழு முரியும் கலங்க முழுது கனஞ்செய் வார்கொள் தொண்டீர்